Friday, June 19, 2009

பஜ்ஜிமணம், பஜ்ஜிகூடு, பஜ்ஜிலிஷ், "சூடான பஜ்ஜிகள்", பஜிவர்கள் மற்றும் பஜிவர் கூட்டம்

இது உங்களுக்கு தெரிஞ்ச கதை தான் ஆனா திரைக்கதையை மட்டும் வித்தியாசமா அமைக்க முயற்சி செய்து இருக்கிறேன். கலைஞரும் பொறுப்புகளை எல்லாம் தளபதிகிட்ட கொடுத்துவிட்டு மீண்டும் கலைச்சேவை ஆற்ற கிளம்பிவிட்டார். அதனால் நமக்கும் கதை, திரைக்கதை பக்கம் ஆர்வம் வந்துவிட்டது. ஓக்கே, இப்போது கதைக்கு போகலாம். இது ஒரு வரலாற்று கதை என்பதால் எல்லா விஷயங்களையும் தொகுத்தால் பல பாகங்களாக விரிவடையும் அதனால் இது ஒரு நல்ல அறிமுகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஊரில் ஒருவர் முதன் முதலாக பஜ்ஜி கடை ஆரம்பித்தார். அந்த கடையில் பஜ்ஜி சுட ஆரம்பித்தால் ஊர் முழுவதுமே பஜ்ஜிமணம் கமழும். இதனால் கடையில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. இந்த கடையை பஜ்ஜிமணம் என்றே அழைப்போம். அதே ஊரில் இன்னொரு பஜ்ஜி கடையும் வந்தது. ஒரே ஊரில் இரண்டு பஜ்ஜி கடைகள் இருந்தாலும் இரண்டாவது கடையிலும் பஜ்ஜி விற்பனை நன்றாகவே நடந்து வந்தது. இந்த கடையின் பெயர் பஜ்ஜிகூடு என்பதை இந்நேரம் நீங்கள் யூகித்து இருப்பீர்கள். போக போக பஜ்ஜி சாப்பிடுபவர்கள் அதிகமானார்கள். இதனால் இவர்களுக்கு பஜிவர்கள் என்ற பெயரும் வந்தது. பஜிவர்கள் பஜ்ஜி கடையை தவிர சில சமயங்களில் ஸ்டார் ஓட்டல்களிலும் சந்தித்து கொள்வார்கள். இந்த சந்திப்புகள் பஜிவர் கூட்டம் என்று அழைக்கப்படும். பஜிவர் கூட்டம் என்று அழைக்கப்பட்டாலும் இந்த சந்திப்புகளின் போது இவர்கள் ஆர்டர் செய்வது என்னவோ போண்டாவை தான்

ஒரு நாள் திடீரென பஜ்ஜுகூடு கடை மூடப்பட்டது. பஜ்ஜிமணம் கடையும் கை மாறியது. இந்த சமயத்தில் பஜ்ஜிமணம் கடையின் மணம் பக்கத்து ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்த கடையின் சிறப்பம்சம் என்ன வென்றால் இந்த கடையில் ஒரு ஓரத்தில் ஒரு பத்து பஜ்ஜிகளை சூடான பஜ்ஜிகள் என்று வரிசைப்படுத்தி வைத்து இருப்பார்கள். இந்த சூடான பஜ்ஜிகளை வாங்குவதற்கு கூட்டம் முட்டி மோதிக் கொண்டு வரும். பல சமயங்களில் இந்த சூடான பஜ்ஜிகளை வாங்குவதற்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கலவரமே நடந்து இருக்கிறது. இதனால் பஜ்ஜி மணம் கடை அவ்வப்போது சூடான பஜ்ஜிகளை எடுப்பதும் மீண்டும் வைப்பதுமாக இருந்தது

பஜ்ஜிமணத்தின் ஆதிக்கம் நிலவி வந்த பஜ்ஜி உலகில் திடீரென ஒரு புதிய பஜ்ஜி கடை தோன்றியது. இந்த கடையை பஜ்ஜிலிஷ் என்று அழைப்போம். இந்த கடை ஒரு புது விதமான யுக்தியை அறிமுகப்படுத்தியது. நீங்கள் அந்த கடையில் நீங்கள் சாப்பிட்ட ஐட்டம் உங்களுக்கு பிடித்து இருப்பதாக சொன்னால் மட்டுமே அதை அவர்கள் தங்கள் கடை ஷோ கேசில் வைப்பார்கள். இந்த முறை நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பஜ்ஜிலிஷ் கடையும் அல்லோலகல்லோலப்பட்டது. பஜ்ஜிமணமும் காலத்திற்கேற்ப பல மாற்றங்களை செய்து தன்னுடைய பஜிவர் வட்டத்தை இன்னும் விரிவுபடுத்தியது.

பஜ்ஜிமணம் மற்றும் பஜ்ஜிலிஷ் ஆகிய கடைகளின் வெற்றியை பார்த்த பக்கத்து ஊர்களிலும் பல கடைகள் தோன்ற ஆரம்பித்தன. பஜிவர்ஸ், பஜ்ஜிவெளி, பஜ்ஜிப்பதிவுகள், பஜ்ஜிடி, பஜ்ஜிமம் போன்ற கடைகள் தோன்றி பஜ்ஜி மார்க்கெட்டை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டன. இதுவரை பஜ்ஜி மார்க்கெட்டை கண்டு கொள்ளாமல் இருந்த பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கூட பஜ்ஜி உலகத்தை திரும்பி பார்க்க ஆரம்பித்து இருக்கின்றன. இந்த முன்னேற்றங்கள் பஜ்ஜி உலகில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வெள்ளித்திரையில் காணவும்

இந்த கதைக்கு வரும் ஆதரவை பொறுத்து தொடர்ந்து கதைகள் வெளிவரலாம் இல்லை என்றால் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வந்த மாதிரி நாமும் மீண்டும் அரசியல் பதிவுகளுக்கு வரும் நிலை உருவாகலாம். அதனால் கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் தவறாமல் மரியாதையாக உங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றிவிட்டு செல்லவும்

18 comments:

said...

ஆத்தோ ஆத்துன்னு ஆத்தியாச்சு- கடமையத்தான்

said...

>> இந்த சந்திப்புகளின் போது இவர்கள் ஆர்டர் செய்வது என்னவோ போண்டாவை தான் <<<

:-)))))))

said...

மிக அருமை!!

said...

//ILA said...
ஆத்தோ ஆத்துன்னு ஆத்தியாச்சு- கடமையத்தான்
//

ரிப்பீட்டே.......!

said...

//
ILA said...

ஆத்தோ ஆத்துன்னு ஆத்தியாச்சு- கடமையத்தான்
//

மிக்க நன்றி தோழர்

said...

நன்றி யாத்ரீகன்

said...

//
திரட்டி.காம் said...

மிக அருமை!!
//

நன்றி திரட்டி. உங்களுக்கு சரியான பெயர் கிடைக்கவில்லை கிடைத்து இருந்தால் உங்களையும் கோர்த்துவிட்டு இருக்கலாம்

said...

அருமை

said...

//
கோவி.கண்ணன் said...

//ILA said...
ஆத்தோ ஆத்துன்னு ஆத்தியாச்சு- கடமையத்தான்
//

ரிப்பீட்டே.......!
//

நன்றி கோவியாரே! உங்களை போன்றவர்களின் தொடர்ந்த ஆதரவினால் நம் வண்டி ஓடிக் கொண்டு இருக்கிறது

said...

பஜ்ஜி ரொம்ப சூடு,சுவை

said...

பஜ்ஜிப்பதிவுகள் (தமிழ்பதிவுகள்) விட்டு விட்டீர்களே?

said...

//
திரட்டி.காம் said...

மிக அருமை!!
//

நன்றி திரட்டி. உங்களுக்கு சரியான பெயர் கிடைக்கவில்லை கிடைத்து இருந்தால் உங்களையும் கோர்த்துவிட்டு இருக்கலாம்//

9:30 PM, June 19, 2009

பஜ்ஜிடீ சோக்காகிதா?

said...

நன்றி ஷாகுல் நீங்க சொன்னதை சேர்த்தாச்சு

said...

//நன்றி ஷாகுல் நீங்க சொன்னதை சேர்த்தாச்சு//

உடனே பரிசீலித்த உ.பி வாழ்க வாழ்க

said...

hahahahaha!!!!Nice!

said...

Jooper

said...

:))

said...

வெகு அருமை. ரசித்தேன்:))!