கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது செல்வி ஜெயலலிதா ஒவ்வொரு மேடையிலும் மறக்காமல் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி ஓட்டு கேட்டார் அது என்ன தெரியுமா? தன் கணவரை கொன்ற கட்சியினருடன் சோனியா கூட்டு வைத்து இருக்கிறார் அதனால் அவர் பதிபக்தி இல்லாதவர் என்று மேடைதோறும் முழங்கி வந்தார். தி.மு.க. புலி ஆதரவு கட்சி என்பது ஜெயலலிதாவின் டிரேட் மார்க் பிரச்சாரம் என்பது உலகப் பிரசித்தி. இதை எல்லாம் அடித்தட்டு மக்கள் வேண்டுமானால் மறந்து போய் இருக்கலாம் அவர்களுக்கு அன்றாடப் பிரச்சினைகளே ஆயிரம் இருக்கிறது ஆனால் டைம் பாஸுக்காக இணையத்தில் உலவிக் கொண்டு ஈமெயில்களை பார்வேர்டு செய்து கொண்டு இருக்கும் படித்த பாமரர்கள் மறந்துவிட்டிருக்க முடியாது. இன்று கூட்டத்தில் கலக்கவில்லை என்றால் நாளை கும்மிக்கு ஆள் இருக்காதே என்ற கவலை அவர்களுக்கு
இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த "பதிபக்தி" மேட்டரை கண்டு கொள்ளாதது மட்டுமல்லாமல் மேடைதோறும் கலைஞரை காய்ச்சி எடுக்கும் ஜெயலலிதா மறந்தும் கூட சோனியா பற்றி வாயே திறக்கவில்லை. இந்த தேர்தல் சூடு பிடிக்கும் முன்னரே காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி செய்தவர் ஜெயலலிதா. காங்கிரஸில் உள்ள சில கோஷ்டிகளும் இதை தான் விரும்பின. ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே கலைஞர் கூட்டணியில் இருப்பதால் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்சமயம் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சில நடவடிக்கைகளை செய்து வருகிறது. ராகுல் காந்தியின் பேச்சும் இதை உறுதி செய்கிறது. ஜெயலலிதா தரப்பில் இருந்தும் இதற்கு மறுப்பு இன்னும் வரவில்லை
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி போல் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்று ஒன்றும் இருக்கிறது அந்த கூட்டணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணியாக கூட இருக்கலாம் அதனால் எவனோ ஒருவன் தன் சுயநலனுக்காக கொளுத்திப் போட்டான் என்பதற்காக செம்மறி ஆட்டு கூட்டம் போல் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்கும் படித்த பாமரர்களை நினைத்தால் நகைப்பாக இருக்கிறது
Friday, May 08, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
adada,
appo ungalluku ippove aapu ready'a??
aiyo aiyo
Rahul Gandhi allavuku kooda arasiyal theriyallaiye unga thalaivarukku..
sorry for tying in English...
உண்மை தான் அனானி, கலைஞர் இன்னும் அண்ணா கால பாணியிலேயே அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார். இல்லை என்றால் ராமதாஸ் மாதிரி ஆட்கள் எல்லாம் வாலை ஆட்டிக் கொண்டு இருக்க முடியுமா
தன்னுடைய பாணியில் தான் அரசியல் செய்ய வேண்டுமென அண்ணா கலைஞரின் கனவில் வந்து சொல்லியிருப்பார்...அதை அவரும் கடைபிடிக்கிறார்
பார்ப்பனீயம் சங்கர சுப்புணியையும் மறந்து பூணூலைப் பிடித்துக் கொண்டு நடிகையை ஆதரிக்கிறது.
ஆனால் படித்த பதவி வெறி பிடித்த தமிழினம் த்மிழீழம் என்ற வெத்து வேட்டு அருமையான சங்கீதம் என்று செருப்பு தூக்க அலைகிறது.
ஏமாறாதே ஏமாற்றாதே என்பது இவர்களுக்காகத்தான் போல.
பாவமப்பா கலைஞர் பதவி சுகத்துக்காக தனது சொந்த மக்களை பகைத்துவிட்டு இன்று அரசனிடமும் போக முடியாது கணவனிடமும் போக முடியாது.
நீங்க பதிவுல சொல்றது நடக்குறதுக்கு வாய்ப்புகள் நெறைய இருக்கு. ஜெயை நம்பவே முடியாது. ஆனா இந்தக் கூட்டணி உண்டாகனும்னா அகில இந்திய அளவுல காங்கிரஸ் நெறைய ஜெயிக்கனும். ஜெ ஆதரவு இருந்தா திரும்ப ஆட்சீங்குற நெலமை வந்தா அணிகள் கண்டிப்பா மாறும். யார் கண்டா... அது திமுக-பாஜக கூட்டணியா மாறவும் வாய்ப்பிருக்கு.
ஆனா ஒன்னு... ஜெயை நம்பாதீங்க. அவருக்கு ஈழம் தேர்தல் சாப்பாடு.
//G.Ragavan said...
ஆனா ஒன்னு... ஜெயை நம்பாதீங்க. அவருக்கு ஈழம் தேர்தல் சாப்பாடு.
//
நன்றி ஜிரா. இதையே நாங்க சொன்னா ஒரு பய கேட்க மாட்டேன்குறாங்க. எல்லாம் கூட்டத்தோடு சேர்ந்து கோஷம் போட்டு பழக்கமாயிட்டானுக
Post a Comment