சில நாட்களுக்கு முன் உண்மை தமிழன் என்ற மேதாவி ஒருவர் 'என் உயிரை தடுக்க இவர்கள் யார்' என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதி பரபரப்பாக்கினார். அதில் ஹெல்மெட் போடாததன் அவசியத்தை மிக கேவலமாக விளக்கி இருந்தார். அவருடைய பாணியிலேயே சிந்திக்கும் போது அவருக்கு கீழே உள்ள அறிவுரைகளை வழங்கலாம் என்று தோன்றியது
1. என் உயிரை தடுக்க இவர்கள் யார் அதனால் இனி யாரும் ஆணுறை அணிய வேண்டாம் என்று இவர் சொல்லலாம். ஹெல்மெட் போட சொன்னால் ஹெல்மெட் கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் பெற்றுவிட்டார்கள் என்று சொல்வார்கள். இதுவரை எல்லா அரசுகளுமே ஆணுறை அணிய சொன்னார்களே. அவர்கள் எல்லாம் ஆணுறை கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் பெற்றார்களா
2. சிக்குன்குனியா தடுக்க கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டாம் என்பது இவர் வாதமா
3. சாலைகளில் ஸ்பீடு பிரேக்கர் வேண்டாம் என்பது இவர் வாதமா
4. நோய்களை தடுப்பதற்கான தடுப்பு ஊசிகள் பெற்றோர் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு போட வேண்டாம் என்பது இவர் வாதமா
5. சுனாமி வந்தால் வந்துவிட்டு போகட்டுமே என்று சுனாமி அறிவிப்பு கருவிகள் நிறுவ வேண்டாம் என்பது இவர் வாதமா
அய்யா உண்மை தமிழா இது மாதிரி பெரிய பட்டியலே போடலாம் உங்கள் புடலங்காய் வாதங்களுக்கு ஆனால் உங்கள் பதிவிலேயே உங்களை பலர் நையப் புடைத்துவிட்டதால் இத்தோடு முடிக்கிறேன்
Friday, June 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
உடன்பிறப்பு!
நண்பர் உண்மைத்தமிழனை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது என் எண்ணம். ஆனாலும் அடிச்சி ஆடி இருக்கீங்க :-)
என்ன கொடுமை சரவணன் இது?
வெளுத்ததெல்லாம் பால் அல்ல
தமிழன் என்று சொல்லிக்கொள்பவன் எல்லாம் தமிழனும் அல்ல
இங்கே தலைக்கவசம்; வண்டியுள் இருக்கைப் பட்டி என்பன கட்டாயம் அணிய வேண்டும். இல்லாவிடில் குற்றப்பணம் கட்டுவதுடன்; சாரதி அனுபதிப்பத்திரத்தில் ஒரு புள்ளியும் வெட்டிவிடுவார்கள்.
இதைக்கூட ஏன் அரசியல் ஆக்குகிறார்கள்.
உண்மைத்தமிழன் சிவாஜி படத்துக்கு ஓசியிலே, டிக்கெட் கிடைக்குமானு பாத்துக்கிட்டிருக்காரு.அவரைப்போயி ஏஞ்சாமி இந்தக்கொடுமை பண்றீங்க.
நேற்றைய நிலவரம்:
வாகனம் ஓட்டுபவர் கூட தலைக்கவசம் அணியவேண்டியது கட்டாயமில்லை- சென்னையில்.
போலீஸ் கண்டுக்கொள்வதில்லை.
அதான் முதல்வரே சொல்லிட்டாரே!!
சட்டம் என்பது நடைமுறைப்படுத்த,விலக்க அளிக்க அல்ல.
நல்ல பதிவு
அவன் உண்மைத் தமிழன் அல்ல. லூசுத்தமிழன்.
Post a Comment