மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ததற்கும், கழகத்தின் மீதும் கழக ஆட்சியின் மீதும் வாக்காளர்கள் வைத்து இருக்கும் அபரிதமான நம்பிக்கைக்கும் கழகத்தின் சார்பில் எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய செல்வி ஜெயலலிதா அவர்கள் மதுரைக்கு நீதி கேட்டு வந்து இருப்பதாக சொல்லி வாக்கு சேகரித்தார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தனக்கு எதிராக வாக்கு சேகரித்தார். தர்மபுரி பஸ் எரிப்பு முதல் ஊழல் வழக்குகள் வரை, சமீபத்திய தேர்தல் விதி மீறல் உள்ளிட்ட பல வழக்குகளில் சம்மந்தப்பட்டு இருக்கும் கட்சியின் தலைவியாக இருந்து கொண்டு அவர் இவ்வாறு வாக்கு கேட்டு இருக்கக் கூடாது
மதுரை மேயர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு முதலான 'அகிம்சை' வழி போரட்டத்தில் ஈடுபட்டு அவர்கள் மதுரையில் நீதி கேட்டார்கள். நீதிக்கு பெயர் போன மதுரையில் அவர்களுக்கு வாக்காளர்கள் நீதி கொடுத்துவிட்டார்கள். மதுரையில் கிடைத்த நீதி போதாவிட்டால் அவர்கள் தர்மபுரியிலும் சென்று கேட்கட்டும்
விஜயகாந்துக்கு ஆதரவளித்து அ.தி.மு.க. வாக்கு வங்கியில் ஓட்டை போட்ட 'நடுநிலைவாதிகளுக்கு' எங்களது நன்றிகள்
Saturday, June 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இது நமக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லுவதை விட அவதூறு அரசியல் செய்பவர்களுக்கு கிடைத்த மரண அடி என்று சொல்லுவதே சாலப் பொருத்தம்!
தேவர் பய திட்டி இருக்கானே?
//"மதுரையிலே நீதி கிடைத்தது" //
இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை ?
:)))
பலரும் மறக்க வேண்டிய ஒன்றை வழிய வந்து ஞாபகப்படுத்துகிறீர்களே !
ஒரு பழமொழி உண்டு.
பொய்யை திரும்ப திரும்ப சொன்னால்...
சரி போதும் !
காங்கிரஸ் வெற்றிக்கு வாழ்த்துக்கள் !
:)))
அய்யோ கோவியாரே...
உங்களோட பெரிய தமாசு தான் போங்க :-)))))
Post a Comment