தமிழ்விக்கிபீடியா குறித்த வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்தது அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்பில் ஒரு வலையுலக பிரபலம் எழுதிய இடுகையை வாசிக்க நேர்ந்தது. இந்த பிரபலம் தான் விக்கிபீடியாவை ஆதரிப்பது இல்லை என தெரிவித்து இருக்கிறார். இதில் ஒன்றும் விஷயம் இல்லை ஒரு விஷயம் ஒருவருக்கு பிடித்து இருப்பதும் பிடிக்காமல் போவதும் அவரவர் விருப்பம். ஆனால் தான் விக்கிபீடியாவை ஆதரிக்காததற்கு காரணமாக அவர் சொன்னது தான் மிகப்பெரிய நகைச்சுவை
விக்கிபீடியா ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாம். அதனால் தான் இவர் அதை ஆதரிப்பது இல்லையாம். அடங்கொன்னியா, போன மாதம் வரைக்கும் அதாவது தேர்தல் முடியும் வரைக்கும் வலை உலகை இவர்கள் ஆக்கிரமித்து கொண்டு இவர்கள் போட்ட ஆட்டம் அவ்வளவு எளிதில் மறந்துவிடுமா. தாங்கள் கூட்டம் சேர்த்தால் அது எணைய புரட்சியாம் அதுவே பிறர் கூட்டம் சேர்த்தால் ஆக்கிரமிப்பாம்
மேலும் விக்கிபீடியாவில் அன்புமணி ராமதாஸ் பற்றி அவதூறாக எழுதி இருக்கிறார்களாம். அடங்கொய்யால, கலைஞர் பற்றி நீங்கள் எழுதாத அவதூறா. சின்ன ஐயா பற்றி எழுதினால் சினம் சீறிக் கொண்டு வருகிறதோ. அதுவே கலைஞர் பற்றி எழுதினால் கல்கண்டாக இனிக்கிறதோ. இவர் அன்புமணி பற்றிய அவதூறை திருத்தினாராம் அது அடுத்த நாள் காணாமல் போய்விட்டதாம். விக்கிபீடியாவில் திருத்தம் செய்தால் என்ன திருத்தம் செய்யப்பட்டது என்பதை பார்க்கும் வசதி இருக்கிறது. அவர் சொன்ன திருத்தம் அங்கு காணப்படவில்லை என்று ஒருவர் அவருக்கு பின்னூட்டம் இட்டிருக்கிறார்
தன் வாதத்துக்கு வசதியாக டோண்டு ராகவன் போன்றோர் தங்கள் வலைப்பதிவில் பக்க சார்பாக எழுதிகிறார்களாம் அதனால் அதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறதாம். பக்க சார்பு பற்றி இவர் எழுதுவதை விட வேறு என்ன பெரிய நகைச்சுவை இருக்க முடியும். டோண்டுவை உதவிக்கு அழைத்ததன் முலம் தானும் தன் வலைப்பதிவில் சொந்த விருப்பு வெறுப்பை தான் எழுதுகிறேன் அதனால் தன்னால் டோண்டுவை புரிந்து கொள்ள முடிவதாக சொல்லாமல் சொல்கிறார்
விக்கிபீடியா கூட்டம் நடந்த இடம் வேறு இவருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பிவிட்டுள்ளது. கறுப்பு சிவப்பில் பூணூல் ஊடுறுவிவிட்டதாக அரற்றிக் கொள்கிறார். அவர் அளிக்கும் உவமையை பார்த்தால் அ.தி.மு.க. கட்சிக் கொடிக்கான விளக்கத்தை கொடுப்பதாக தெரிகிறது. இது தேர்தல் நேரத்தில் கூட்டணி வைக்கும் போதும் அ.தி.மு.க.வுக்கு வாக்கு கேட்கும் போதும் தெரியவில்லையோ. இதற்கு மேலும் தொடர்ந்து எழுதினால் பார்ப்பன அடிவருடி என்ற அரிய பட்டத்தை நமக்கு இலவசமாக அளித்துவிடுவார் அந்த அன்பு நண்பர்
Monday, June 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
உடன்பிறப்பு அண்ணேன், ஆறு மாசம் முன்னாடி வரைக்கும் எல்லாம் சேர்ந்து தான் இருந்தீங்க ! ஞாபகம் வச்சிக்கோங்க.
விக்கிபீடியால இருப்பது ஒரு செய்தி. மக்கள் தங்களோட reference க்கு பயன்படுத்தவது. அதுல இருப்பது ஒருத்தரோட கருத்தா இருக்க கூடாது. அதே சமயம், ப்ளாக்ல எழுதறது ஒவ்வொருத்தரோட கருத்து. அதுல நாம இப்ப என்ன நினைக்கறமோ அத எழுதலாம் ! ஒரு வருஷம் முன்னாடி ராமதாஸ் சூப்பர். அப்புறம் அவரு மற்றும் அவரோட கட்சி எல்லாம் தண்டம். அப்பப்ப என்ன தோணுதோ அதை எழுதலாம்.
இது மட்டும் தான் சொல்லறேன். அத தவிர அவரு சொல்லி இருக்கறது எல்லாம் ஒன்னும் சரியான வாதமா தெரியல. ஆனா விக்கிபீடியா தமிழ் படிச்சேன். ரொம்ப கஷ்டமான நடைல தான் இருக்கு. அதை தவிர ரவிஷங்கரோட committment எல்லாம் கேள்வியே கேக்கமுடியாதுன்னு தான் என்னோட கருத்து.
அவர் ஆங்கில விக்கிப்பீடியாவில் சின்ன மருத்துவர் பற்றி எழுதியதை தூக்கிவிட்டார்கள் என்பதற்காக தமிழ் விக்கிப்பீடியா தான் அப்படி என்று எழுதி, அத்தவறை தெரிந்த பின்பு அதனால என்ன எல்லா விக்கிப்பீடியாவும் ஒன்னு தான் நீங்க பதில் சொல்லுங்க என்கிறார். என்னத்த சொல்வது.
தமிழில் சின்ன மருத்துவர், பெரிய மருத்துவர், காடுவெட்டி குரு, ஜி.கே. மணி பற்றி தவி-யில் எழுதினால் எழுதினா பரவாயில்லை. அல்லது சிங்கப்பூரை பற்றியாவது இன்னும் விரிவாக எழுதலாம், அதை விட்டுவிட்டு ஆதாரம் இல்லாத அவதூறுகளை தவி மீது சுமத்துவதின் நோக்கம் புரியவில்லை.
பலருக்கு விக்கிப்பீடியா என்பது அவர்களும் (எல்லோரும்) பங்களிக்கக்கூடியது என்பது புரியவில்லை போலும், புரியவில்லை என்றால் புரிவது போல் அவர்கள் அக்கட்டுரையில் திருத்தம் செய்ய வேண்டியது தான்.
//குறும்பன் said...
அதனால என்ன எல்லா விக்கிப்பீடியாவும் ஒன்னு தான் நீங்க பதில் சொல்லுங்க என்கிறார்//
அவர் இதைவிட பல பெரிய காமெடிகள் எல்லாம் பண்ணி இருக்கிறார். இதெல்லாம் அவருக்கு சப்பை மேட்டர்
//ஆனா விக்கிபீடியா தமிழ் படிச்சேன். ரொம்ப கஷ்டமான நடைல தான் இருக்கு.//
இந்தக் குறையை நாங்களும் உணர்கிறோம். இன்னும் நிறைய பேர் பங்களித்து உரை திருத்தி கட்டுரைகளை எளிமைப்படுத்த உதவினால் நன்றாக இருக்கும்.
இணையத்தில் இந்த இணையதளம் பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன. அங்கேயும் நிறைய முரண்பாடுகளான சர்ச்சைகள் தெனபடுகின்றன.
Post a Comment