Saturday, May 16, 2009

கிங்மேக்கர் கலைஞர்



முதலில் வெற்றிக்கனியை கழகத்துக்கு உரித்தாக்கிய வாக்காளர் பெருமக்களுக்கும், களப்பணி ஆற்றிய லக்கி போன்ற தோழர்களுக்கும், தோழர் திருமா போன்ற கூட்டணி கட்சியினருக்கும் கழகம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்


தினப்படி மூன்று வேளை சாப்பிட்டார்களோ இல்லையோ கலைஞரை தூற்றி மூன்று வேளை பதிவு எழுதினார்கள், அவர்கள் பிரயோகப்படுத்திய வார்த்தைகள் எல்லாம் அச்சிட முடியாதவை. *ட்டிக் கதைகளையே தணிக்கை செய்த தமிழ்மணம் இவர்களின் வார்த்தைகளை கண்டுகொள்ளாதது மட்டுமல்லாமல் கழகம் தோற்பதற்கு இந்த வாரம் வரை தனது நட்சத்திரங்களாக கழக எதிர்ப்பாளர்களை களமிறக்கி அழகு பார்த்தது. நடுநிலையாக இருக்க வேண்டிய தமிழ்மணம் கட்சி பத்திரிக்கை போல் ஒரு கட்சி தளமானது, அதற்கு மாற்றம்நம்பி என்ற முகமூடி வேறு. அவர்களுக்கு மக்கள் கொடுத்தது மரண அடி. வசைபாடிய வாயெல்லாம் ஓய்ந்து போய் இருக்கும் அடுத்த தேர்தல் வரைக்கும் மூடிகிட்டு இருங்கள் அன்பின் சொந்தங்களே. ஒரு பத்து பேர் சேர்ந்து கொண்டு ஏதோ இணையமே தங்கள் கைகளில் இருப்பது போல் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஜால்ரா தட்டுவதற்கு ஒரு செம்மறி ஆட்டு கூட்டம் வேறு சொந்த அறிவை எல்லாம் எங்கே சென்று அடகு வைத்தார்களோ

இந்த வெற்றி பணத்தினால் கிடைத்த வெற்றி என்று மெத்தப் படித்த மேதாவிகள் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இருக்கட்டும், போன மாதம் வரை நம் கூட்டணியில் இருந்து எல்லாத்தையும் அனுபவித்துவிட்டு போன வாரம் கூட்டணி மாறி நமக்கு எதிராக ஓட்டு கேட்டார்களே, இவர்களை மாதிரி குழி பறிப்பவர்கள் எல்லாம் வேறு எப்படி பேசுவார்கள் அவர்கள் புத்திக்கு ஏற்ற மாதிரி தானே பேசுவார்கள். இவர்கள் கேட்ட மாதிரியே மக்கள் அவர்களுக்கு சவுக்கடி கொடுத்து இருக்கிறார்கள். நாளை கூட்டணி என்று மீண்டும் நம்மிடமே வருவார்கள் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

39 comments:

said...

நல்ல பதிவு உடன்பிறப்பு. கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வெற்றியை அலசுவோம். அதுவரை அழுமூஞ்சிகள் முகாரி பாடட்டும்.

Anonymous said...

//நடுநிலையாக இருக்க வேண்டிய தமிழ்மணம் கட்சி பத்திரிக்கை போல் ஒரு கட்சி தளமானது,//

பின்ன என்ன மயித்துக்கு இருக்கீக, போக வேண்டியது தானே தமிழ்மணத்தை விட்டு

said...

என் உடன்பிறப்பை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அத்தனை குபீர் ஆசாமிகாளையும் தாண்டி அழகாக நம் பதிவுகளை பதிவு செய்து வெற்றியை பெற்று தந்த எல்லா உடன்பிறப்பு பதிவர்களுக்கும் என் நன்றிகள்!

said...

//பின்ன என்ன மயித்துக்கு இருக்கீக, போக வேண்டியது தானே தமிழ்மணத்தை விட்டு//

ஹஹ்ஹ்ஹா, அனானி அண்ணே!! நாங்கள் எல்லாம் சொந்தமா போட்டி வலை திரட்டி நடத்தி அதை தமிழ்மணத்திலேயே விளம்பரம் செய்யுற சீப்பான ஆட்கள் கிடையாது. தோழர்களுக்கு எப்போதும் தோள் கொடுத்து இருப்போம். தமிழ்மணத்துடன் எப்போதுமே தோழமையையே விரும்புகிறோம் ஆனால் தமிழ்மணத்தின் பெயரை கெடுப்பதற்கென்றே சில புல்லுருவிகள் தமிழ்மணத்தில் ஊடுருவி இருக்கிறார்கள், அவர்களை தோலுரிப்பது எம் கடமை. இதுவும் தமிழ்மணத்துக்கு நாங்கள் செய்யும் உதவியே அன்றி வேறில்லை

said...

// Delete
Blogger அபி அப்பா said...

என் உடன்பிறப்பை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அத்தனை குபீர் ஆசாமிகாளையும் தாண்டி அழகாக நம் பதிவுகளை பதிவு செய்து வெற்றியை பெற்று தந்த எல்லா உடன்பிறப்பு பதிவர்களுக்கும் என் நன்றிகள்!//

நன்றி அபிஅப்பா, அங்க கொண்டாட்டம் எல்லாம் எப்படி இருக்கு, அமர்க்களப்படுத்திருவீங்களே

said...

//Blogger லக்கிலுக் said...

நல்ல பதிவு உடன்பிறப்பு. கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வெற்றியை அலசுவோம். அதுவரை அழுமூஞ்சிகள் முகாரி பாடட்டும்.//

உங்கள் வருகைக்கு நன்றி லக்கி, களப்பணி ஆற்றிய தோழர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை

said...

போருக்கு சென்று வெற்றியுடன் திரும்பும் வீரர்களை வரவேற்கும் கோலாகல அரண்மனையின் கொண்டாட்டத்தில் இருக்கிறது அறிவாலயம்.

இதோ தலைவரை காண கிளம்பிவிட்டோம்.

said...

எத்தனை ஏச்சுப்பேச்சு??? இப்ப யாராவது வருவாய்ங்கன்னு பாக்குறேன்...ஒரு பயபுள்ளையும் காணோம் :))

said...

//எம்.எம்.அப்துல்லா said...

எத்தனை ஏச்சுப்பேச்சு??? இப்ப யாராவது வருவாய்ங்கன்னு பாக்குறேன்...ஒரு பயபுள்ளையும் காணோம் :))
//

ஒருவேளை அம்மாவை வணங்குவதற்கு போயிருப்பாங்களோ

said...

// லக்கிலுக் said...

போருக்கு சென்று வெற்றியுடன் திரும்பும் வீரர்களை வரவேற்கும் கோலாகல அரண்மனையின் கொண்டாட்டத்தில் இருக்கிறது அறிவாலயம்.

இதோ தலைவரை காண கிளம்பிவிட்டோம்//

ஆஹா, சூப்பர்

Anonymous said...

உடன்பிறப்பே,

நீ தலைவரை காண சென்றாலும் அறிவாலய வாசலில்தான் நாய்களை போல நிறுத்தி வைக்க படுவாய்...

இனிமேலும் நீ டீயை மட்டுமே குடித்து கொண்டிருக்க போகிறாய்..உன் தலைவனோ இன்னும் நானூறு தலைமுறைக்கு சொத்து சேர்க்க போகிறான்..

இது உனக்கு மட்டுமல்ல...ரத்தத்தின் ரத்தங்களுக்கும், பாமக, மதிமுக, காங் போன்ற கட்சிகளுக்கும்தான்

said...

//Anonymous said...

உடன்பிறப்பே,

நீ தலைவரை காண சென்றாலும் அறிவாலய வாசலில்தான் நாய்களை போல நிறுத்தி வைக்க படுவாய்...

இனிமேலும் நீ டீயை மட்டுமே குடித்து கொண்டிருக்க போகிறாய்..உன் தலைவனோ இன்னும் நானூறு தலைமுறைக்கு சொத்து சேர்க்க போகிறான்..

இது உனக்கு மட்டுமல்ல...ரத்தத்தின் ரத்தங்களுக்கும், பாமக, மதிமுக, காங் போன்ற கட்சிகளுக்கும்தான்
//

நம்ம லக்கியோட போங்க, அறிவாலயம் உள்ளே சென்று கலைஞரை கண்டிப்பாக பார்த்துவிட்டு வரலாம்

said...

//இது உனக்கு மட்டுமல்ல...ரத்தத்தின் ரத்தங்களுக்கும், பாமக, மதிமுக, காங் போன்ற கட்சிகளுக்கும்தான்
//

நல்லது, ஆனா பாருங்க ஏதோ நாம் எல்லாம் முட்டள்கள் போலவும் மற்ற கட்சிக்காரன் எல்லாம் அறிவாளி போலவும் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்

Anonymous said...

நல்லா இருங்க ரத்தத்தின் ரத்தங்களே. இலங்கையில் தமிழரின் ரத்தம் குடிப்பதற்கு தொடர்ந்தும் உறுதுணையாக இருக்க வாழ்த்துக்கள்.

said...

//Anonymous said...

நல்லா இருங்க ரத்தத்தின் ரத்தங்களே. இலங்கையில் தமிழரின் ரத்தம் குடிப்பதற்கு தொடர்ந்தும் உறுதுணையாக இருக்க வாழ்த்துக்கள்.
//

ஆம், அவர்கள் வந்து இருந்தால் அதை தான் செய்து இருப்பார்கள். ஈழத் தமிழர் மீது எங்களுக்கு அக்கறை இல்லாமல் இல்லை அதற்காக கலைஞரை வசைபாடும் போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தேசியத் தலைவரை விமர்சித்தால் உங்களுக்கு எப்படி கோபம் வருமோ அது மாதிரி தான் எங்களுக்கும்

said...

மகிழ்ச்சியில் கை கால் புரியல... மக்களின் உணர்வுக்கு கிடைத்த வெற்றி!... :))

said...

//தமிழ் பிரியன் said...

மகிழ்ச்சியில் கை கால் புரியல... மக்களின் உணர்வுக்கு கிடைத்த வெற்றி!... :))
//

உண்மைதான் தமிழ் பிரியன், வருகைக்கு மிக்க நன்றி

said...

திமுக கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள், மக்களுக்கு நல்ல ஆட்சி தர வேண்டும் இவர்கள், இல்லாவிடில் அடுத்த தேர்தலில் பதவி காலி.
வெற்றிக்கு உழைத்திட்ட அத்தனை டோன்றகள், ஒன்றிய செயலர், வட்ட பிரதிநிதி, மாநில மந்திரிமார்கள் அனைவர்க்கும் நன்றிகள்.

குப்பன்_யாஹூ

said...

மக்களின் உணர்வுக்கு கிடைத்த வெற்றி!... :))

said...

உடன்பிறப்புக்களே, காலையிலிருந்து என் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது...! வெற்றிக்களிப்பின் உச்சியில் இருக்கும் அனைத்து கழக உடன்பிறப்புக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து, என் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் கழகத்தின் ஒரு உடன்பிறப்பாக கலைஞரின் உணர்வாளனாக பெருமையடைகிறேன்....! இது சாத்தியமானது உங்களால் தான் உடன்பிறப்புக்களே ...!

எதிரணியை சேர்ந்தவர்களின் அனைத்து பிரச்சாரங்களுக்கும், ஈடு கொடுத்து செயலாற்றி வெற்றிக்கனியை பறித்த அனைத்து கழக வெற்றி வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...!

இந்த தேர்தல் முடிவில் அரசியல் வியாபாரியின் கட்சி துடைத்து தூக்கி எறியப்பட்டு இருப்பது மகிழ்ச்சிகரமான செய்தியாகும்...!

கலைஞர் - The King and the Maker of Kings :-)

said...

வாழ்த்துக்கள் பல!

அண்ணன் திருமா வெற்றியை ஈழ் தமிழ் மக்களுக்கும் தமிழன தலைவர் அரசியல் ஆசான் கலைஞரருக்கு காணிக்கை ஆக்குவோம்....

மயிலாடுதுறை சிவா....

Anonymous said...

// நம்ம லக்கியோட போங்க, அறிவாலயம் உள்ளே சென்று கலைஞரை கண்டிப்பாக பார்த்துவிட்டு வரலாம் //

ஹி..ஹி..ஹி. இதுதான் மிகபெரிய காமெடி...


தில் இருந்தா அவரை போய் தலைவர் பக்கத்துல இருந்து ஒரு போட்டோ எடுத்து போட சொல்லுங்க பார்ப்போம்...

முடியவே..முடியாது

அதுதான் உண்மை திமுக தொண்டரகளுக்கு அறிவாலயத்தில் கிடைக்கும் மரியாதை

said...

//Anonymous said...

// நம்ம லக்கியோட போங்க, அறிவாலயம் உள்ளே சென்று கலைஞரை கண்டிப்பாக பார்த்துவிட்டு வரலாம் //

ஹி..ஹி..ஹி. இதுதான் மிகபெரிய காமெடி...

தில் இருந்தா அவரை போய் தலைவர் பக்கத்துல இருந்து ஒரு போட்டோ எடுத்து போட சொல்லுங்க பார்ப்போம்...

முடியவே..முடியாது

அதுதான் உண்மை திமுக தொண்டரகளுக்கு அறிவாலயத்தில் கிடைக்கும் மரியாதை
//

முதலில் வாசலில் நிற்போம் என்றீர்கள் இப்போது போட்டோ போட சொல்கிறீர்கள். அடுத்து என்ன கேட்பீரோ

said...

வாழ்த்துகள் உடன்பிறப்பு.
வலையுலக அறிவியல் விஞ்ஞானிகள்,அரசியல் அஞ்ஞானிகளாய் ஆனது ஒரு பெரிய சோகம்.அய்யாவும்,புயலுமாய் சேர்ந்து அந்தசோகத்தை ஈடுகட்டிவிட்டார்கள்.

said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

மக்களுக்கு ஜெயலலிதாவின் மீதுள்ள அச்சம் போகவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆகையால்தான் என்னைப் போன்றவர்கள் திமுகவை எதிர்த்தாலும் அது அதிமுக ஆதரவாக மாறவில்லை. தனி ஈழம் என்று ஜெயலலிதா சொல்லும் பொழுது கேட்க நன்றாக இருந்தாலும்... ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறை கேட்பவர்களுக்கு ஒரு சந்தேகத்தையே கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால்... ஸ்டாலின் முதல்வராவதற்கு இது மிகச்சரியான தருணம்.

said...

//G.Ragavan said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

மக்களுக்கு ஜெயலலிதாவின் மீதுள்ள அச்சம் போகவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆகையால்தான் என்னைப் போன்றவர்கள் திமுகவை எதிர்த்தாலும் அது அதிமுக ஆதரவாக மாறவில்லை//

வருகைக்கு நன்றி ஜிரா, அம்மாவின் நம்பகத்தன்மை அப்படிப்பட்டது

//தனி ஈழம் என்று ஜெயலலிதா சொல்லும் பொழுது கேட்க நன்றாக இருந்தாலும்... ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறை கேட்பவர்களுக்கு ஒரு சந்தேகத்தையே கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்//

சோ ராமசாமி கடைசிவரை ஜெவின் ஈழ முழக்கத்தை தேர்தல் நாடகம் என்று சொல்லி வந்ததை யாரும் கவனித்ததாக தெரியவில்லை

// என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால்... ஸ்டாலின் முதல்வராவதற்கு இது மிகச்சரியான தருணம்//

உங்கள் கூற்று உண்மையாக இருக்கலாம்

said...

// சாலிசம்பர் said...

வாழ்த்துகள் உடன்பிறப்பு.
வலையுலக அறிவியல் விஞ்ஞானிகள்,அரசியல் அஞ்ஞானிகளாய் ஆனது ஒரு பெரிய சோகம்.அய்யாவும்,புயலுமாய் சேர்ந்து அந்தசோகத்தை ஈடுகட்டிவிட்டார்கள்//

வாங்க சாலிசம்பர், புரட்சி தலைவியுடன் சேர்ந்து எங்கே இணைய புரட்சி ஏதும் ஏற்படுத்திவிடுவார்களோ என்று நான் கூட கொஞ்சம் கலக்கம் அடைந்துவிட்டேன்

Anonymous said...

ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்

Anonymous said...

சூரியனை பார்த்து நாய்கள் குரைத்தால் சூரியனுக்கு ஒன்றும் ஆக்கப்போவதில்லை பாவம் நாய்கள்

said...

வாக்கு சாவடியில் சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. எத்தனையோ எதிர் நிலைகளுக்கும் உடல் நிலைகளுக்கும் மத்தியில் நிதானமாக முடிவெடுத்து கூட்டணி கட்சியினை மத்தியில் முடி சூட வைத்திருக்கும் கலைஞர் அவர்களுக்கு இந்த மகத்தான வெற்றியை தமிழக மக்கள் காணிக்கையாக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள்

said...

உங்கள் வெற்றியில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும் (அதற்காக அதிமுக ஆதரவு இல்லை) வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்

said...

//கிரி said...

உங்கள் வெற்றியில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும் (அதற்காக அதிமுக ஆதரவு இல்லை) வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்
//

நல்லது தோழர் கிரி அவர்களே. எதிரியானாலும் வாழ்த்துவது தான் தமிழர் மரபு. இத்தனை நாள் கலைஞரை அவர்கள் கும்மி இருக்காவிட்டால் எங்கள் பதிவும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் பதிவாகவே அமைந்து இருக்கும். இப்படி ஆனது துரதிர்ஷ்டமே

Anonymous said...

I have voted for kalaignar except this election, but this time i lost hope on him, even i can digest the victory of dmk but not the cong.

Still If you have hopes on him ask him to do good for all tamils.

Anonymous said...

I have posted 2 comments so far.. you approved only one.
is there any reason for you to not to approve my comment. Please be frank in accepting the comments which is true from my heart. I really loved karananithi from my childhood because of his tamil literature.. i really changed my mind after the happenings in srilanka, when the people supported for kk, i accept them but have to accept the criticism from the citizens of TN. I hated JJ and her dances .. even if jj might have come with good she will not do anything.. she will dance as per cho.. etcs.. but what will happen to my tamil community.. hope god will do good for them.

said...

அனானி தலைவா! ஏதோ தெரியாமல் தவறு நடந்து இருக்கும், ஆரோக்கியமான எந்த பின்னூட்டமும் மட்டுறுத்தபடுவதில்லை என்பது இங்கு வந்துள்ள பின்னூட்டங்களை பார்த்தாலே புரியும் உங்களுக்கு. இன்னொரு முறை பின்னூட்டம் போடுங்க வெளியிட்டுறலாம்

said...

உடன் பிறப்புக்கு,
வாழ்த்துகள்...
ஈழ விவகாரத்தில் கலைஞரை விமர்சித்தவர்களுள் நானுமொருவன். அதுக்கு காரணம் என்ன அவருக்கும் எங்களுக்கும் என்ன சொத்துத் தகராறா?? இல்லை பங்காளிச் சண்டையா??
நாம் நம்பியிருந்தவரே ஒன்றும் எங்களுக்காக செய்யவில்லை என்ற ஏமாற்றம்+வேதனை. உங்களுக்கும் அது தெரியும் என்றே நம்புகிறேன்.
உங்களுக்கும் ஒரு முடிவு தெரிந்துவிட்டது..சந்தோசமாக.......அங்கே எங்கள் பூமியிலும் ஒரு தற்காலிக முடிவை இராணுவம் அண்மித்துள்ளதாக செய்திகள் வெளியாகுகின்றன...
ஒன்று மட்டும் நிச்சயம்...THE WAR IS NOT GONNA BE END. IT IS MOVING TO ANOTHER VERSION.
---------->>>
இந்த தேர்தலில்...
ராமதாஸை சரியாகவே மக்கள் இனங்கண்டுள்ளார்கள். சந்தர்ப்பவாதம் அவருக்கு சரியான பரிசையே கொடுத்துள்ளது.
அப்புறம் கம்யூனிஸ்ட்கள் சுத்த வெத்துவேட்டுகள்..எப்போதுமே சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கத் தெரியாதவர்கள். நிலையற்றவர்கள்.
அதிமுக வின் திடீர் ஈழ பாசம் பெரியளவில் கைகொடுக்கவில்லை.
பெரியளவில் அவரை அந்த விடயத்தில் யாரும் நம்பத்தயாராகவில்லை. அத்துடன் திமுக அரசின் குறைகளை சரியான விதத்தில் அவர்கள் மக்களிடம் கொண்டுசேர்க்கவில்லை என்பதுடன் தேதிமுக அதிமுகவின் வாக்குகளை சுருட்டியதும் தான் காரணம்.
காங்கிரஸ் கட்சி திமுகவால் தான் ஜெயித்தது...
உடன்பிறப்புகளே தாராளமாக உங்கள் காலரை உயர்த்திக் கொள்ளலாம். காரணம் மக்களுக்கு அவர்கள் மேல் உள்ள வெறுப்பு.
காங்கிரஸ் மேல் மட்ட தலைவர்களை திமுகவால் கூட காப்பாற்ற முடியாமல் போனமை இதையே தெளிவுபடுத்துகிறது.

வைகோ பற்றி...வேதனையான விடயம்...காமராஜரையே தோற்கடித்த தொகுதியாயிற்றே... உடன்பிறப்புகள் இந்த தொகுதியில் தானே முழுமூச்சில் இறங்கி காங்கிரசை ஜெயிக்க வைத்தார்கள்.

வைகோவின் தோல்வியை யாரும் ஈழஆதரவுக்கு கிடைத்த பரிசாக கிண்டலடிக்க வேண்டாம்..
உண்மை ஊரறியும்.

வேறென்ன... உடன்பிறப்புகளே மீண்டும் வாழ்த்துகள்.

said...

வருகைக்கு நன்றி பாரதி.சு

தேர்தலுக்கு சில மாதங்கள் முன் வரை ஈழம் விஷயத்தில் எனக்கும் கலைஞர் மீது அதிருப்தி உண்டு ஆனால் தொடர்ந்து அவர் மீது தொடுக்கப்பட்ட அநாகரீகமான தனிமனித தாக்குதல்கள் என்னைப் போன்றவர்களை மீண்டும் அவரிடமே அழைத்து சென்றுவிட்டது

Anonymous said...

//அனானி தலைவா! ஏதோ தெரியாமல் தவறு நடந்து இருக்கும், ஆரோக்கியமான எந்த பின்னூட்டமும் மட்டுறுத்தபடுவதில்லை என்பது இங்கு வந்துள்ள பின்னூட்டங்களை பார்த்தாலே புரியும் உங்களுக்கு. இன்னொரு முறை பின்னூட்டம் போடுங்க வெளியிட்டுறலாம்//

நானும் ஒரு பின்னூட்டம் போட்டேன். வரவில்லை. அதனால் மீண்டும் போடுகிறேன்.

//தேசியத் தலைவரை விமர்சித்தால் உங்களுக்கு எப்படி கோபம் வருமோ அது மாதிரி தான் எங்களுக்கும்//

தேசியத் தலைவராக எவரையும் நான் சொன்னேனா? அல்லது அப்படி நீங்கள் சொல்லும் நபர்மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை என்று உங்களுக்குத் தெரியுமா? சரி, அவர்மேல் நீங்கள் விமர்சனம் வைத்தால் எனக்கு கோபம் வருமென்று, நீங்களாகவே எப்படி முடிவு எடுத்தீர்கள். கொன்று குவிக்கப்படும் மக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றார்களே என்ற வேதனையிலும், வெறுப்பிலும் சொன்னால், உடனே புலி ஆதரவாளராகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்து விடுவீர்களா? அல்லது புலி ஆதரவாளராகவே இருந்திருந்தாலும், புலிகள் தவறு செய்தாலும் அதை விமர்சிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? தப்பை யார் செய்தாலும் தப்புத்தானே?

கலைஞருக்கு உண்மையிலேயே வன்னியில் நடப்பது எதுவுமே தெரியாதா? தொடர்ந்து அங்கே தீவிரமான தாக்குதல் நடந்து கொண்டிருக்க, இவர் இங்கே ‘ஈழ மக்களுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்து விட்டோம்' என்றும், ‘அது மழை விட்டும், தூவானம் விடவில்லை' என்று நகைச்சுவையாக்குவதும் எந்த விதத்தில் நியாயம்? ஜெயலலிதா என்னவோ தன்னுடைய முந்தானையில் தமிழீழத்தை முடிந்து வைத்திருப்பதுபோல் அறிக்கை விடுவதும், இவர் உடனே வாக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் எதையாவது உளறுவதும், உண்மையில் ஈழ மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதுதான் என்பதை உணரவே மாட்டீர்களா? கலைஞர் செய்த ஒவ்வொரு செயலும் நாடகமில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? ஜெயலலிதாபற்றி விமர்சிக்க எதுவுமில்லை, ஏனென்றால் அவரைப் பற்றி எந்த நல்ல அபிப்பிராயமும் இருந்ததில்லை. ஆனால் கலைஞர்பற்றி நல்ல அபிப்பிராயமே இருந்தது, அப்படி நம்பியிருந்தவர் இப்படி நடந்து கொள்வது பொறுக்க முடியவில்லை. அவர் நினைத்திருந்தால், உண்மையாக எதுவும் செய்ய முயற்சித்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யாமல், இப்படி வெற்று வேலைகள் காட்டியது உண்மையிலேயே வருத்தத்தை தந்தது. இப்படியான வேலைகளைச் செய்யாமல், அறிக்கைகள் எதுவும் கொடுக்காமல் இருந்தாலே போதும் என்றுதான் தோன்றியது. தேர்தல் வெற்றிக்குப் பின்னராவது பேசாமல் இருக்க மாட்டாரா என்றுதான் இருந்தது. ஆனால் இப்பவும் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியிருக்கிறாராமே?, உண்மையைச் சொன்னால் எரிச்சலாக வருகிறது. எப்போதுதான் இந்த விளையாட்டுக்களை நிறுத்துவார்?

//
ஆம், அவர்கள் வந்து இருந்தால் அதை தான் செய்து இருப்பார்கள்.//

எவர்கள் வந்து எதைச் செய்தால் என்ன? கலைஞர் மட்டும் எதை செய்தார். தொடர்ந்து வன்னியில் கொத்து கொத்தாக மக்கள் மடிவதற்கு உறுதிணையாகவோ (ஏன் காரணமாகவோ) இருக்கும் காங்கிரசுக்கு தன் முழு ஆதரவைக் காட்டி, அந்த மக்களின் சாவில், இரத்த ஆறில் தன் பங்களிப்பையும் செய்திருக்கிறார்.

//ஈழத் தமிழர் மீது எங்களுக்கு அக்கறை இல்லாமல் இல்லை//

உங்களுக்கும், உங்கள் தலைவருக்கும் ஈழ மக்களில் இருக்கும் அக்கறையைத்தான் அங்கே நடைபெற்று வரும் செயல்கள் தெளிவாக காட்டுகின்றதே. இதற்கு மேலும் சொல்லிக் காட்ட வேண்டுமா நீங்கள்?

இறுதியில் ஒன்றே ஒன்று சொல்லி விடுகின்றேன். நான் இத்தனையும் எழுதுவதெல்லாம் கொடுமைப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை எண்ணி மட்டுமே. மனிதம்பற்றிய சினதனையில் மட்டுமே. வேறு எதற்காகவும், யாருக்காகவும் இல்லை. மேலேயிருந்து கொண்டு போடப்படும்போது எப்படி இருக்கும் என்பதை அனுபவித்துவிட்டு வந்த ஒருவராய் இதனை எழுதுகின்றேன். அப்போது விழுந்த குண்டுகளுக்கே தாங்க முடியாமல் இருந்தால், தற்ப்போது கொத்துக் கொத்தாய் குண்டுகள் விழும்போது எப்படி இருக்குமென்பது கற்பனையில்கூட பார்க்க முடியவில்லை. அனுபவித எனக்கே அப்படி என்றால், உங்களுக்கெல்லாம் (உங்களில், உங்கள் தலைவர் கலைஞரும் அடங்குகிறார்) அதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போவதில் ஆச்சரியமில்லை. ஆனால் புரிந்து கொள்ளாமையால் அதைப்பற்றி அக்கறையில்லாமல் இருந்தால் பரவாயில்லை. உங்கள் தலைவரோ, அந்த நிலையை வைத்து, தனக்கும், தனது கட்சிக்கும் ஆதாயம் தேடுகின்றாரே. இறந்துபடும் மக்களின் எண்ணிக்கையிலா இதைச் செய்ய வேண்டும்? அதுதான் தாங்க முடியாமல் மன உளைச்சலில் எழுதுகின்றேன்.

இத்தனையும் எழுதி முடித்த பின்னரும், நீங்கள் இதை வெளியிடுவீர்களா? ஏன் நீங்களே முழுமையாக படித்து புரின்ஹு கொள்வீர்களா என்ற சந்தேகமும் தோன்றவே செய்கின்றது.

முடிந்தால் ஈழம்பற்றி கலைஞரை எதுவும் பேசாமலாவது இருக்கச் சொல்லுங்கள். அவர் சொல்லி எதுவும் நடக்கப் போவதில்லை என்று தெரிந்து கொண்டும் எதற்காக சொல்கின்றார். அதுதான் தேர்தலில் வெண்ராகி விட்டதே. இனியாவது எங்களை வேதனைப் படுத்தாமல் இருக்கச் சொல்லுங்கள்.

ஈழத்தவன்.

said...

ஈழத்தவரே! உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன், நானும் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, வார்த்தை வன்முறைகளில் ஈடுபட்டவர்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதே என் நிலை