ஒரு வாதத்திற்காக ஒரு கேள்வி கேட்கிறேன். நம் பெரு மதிப்பிற்குரிய திரு.சோ ராமசாமி அவர்கள் கொங்கு வேளாளர் பேரவையில் சேருவாரா. என்ன இது பைத்தியக்காரத்தனமான கேள்வியாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா. இதுக்கே இப்படி நினைத்தீர்கள் என்றால் இன்னும் கேளுங்க. சரி சோ ராமசாமியை விடுவோம். வேறு ஒரு பிராமணர் அதே கொங்கு வேளாளர் பேரவையில் சேருவாரா. இது அதைவிட பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதா. இன்னும் கேளுங்கள், இப்போது பிராமணர் எதுக்கு கொங்கு வேளாளர் பேரவையில் சேர வேண்டும் அவர்கள் பிராமண அமைப்பில் தானே சேருவார்கள் என்ற யதார்த்தம் இந்நேரம் உங்களுக்கு புரிந்து இருக்கும்
இப்போது கொங்கு வேளாளர் பேரவையை சேர்ந்த ஒருவர் எங்கள் கட்சி தான் பிராமணர்களே இல்லாத கட்சி அதனால் நாங்கள் தான் உண்மையான திராவிட கட்சி என்று தம்பட்டம் அடித்தால் உங்களுக்கு என்ன தோன்றும். இங்கே உதாரணம் தான் வேறு. உண்மையிலேயே ஒரு சாதி கட்சியை சேர்ந்த சிலர் இப்படி தான் தாங்கள் உண்மையான திராவிட கட்சி என்று சொல்லி வருகிறார்கள். என்னவோ பிராமணர்கள் எல்லோரும் இவர்களின் சாதிக் கட்சியில் சேர்வதற்கு விண்ணப்ப படிவத்தை நிரப்பி வைத்துக் கொண்டு இவர்கள் கட்சி வாசலில் இரவு பகலாக கியூவில் நிற்பதை போல் இவர்கள் கொடுக்கும் பில்டப் இருக்கிறதே அப்பப்பா காமெடியிலும் செம காமெடி
ஆனால் இப்படி தங்கள் கட்சியில் பிராமணர்களே இல்லை என்று சொல்லி திராவிடம் பேசும் இவர்கள் அமைச்சர் பதவி பெறுவதற்கும், ராஜ்ய சபா உறுப்பினர் ஆவதற்கும் கையேந்தி நிற்பது என்னவோ பிராமணர் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்தாலும் திராவிடத்தை தூக்கி கடாசிவிட்டு அந்த கட்சி வாசலில் காத்து இருப்பார்கள். இந்த பச்சோந்தி தனத்தை எல்லாம் சுட்டி காட்டினால் அவர்களுக்கு மறக்காமல் பார்ப்பன அடிவருடி பட்டத்தையும் கொடுத்து மகிழ்வார்கள் இந்த நவீன திராவிடர்கள்
திராவிடம், திராவிடம் என்று பேசிக் கொண்டே சக திராவிட கட்சிகளுக்கு குழி பறிப்பதில் வல்லவர்கள் இவர்கள். திராவிடம் என்பதெல்லாம் தங்கள் சாதி வெறியை மறைக்கும் வெறும் கருவி தான் இவர்களுக்கு
Wednesday, June 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தோழர் லக்கி நீங்க ரொம்ப பாஸ்ட். இப்போ தான் இடுகையை வெளியிட்டேன் அதற்கு உங்கள் பின்னூட்டம். உங்கள் ஆதரவு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. நன்றி தோழர்
அதானே???
உங்களையும் என்னையும் கீகன் கிந்தசாமி விட போவதில்லைன்னு சொல்லியிருக்கார்! பயப்படுவோமா நாம??
//அபி அப்பா said...
உங்களையும் என்னையும் கீகன் கிந்தசாமி விட போவதில்லைன்னு சொல்லியிருக்கார்! பயப்படுவோமா நாம??
//
அவர் நட்சத்திரம் ஆனதாலேயே அவர் இடுகையை எல்லாம் வாசிக்கும் அவலம் நேர்ந்தது. மற்றபடி அவரை போன்றவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவை இல்லை
:)
நெம்ப நாளைக்கு பிறகு நறுக் குன்னு வெச்ச சூடு இது.
Post a Comment