நேற்று சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரை அரங்கில் பெரியார் படத்தின் 50வது நாள் விழா சேலத்து சிங்கம் வீரபாண்டியார் தலைமையில் வெகு சிறப்பாக நடந்தது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.வீரபாண்டி ராஜா, படத்தின் கலைஞர்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
நேற்று மாலை 7.45 மணி அளவில் உடன்பிறப்புக்களின் வாழ்த்துக்களுக்கு நடுவே வீரபாண்டியர் திரை அரங்கிற்கு வந்தார். பின்னர் மேடையில் பேசிய அவர் பெரியார் படத்தை பற்றியும் அதில் நடித்த அனைவ்ரையும் பாராட்டியும் பேசினார். விழாவிற்கு இயக்குநர் ஞானசேகரன், நடிகர் நிழல்கள் ரவி, நடிகைகள் லாவண்யா மற்றும் ஜோதிர்மயி ஆகியோர் வந்து இருந்தனர். வீரபாண்டியார் பேசும் போது நடிகர் நிழல்கள் ரவியை மின்னல் ரவி என்று வர்ணித்த போது கழக பேச்சாளர்களுக்கே உரித்தான பாணி அவரிடம் தெரிந்தது. அவருடைய பேச்சை நான் கேட்பது இதுவே முதல் முறை. மேலும் அவர் படத்திற்கு தலைவர் கலைஞர் அவர்களின் உதவிகள் பற்றியும் பேசினார்
பின்னர் நடிகை லாவண்யா, ஜோதிர்மயி ஆகியோர் பேசினர். நடிகர் நிழல்கள் ரவி பேசும் போது படத்தில் பெரியாராக நடித்த சத்யராஜின் உழைப்பை பற்றி பேசினார். கடைசியாக இயக்குநர் ஞானசேகரன் பேசும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக தென்பட்டார். இந்த படத்திற்காக தான் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததை பற்றி குறிப்பிட்டார். பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்ததை குறிக்கும் விதமாக இந்த படத்திற்கு 95 லட்சம் வழங்கிய கலைஞருக்கு அவர் நன்றி தெரிவித்தார். பின்னர் வீரபாண்டியார் பெரியார் பட குழுவினருக்கு சால்வை அணிவித்தார்
விழா முடிந்ததும் பெரியார் படம் அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது. நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்ற சேலத்தில் இந்த விழா நடந்தது மிகவும் பொறுத்தமாக இருந்தது. விழாவில் கருஞ்சட்டை வீரர்கள் பலரும் இருந்ததனர். பக்கத்து ஸ்கிரீனில் இருந்து 'பேரச் சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல்ல...' என்ற வசனம் ஒலித்தது. அந்த வசனம் பெரியர் படத்துக்கும் பெரியருக்குமே அதிகம் பொருந்தும் என்றால் அது மிகையல்ல
Wednesday, June 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//பக்கத்து ஸ்கிரீனில் இருந்து 'பேரச் சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல்ல...' என்ற வசனம் ஒலித்தது. அந்த வசனம் பெரியர் படத்துக்கும் பெரியருக்குமே அதிகம் பொருந்தும் என்றால் அது மிகையல்ல//
:))
படத்தின் முதல் நாள் அன்று வீரபாண்டியார் தலைமயில் பெரியார் சிலையிலிருந்து மல்டிப்ளக்ஸ் வரை ஊர்வலமாக படப்பெட்டி எடுத்துவரப்பட்டு படம் திரையிடப்பட்டது.
//'பேரச் சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல்ல...' //
Super!!!!
//'பேரச் சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல்ல...' //
Cool!
//படத்தின் முதல் நாள் அன்று வீரபாண்டியார் தலைமயில் பெரியார் சிலையிலிருந்து மல்டிப்ளக்ஸ் வரை ஊர்வலமாக படப்பெட்டி எடுத்துவரப்பட்டு படம் திரையிடப்பட்டது//
தகவலுக்கு மிக்க நன்றி அனானி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோ மற்றும் இளா
உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி, உங்களுடன் சேர்ந்து எழுதுவது மிக்க மகிழ்ச்சி.
ஏனுங்க சென்னை-ல கொண்டாடல?....கருணாநிதி குடும்பத்தோட வந்து கலந்திட்டிருப்பாருல்ல?....ஓ படம் ஒரே திரையரங்குல 50 நாள் ஓடல்லையோ?
//ஏனுங்க சென்னை-ல கொண்டாடல?....கருணாநிதி குடும்பத்தோட வந்து கலந்திட்டிருப்பாருல்ல?....ஓ படம் ஒரே திரையரங்குல 50 நாள் ஓடல்லையோ? //
கொண்டையை மறைக்காத அந்தணன் அவர்களே!
சென்னையிலும் படம் 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தலைவர் கலைஞர் படத்தின் நூறாவது நாள் விழாவிலோ அல்லது வெள்ளி விழாவிலோ கலந்து கொள்வார். நீங்களும் கொண்டையை மறைக்காமல் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!
Post a Comment