Wednesday, June 03, 2009

ஆயிரம் பிறைகண்ட அகன்ற வானமே!


ஆயிரம் பிறைகண்ட அகன்ற வானமே!
காது கொடுத்துக் கேள் தம்பி என்றன்
கருணாநிதி எனும் அரிய கழகத்தம்பி!
ஏதுமறியாத்தமிழர் தூய வாழ்வை
எனக்குப்பின் சீர்படுத்தும் மறவன் நீதான்
என்று அறிஞர் அண்ணா எழுதிவைத்த உயிலைச்
சட்ட வடிவமாக்கிய தானைத் தலைவா!

சாதனையால் களம் அமைத்து
சரித்திரத்தை வடிவமைத்து
எழுத்தால் அணிவகுத்து
உடன்பிறப்புக்களை
இதயத்தால் ஒருங்கிணைத்து,
ஏக்கப்பாட்டுகளை எதிரிகள் பாடிட
வாக்குச்சீட்டுகளால் வாகை சூடியவர்
தலைவர் கலைஞர்!

உங்கள் எழுதுகோல்
உங்களின் விமர்சகர்களுக்குப்
பூஜ்யம் தந்தது
உன் நிழலை நம்பியவர்களுக்கு
ராஜ்ஜியம் தந்தது!

சூறாவளிப் பிரச்சாரப் புயல்களை எல்லாம்
தன் ஒற்றைப் பெருமூச்சால் காணாமல்
போகச் செய்த ஐந்தமிழே!
பாய்ந்து வந்த விமர்சனக் கணைகளை எல்லாம்
வெற்றிமாலையாக்கித் தோளில் சூடிய சூரியச் சுடரொளியே!

சாதாரணக் கண்களுக்குத்தான்
அது சக்கரம் வைத்த நாற்காலி,
சரித்திரத்திற்குத் தெரியும் அது,
அசோகச் சக்கரத்தின் உயிர்நாடி என்று!

மருத்துவர்களின் ஊசிகளைக் காட்டிலும்
மாற்றணிக்காரர்களின் வார்த்தைகள் தாம் அதிகம்
தைத்தன அதிகமாய் உன் தளர்மேனியை!
அதனால்-வெற்றியை மருந்தாக்கி, வேதனையைத்
தணித்தார், தமிழகத்தின் துணை முதல்வர்

ஓய்வென்ற சொல்லையே
உச்சரித்தறியாத தானைத் தலைவரே!
“வியூகத்திற்குள் மாட்டிக் கொண்ட
அபிமன்யு” எனக் கழகத்தைச்
சொல்லின் கணிப்புகள்
எண்ணிக்கை விளையாட்டில்
இறுதியிடம் என்று எழுதித் தீர்த்தன பேனா முனைகள்!

கணிப்பாளர்களின் கண்களுக்குத் தொகுதி
மட்டுந்தான் தெரிந்தது, தமிழனத் தலைவா!
உன் கண்களுக்குத் தான்
தமிழனின் இதயப்பகுதி புரிந்தது!
மாற்று அணியினர் அறிவார்களா? நீங்கள்
மக்களின் மனத்தைப் படிப்பதில்
பல்கலைக் கழகம் என்பதை!

தேர்தலுக்காக நடிக்கும் மனிதர்களிடையே
தீர்வுகளுக்காகத் துடிக்கும் உன்னதத் தலைவரே!
எதிராளியின் இருட்டு முகாம்களிலும்
கண்ணிய விளக்கேற்றி வைக்கும்
கன்னித் தமிழே!

இயக்கத்தில் கோளாறை வைத்துக் கொண்டு
இயந்திரக் கோளாறு பற்றிப் பேசும்
மனிதர்களுக்கும் நீ மன்னிப்பை வழங்குகிறாய்...
ஏழைகளின் வயிற்றில் தீயாய் நின்ற பசியை
அமுதசுரபியால் அணைத்த
நம்பிக்கை நட்சத்திரமே!

மனிதகுல வரலாற்றின்
மகத்தான் முன்னுரையே!
இந்தியாவின் இதயத்தில்
எழுந்துநிற்கும் வியப்புக்குறியே!
பல்லாண்டுப்பல்லாண்டுப் பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் நீங்கள் வாழவேண்டும்!
உங்கள் அரவணைப்பில் நாடு வாழவேண்டும்!

- மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்

6 comments:

Anonymous said...

மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்//

ஹி ஹி ஹி...மண்டபத்துல யாரும் எழுதி கொடுத்ததோ ?

ராஜ்

said...

:-)

கலைஞருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வழங்க வயதில்லை வணங்கிச்செல்கின்றேன்!

said...

தலைவருக்கு வாழ்த்துக்கள்......

said...

http://idlyvadai.blogspot.com/2009/06/20.html

said...

யாத்ரிகன் அவர்களே!

இந்த லிங்கை இங்கே போட்டு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பிரபாகரனை போற்றி எழுதியப் பதிவில் தேனீ தளத்தின் லிங்கை போடுவதோ அல்லது தமிழ்சர்க்கிள் லிங்கைப் போடுவதோ பைத்தியக்காரத்தனமா இல்லையா?

said...

என் பெயருக்குப் பின்னாலே
பெருமையாப் பல பட்டம்!
அதை நான் பெற்றிடவே
நீ தந்தாய்
இட ஒதுக்கீட்டுச் சட்டம்!


ஊர் என்ன சொன்னாலும்
கவலையில்லை!
உந்தன் புகழ்பாடித்
திரிவதே என் முழுவேலை!