பல பதிவர்களுக்கு யாரையாவது தாக்கி எழுதுவதே பழக்கமாகிவிட்டது போல் தெரிகிறது. சொந்த சரக்கு இல்லாதவன் தான் இப்படி பிறரை தாக்கி பிழைப்பு நடத்தும் கேவலமான வேலையை செய்வான். முதலில் முதல்வர் கலைஞர் அவர்களை தாக்கி எழுதினார்கள், பின்னர் சோனியா காந்தியை மிக கேவலமாக எழுதினார்கள் தற்போது இந்தியா என்ற நாட்டை தாக்கி எழுதிவருகிறார்கள்
இந்தியா தரப்பில் எந்த தவறுமே இல்லை என்று சொல்ல வரவில்லை. இங்கே உள்நாட்டிலேயே தமிழன் பல பிரச்சினைகளுக்கு இடையே தான் வாழ்ந்து வருகிறான். முல்லைப் பெரியாறு, காவிரின், தமிழக மீனவர்கள் என்று இங்கேயே தமிழனுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். தமிழன் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததே காரணம். இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்ட போது வட மாநிலங்களில் சீக்கியர்களை குறி வைத்து தாக்கினார்கள். ஆனால் ராஜீவ்காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழர்ளை வெளி மாநிலத்தவர் எவரும் தாக்கவில்லை. நம் சக தமிழனே புலிகளுக்கு நீ தானே ஆதரவளித்தாய் என்று உடன்பிறப்புகளை தாக்கினார்கள்
நாம் சொல்ல வருவது என்னவென்றால் எப்போதும் யாரையாவது வசைபாடியே எல்லோரையும் எதிரியாக பார்க்காதீர்கள். புலிகளுக்கு ஆதரவாக எழுதிய சில பதிவர்களையும் கூட நீங்கள் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் எழுதுகிறீர்கள் நாய்கள், பேய்கள் என்று திட்டுகிறார்கள். இப்போதும் உங்களுக்கு எந்த உதவியும் இல்லை என்றாலும் அவர்கள் ஏதோ கொஞ்சம் ஆறுதல் வார்த்தைகளாவது எழுதுகிறார்கள்
குறிப்பாக உங்களுக்கு ஆதரவாக இயங்குவதாக காட்டிக் கொள்வதற்காக உணர்ச்சிவசப்பட்டு எழுதுவர்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள். இதற்கு நல்ல உதாரனம் வைகோ தான். நன்றாக உணர்ச்சிவசப்பட்டு பேசுவார் ஆனால் அவரால் ஏதாவது பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இருக்கிறதா. அது மாதிரி தான் வலையில் இயங்கும் சில குள்ள நரி பதிவர்களும்
சரி இப்போது தலைப்புக்கு வருவோம். தமிழ்நாட்டு தமிழன் எப்படி பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறானோ அது மாதிரி இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து முகாமகளி இருப்பவர்களும் சிலர் வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார்கள். இவர்கள் நெடுங்காலமாகவே எம்முடன் வாழ்ந்து வருபவர்கள். இவர்களை நாங்கள் பிரித்து பார்த்ததில்லை. எம்மை போலவே பிரச்சினைகளை சமாளித்து வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். பிறரை பழித்து பேசி நாய் பிழைப்பு நடத்துபவர்கள் இல்லை. இது குறித்து மேலான தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை சொடுக்கவும்
ஒரு இலங்கை அகதி...
Monday, June 08, 2009
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
//தமிழர்ளை வெளி மாநிலத்தவர் எவரும் தாக்கவில்லை. நம் சக தமிழனே புலிகளுக்கு நீ தானே ஆதரவளித்தாய் என்று உடன்பிறப்புகளை தாக்கினார்கள்//
உண்மைதான்...
வாழ்த்துக்கள்!! செபஸ்தியம்மா!!
வாழ்த்துக்கள்!! ரெஜினால்ட்.!!
//பல பதிவர்களுக்கு யாரையாவது தாக்கி எழுதுவதே பழக்கமாகிவிட்டது போல் தெரிகிறது. சொந்த சரக்கு இல்லாதவன் தான் இப்படி பிறரை தாக்கி பிழைப்பு நடத்தும் கேவலமான வேலையை செய்வான்.//
தலைவா, அவங்களை விடுங்க, சொந்த சரக்கு என்ன
நமக்கு டாஸ்மாக் கடையே இருக்கு.
:)
(இது சீரியஸ் பின்னூட்டம் அல்ல)
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தீப்பெட்டி
//தலைவா, அவங்களை விடுங்க, சொந்த சரக்கு என்ன
நமக்கு டாஸ்மாக் கடையே இருக்கு.
:)
(இது சீரியஸ் பின்னூட்டம் அல்ல)//
தெய்வமே! நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்
ஐயா, பதிவு பிடிச்சிருந்தா தமிழ்மணம் பட்டையில் + ஓட்டு போடுங்க, நம்ம பேர பாத்ததுமே பதிவையே படிக்காம ஸ்ட்ரெய்ட்டா - ஓட்டா போட்டு கொல்றாங்க
”இலங்கை அகதி”????
//Anonymous said...
”இலங்கை அகதி”????
//
நான் கொடுத்திருக்கும் சுட்டியில் அப்படி தான் எழுதி இருக்கிறார்கள், அதையே நானும் தலைப்பாக வைத்து இருக்கிறேன்
////Anonymous said...
”இலங்கை அகதி”????
//
நான் கொடுத்திருக்கும் சுட்டி கூட ஈழ தமிழர்களால் தான் நடத்தபடுகிறது. அவர்களே ”இலங்கை அகதி” என்று தான் சொல்கிறார்கள்
உடன் பிறப்பு நான் ஒரு பதிவு போட்டிருக்கேன். அதை நிறைவேற்ற எதாவது வழி இருக்கான்னு பாருங்க.
குடுகுடுப்பை! உங்கள் பதிவை நீங்கள் எழுதிய அன்றே நான் வாசித்துவிட்டேன். நம்மால் முயன்றதை செய்வோம்
கருணாநிதிக்கு அடிமை பிழைப்பு பிழைக்கிரத விட
என்ன செய்யலாம் என்று தாங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்
அனானி, அடிமை பிழைப்பு பிழைக்கிறதைவிட கேவலமானது பிறரை பழித்தே வாழ்வது. ஏதோ ஒருவரை பழித்தால் கூட பரவாயில்லை பார்ப்பவரை எல்லாம் பழித்தால் பைத்தியம் என்று தான் அர்த்தம்
இந்த இடுகைக்கு தமிழிஷ் ஓட்டு போட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
//தமிழர்ளை வெளி மாநிலத்தவர் எவரும் தாக்கவில்லை. நம் சக தமிழனே புலிகளுக்கு நீ தானே ஆதரவளித்தாய் என்று உடன்பிறப்புகளை தாக்கினார்கள்//
நீங்கள் சொன்ன தமிழர்கள் காங்கிரஸ் கட்சியினர். உங்களை அடித்தவனுடனேயே கூட்டு சேர்ந்த தன்மானத் தலைவனை என்ன சொல்லி வாழ்த்துவது. எட்டப்பனின் மறுஜென்மத்தை தமிழன் மன்னிக்க மாட்டான்.
வினோத், உங்கள் பதிலில் இருந்தே நீங்கள் அரசியலில் ஒரு அரைகுறை என்பது தெளிவாக தெரிகிறது. காங்கிரஸ்காரனுக்கு கோஷ்டி சண்டை போடுவதற்கே நேரம் போதவில்லை இதில் எங்கு நம்மை தாக்குவது. நம்மை தாக்கியது அப்போதைய காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஈழநாயகி/ஈழத்தாய் கட்சியினர் தான்
லண்டனிலும், பாரிசிலும், கனடாவிலும் உட்கார்துகொண்டு பிளாக் எழுதும் ஸ்ரீலங்கா நண்பர்கள் ஏன் ஸ்ரீலங்கா போஎய் தம் மண்ணுக்காக போராட கூடாது. தமிழ் நாட்டுக்காரன் இவன்களுக்காக ஏன் போராட வேண்டும்.
Post a Comment