"அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்தொகையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
காவலர்களின் அரை டவுசரை முழு டவுசராக கூட்டிக்கொடுத்த கலைஞர்.
சத்துணவில் முட்டையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
இந்திய அரசில் அமைச்சர் எண்ணிக்கையை கூட்டிக்கொடுத்த கலைஞர்."
இப்படித்தான் கூட்டிக்கொடுக்கும், அள்ளிக்கொடுக்கும் கலைஞரை எங்களுக்குத் தெரியும்.கூட்டிக்கொடுத்த கருணாநிதி, மாமா வேலை பார்க்கும் கருணாநிதி என்று வாய்க்கு வந்த படி பேசும் மக இக தோழய்ங்களா, உங்கள் இயக்கத்தில் இருக்கும் மூன்று கோடி உறுப்பினர்களும் சேர்ந்து ஜெயலலிதாவின் சுண்டு விரலையாவது அசைக்க முடியுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.நீங்கள் கனவு மட்டுமே காணும் பல விசயங்களை நனவாக்கிக்காட்டுபவர் கலைஞர் மட்டுமே என்பது ஏன் உங்கள் மரமண்டைக்குப் புரிய மாட்டேன் என்கிறது?.ஓட்டுப்பொறுக்கி அரசியல் என்று எல்லோரையும் சகட்டுமேனிக்கு திட்டும் மக இக தோழய்ங்களா, இந்தியாவை ஆயுதப்புரட்சியின் மூலம் கைப்பற்ற முடியும் என்று நிஜமாகவே எண்ணுகி்றீர்களா?.மலையில் முட்டினால் மண்டை தான் உடையும். இந்திய அரசை ஆயுதப்புரட்சின் மூலம் அகற்றி விட்டு அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டு்மே மக்களுக்கு உங்களால் சேவை செய்ய முடியுமா?
உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளே பார்த்து வியக்கும் வண்ணம் தானே இந்தியாவும் இருக்கிறது.இதை விட அமைதியான , பாதுகாப்பான சூழல் வேறெங்கும் இல்லை. ஒடுக்கப்பட்ட, ஏழைமக்களின் முன்னேற்றத்திற்கு இப்போது இருக்கும் சூழலே மிக நன்றாக உள்ளது.(இலங்கைத்தமிழர்களின் நிலையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்). இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதை விட்டுவிட்டு பகல்கனவு காண்பதால் என்ன நன்மை?
முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் என்று மூன்றே வார்த்தைகளில் விளக்கம் சொன்னார் லெனின். கலைஞருக்கு மேலாகவா நீங்கள் ஒரு மனிதாபிமானியைக் கண்டு விடப்போகிறீர்கள். முற்போக்கு சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கும் கலைஞருக்கு ஆதரவு தர மனமில்லையென்றாலும் வாரி விடாமலாவது இருங்கள்.
மாமா வேலை பார்க்கும் அரசு என்றால் என்ன? பெரு முதலாளிகள் சம்பாதிப்பதற்கு சாதாரண மக்களின் நலன்களை பலிகொடுத்து முதலாளிகளின் ஏஜெண்டாக , மாமாவாக வேலை பார்ப்பது என்பது தான். ஆனால் அசுரரே, நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் உலகில் மாற்றங்கள் வெகுவேகமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. மாற்றங்களுக்கேற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் காணாமலே போய்விடுவோம்.
சோசலிச சமூகத்திற்கு அவசிய முன்தேவையாக முதலாளித்துவ வளர்ச்சி இருக்கிறது என்று மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இப்போது நிலவி வரும் சூழலை ஏழை,எளிய மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிந்தித்து பாடுபடுவதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.
Wednesday, June 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாலு,இருந்தாலும் இம்புட்டு நக்கல் ஆகாதுப்பா. அம்மாவையும் இப்படித்தான் நக்குவீங்களா?.
///இதை விட அமைதியான , பாதுகாப்பான சூழல் வேறெங்கும் இல்லை. ///
உண்மைதான்,
////ஒடுக்கப்பட்ட, ஏழைமக்களின் முன்னேற்றத்திற்கு இப்போது இருக்கும் சூழலே மிக நன்றாக உள்ளது.////
ஆனால் சத்தியமா இது பத்தாது
//ஒடுக்கப்பட்ட, ஏழைமக்களின் முன்னேற்றத்திற்கு இப்போது இருக்கும் சூழலே மிக நன்றாக உள்ளது.(இலங்கைத்தமிழர்களின் நிலையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்).//
வாங்க மோகன்,
//ஆனால் சத்தியமா இது பத்தாது//
நீங்கள் சொல்வது உண்மை தான்.அதற்குத்தான் இலங்கைத்தமிழர்களுடன் ஒப்பிட்டேன்.கல்வி,வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவது மட்டுமே பத்தாது என்பதே என் எண்ணம்.
இ.தமிழர்களுடன் ஒப்பிடும் போது நமக்கு கட்டற்ற சுதந்திரம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.அதை நாம் பயன்படுத்த வேண்டும்.மக இக போன்ற இயக்கங்கள் மக்களை அதற்குப் பயிற்றுவிக்கலாம்.
கலைஞரை விமர்சித்து அவரைக் கீழே இறக்கி விட்டு உடனடியாக கம்யூனிஸ்ட் அரசு அமையுமென்று வைத்துக் கொண்டால் கூட மக இக தோழர்களின் "மாமா" விமர்சனங்கள் ஓக்கே..
ஆனால் இப்போ கலைஞரை விட்டால் அடுத்து முதலமைச்சர் பதவிக்காக வரிசையாக ஜெயா மாமி, கேப்புட்டன், பாடிபில்ட்டரு சரத்து, மரம்வெட்டி, சைக்கோ, கார்த்திக்.. கவுண்டமனி செந்தில் போண்டாமணி குள்ளமணி குண்டுமணி போன்றோர் தான் வரிசையில் நிற்கிறார்கள்.. இவர்கள் பதவிக்கு வருவது சரிதானா.. இவர்கள் ஆட்சியில் இருந்தால் இப்படி கடுமையாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்.
நன்றி பில்லி ஜான். கலைஞருக்கு மாற்றாக ஒரு தலைவர் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் இல்லை.
நெம்ப நெம்ப சரியானப் பதிவுங்க. சரியான நேரத்தில போட்டிருக்கீங்க. எப்பப் பார்த்தாலும் கண்கெட்ட பின் சூர்யா நமஸ்காரம் செய்வதே தமிழ்நாட்டு மக்களின் வேலையா போச்சு.
Post a Comment