நூறு கோடியைத் தாண்டுகிற மக்கள் வெள்ளத்தில்
வீறு கொண்ட ஆடவர் எண்ணிக்கை சரி பாதியாகும்!
சீறுகின்ற பாம்புகள் முன்னே சிறு தவளைக் கூட்டம் போல்-
ஆறுவது சினம் படித்து அடங்கிடும் பெண் குலமோ மறு பாதியாகும்
நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி;
நானம், அச்சம், மடம், பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி;
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல்
அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு -என்று
அனலிடை அவளைக் கருக்கி ஆர்த்தெழும் கொடிய சாத்திரப்
புனலிடை அவள் உடலைக் கழுவி
அந்த உயிரிலா சிலைக்குப் பொட்டிட்டு பூ முடித்து
அம்மன் அவள்தான் என்று பூசை புனஸ்காரம் செய்து
ஆண் வர்க்கம் புரிகின்ற தந்திரங்களைத் தோலுரித்து
அறியாமை நீக்கி ஆர்த்தெழுவீர் அரிவரையரே என
அய்யா பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஒலித்திட்ட முழக்கத்தை
தமிழகம் மட்டுமின்றி தரணியே அறியும் வண்ணம்
பாரதிப் பெண்ணின் பெருமைதனைப் பாருக்குயர்த்த
பார் இதோ; பாரத தலைநகர் எடுத்த முடிவு -
இந்தியக் குடியரசுத் தலைவராக;
இதோ ஒரு பெண்மணி!
இனி பெண்ணுரிமை தலைவராக;
இதோ ஒரு பெண்மணி!
இனி பெண்ணுரிமை போற்றுவதே;
இனிய சுதந்திரத்தின் கண்மணி!
(டாக்டர் கலைஞர்)
Tuesday, June 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடுமா பெண்குலம்? // ஆமா, பின்ன மனைவியிருக்க துணைவி தேடி போறவங்க எல்லாம் பாஞ்சாலிய பத்தி கவிதையெழுதற காலக்கொடுமைய எப்படி சகிச்சிருக்கறதாம்?
Is there any reservation for women
in party posts in DMK.In AIADMK 33% of the party posts are reserved for women.In 1991 elections Jayalalitha gave tickets to many women and as a result a record number of women became MLAs.
Why cant DMK reserve at least 25% of party posts for women.
Post a Comment