சமீபத்தில் வெளியான குருவி படம் பற்றி ஒரு மோசமான மனோபாவம் குறிப்பிட்ட சில ரசிகர்களிடமும், சில வலைப்பதிவர்களிடம் நிலவுகிறது. குருவி படம் என்னவோ இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களிலேயே மட்டமான படம் என்பது போல் ஒரு தோற்றத்தை நிறுவ ஒரு கூட்டம் இரவு பகலாக கண் விழித்து ரூம் போட்டு யோசித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் துக்ளக் கார்ட்டூன் வராதது தான் பாக்கி
குருவி படம் கில்லி அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பை ஏற்றுக் கொள்ள சிலருக்கு மனம் இடம் கொடுக்க. அதனால் அவர்கள் திட்டமிட்டு குருவி படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். குருவி படத்துக்கு முன் வெளிவந்த இளைய தளபதியின் முந்தைய படத்துக்கும் மறுபட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்போது எல்லாம் தென்படாத கொலைவெறி குருவி படத்துக்கு மட்டும் இவர்களுக்கு வந்து இருக்கிறது என்பதே இது ஒரு சதிவலை என்பதற்கான ஆதாரம். குருவி படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே சிலர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்து இருந்தார்கள். இந்த விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில் இவர்கள் எந்த பேதமும் இல்லாத சினிமா ரசிகர்கள். ஆனால் இப்போது இணையம் மற்றும் மின்னஞ்சல் பிரச்சாரம் நிச்சயம் ஒரு சதி வலை.
இதற்கு எல்லாம் காரணம் என்ன என்று விளக்க தேவை இல்லை. தலைவர் கலைஞர் அவர்களின் குடும்பத்தில் இருந்து மேகும் ஒருவர் கலைத் துறையில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று இவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரமிட் சாய்மீரா நினைத்தால் முடியும். தசாவதாரம் படத்தின் வசூல் 100 கோடி என்று தங்கள் வலைப்பூவில் செய்தி வெளியிட்ட பிரமிட் சாய்மீரா குருவி படத்தின் வசூல் பற்றியும் செய்தி வெளியிட்டால் இந்த கொலைவெறி கூட்டத்தின் பிரச்சாரத்துக்கு சாவு மணி அடிக்கப்படும்
Friday, June 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை :-)
//சமீபத்தில் வெளியான குருவி படம் பற்றி ஒரு மோசமான மனோபாவம் குறிப்பிட்ட சில ரசிகர்களிடமும், சில வலைப்பதிவர்களிடம் நிலவுகிறது//
ஒருவேளை இந்த வலைப்பதிவர்களுக்கு துட்டு கிட்டு குடுத்து கவர் பண்ணீட்டாங்களோ? அய்யோ தெரியாமப் போச்சே....
//ஆனால் அப்போது எல்லாம் தென்படாத கொலைவெறி குருவி படத்துக்கு மட்டும் இவர்களுக்கு வந்து இருக்கிறது என்பதே இது ஒரு சதிவலை என்பதற்கான ஆதாரம். //
ஓஹோ...
//குருவி படத்தின் வசூல் பற்றியும் செய்தி வெளியிட்டால் இந்த கொலைவெறி கூட்டத்தின் பிரச்சாரத்துக்கு சாவு மணி அடிக்கப்படும்//
நல்ல படத்துக்கு கல்லா கட்டும். ஆனா கல்லா கட்டறதெல்லாம் நல்ல படமில்லே..
//தலைவர் கலைஞர் அவர்களின் குடும்பத்தில் இருந்து மேகும் ஒருவர் கலைத் துறையில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று இவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள்//
அதெல்லாம் ஒரு புண்ணாக்குமில்லே. படம் நல்லா இருந்தா, எடுத்தவன் யாரு, நடிச்சவன் யாருன்னு பேதம் இல்லாம தலைல தூக்கி வெச்சிகினு ஆடறவன் தான் தமிழ் சினிமா ரசிகன்...
அரசியல் பண்ற எடத்துல அரசியல் பண்ணோணும்... சினிமா பண்ற எடத்துல சினிமா பண்ணோணும்.. ரெண்டுத்தையும் போட்டு ஒளப்பக்கூடாது..
//தலைவர் கலைஞர் அவர்களின் குடும்பத்தில் இருந்து மேகும் ஒருவர் கலைத் துறையில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று இவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள்//
இந்த பதிவர் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனபக்குவம் கொண்டவராக இருந்தால் ஒரே வரியில் சொல்லும் கருத்து இதுதான்.
உதயநிதியை ஒரு முறை கஜினி முகமது பாடம் படிக்க சொல்லுங்கள். நன்றி.
//அதெல்லாம் ஒரு புண்ணாக்குமில்லே. படம் நல்லா இருந்தா, எடுத்தவன் யாரு, நடிச்சவன் யாருன்னு பேதம் இல்லாம தலைல தூக்கி வெச்சிகினு ஆடறவன் தான் தமிழ் சினிமா ரசிகன்...//
நல்ல ரசிகர்களை பற்றி ஏற்கனவே இந்த பதிவில் குறிப்பிடப்படுள்ளது
//அரசியல் பண்ற எடத்துல அரசியல் பண்ணோணும்... சினிமா பண்ற எடத்துல சினிமா பண்ணோணும்.. ரெண்டுத்தையும் போட்டு ஒளப்பக்கூடாது..//
ஒளப்புபவர்களுக்கு பதில் தான் இந்த பதிவு
உடன்பிறப்பு!
:-)))))
கலக்குறேள் போங்கோ!!!
ண்ணா...சரியா சொன்னீங்கண்ணா
ATM padathai koodathaan kevalapaduthunaanga.. Kuruvi was because more expectation from Gilli combo avlo thaan .. neenga kuruvi-ku ivlo support panrathai paartha neenga innum padathai paarkala polaruku ;-)
சதி எல்லாம எதுவும் இல்லை. கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா.........னு சொல்வாங்களே அது மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு படம் பார்க்க போறவங்க அங்க மகா கொடுமைய அனுபவிச்சா அத எங்க போயி கொட்டி தீக்கிறது. அதனால கிடைச்ச இடத்துல தங்களாட ஆதங்கத்த தீர்த்துக்கிறாங்க. நீங்க சமீபத்திய விஜய் படங்கள் எதுவும் பாக்கலையா?
நீங்க ஆதி படத்துக்கு வந்த மெயில் எல்லாம் பார்க்கலையா???
தற்கொலைக்கு எது பெஸ்ட் வழி... இந்த மாதிரி நிறைய ஃபார்வேர்ட்ஸ். அதுக்கு அஜித் ரசிகர்கள் தான் காரணம்னு பேசிக்கிட்டாங்க. இப்ப அரசியல் காரணமா?
படம் மொக்கையா இருந்தா எல்லாத்தையும் கிழிப்பாங்க. குறிப்பா ரஜினி, கமல், விஜய் படங்கள் தான்.
அழகிய தமிழ்மகனுக்கும் விமர்சனங்கள் பயங்கரமா இருந்ததே.
அரசியல் பண்ற எடத்துல அரசியல் பண்ணோணும்... சினிமா பண்ற எடத்துல சினிமா பண்ணோணும்.. ரெண்டுத்தையும் போட்டு ஒளப்பக்கூடாது..
jing-cha jing-cha jing..
கட்சித் தலைவர் குடும்பத்தில் ஒருத்தர் எடுத்த திரைப்படம் ஒரு வியாபார முயற்சி. அப்படத்தை விமர்சித்தால் கட்சியின் தொண்டனுக்குக் கோபம் வருவது ஏன்?
கட்சித்தொண்டன் தலைவனின் குடும்பத்தினரை ஏன் இப்படித் தாங்கிப் பிடிக்கவேண்டும்?
குருவி பட வசூலில் ஒரு பகுதிய உதயநிதி கட்சிநிதியாக வழங்கப் போகிறாரா என்ன?
வாரிசுகளை வளர்க்க இது ஒண்ணும் சங்கர மடம் இல்லையே?
பேத்தல்...கலைஞர் குடும்பத்தைப் பற்றி கிண்டலடிக்க இது போல ஒரு பதிவு போதும்.
மூன்றாம் தர நடிகன் விஜய் கூட இந்த வழியில் தன் படத்தைப் பற்றி வாதம் புரிந்திருக்கமாட்டார்.
:)
//
வாரிசுகளை வளர்க்க இது ஒண்ணும் சங்கர மடம் இல்லையே?//
:-D .ரிப்பீடேய்.
அழகிய தமிழ்மகன் வந்த போது நீங்கள் மெயில் ஐடி வச்சிருந்தா தெரிஞ்சிருக்கும். விஜயின் கோவணம் கிழியும் வரை ஜோக்கடிதிருந்தனர்.
போய் பய புள்ளைகளை படிக்க வைங்க :-)
ஏன் இந்த கொலை வெறி உடன்பிறப்பு?
கலைஞருக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை இப்படி ஒரு குப்பை படத்துக்கு வக்காலத்து வாங்குவதற்கு பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தரணி, ஜெயலலித்தாவிடம் 200 கோடி வாங்கி கொண்டு வேண்டுமென்றெ படத்தை Flop பண்ணிட்டார்னு சுப்ரமணியசாமி சொன்னதாக ஊர்ல பேசிக்குறாங்களே...நிஜமாவா??
//தரணி, ஜெயலலித்தாவிடம் 200 கோடி வாங்கி கொண்டு வேண்டுமென்றெ படத்தை Flop பண்ணிட்டார்னு சுப்ரமணியசாமி சொன்னதாக ஊர்ல பேசிக்குறாங்களே...நிஜமாவா??//
பாருங்க சுப்பிரமணி சாமியே இப்ப
நம்ம பக்கம் தான்
மன்னிக்கவும் உடன்பிறப்பு எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை... நீங்கள் இது உதயநிதி படம், விஜய் படம் என்கிறதை விட்டு வெளியே வந்து பாருங்கள் படட்த்தில் உள்ள அபத்தம் உங்களுக்கு தெரியும்.... ரஜினியே இந்தப்படதில் நடித்து இருந்தாலும் கிழி கிழி என்று ஏன்று கிழித்திருப்போம்... இங்கே நாங்கள் பணம் வாங்க்க்கி விமர்சனம் செய்வதில்லை... கொடுத்த பணத்துக்கு பயனாக ஒரு மண்ணும் இல்லையே என்கிற ஆதங்காத்தில் எழுதுகிறோம்... ஒவ்வொருவர் விமர்சானமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.... இதற்கு மேல் உங்களுக்கு புரியவைக்க எனக்கு தெரியவில்லை
Post a Comment