இந்த கதை நடந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் இருக்கலாம். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. கூடவே சரிக்கு சமமாக ஓடுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பாதியிலேயே ஓடமுடியாமல் நின்றுவிடுபவர்கள் பாவம். சில பேர் மட்டும் காலத்தின் கால் சக்கர வேகத்தையும் கடந்து ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வரலாறு இவர்களை தான் தன் செல்லப்பிள்ளையாய் தத்தெடுத்துக் கொள்கிறது.
அந்த இரு இளைஞர்களும் இருபதுகளில் இருக்கிறார்கள். எளிமையான தோற்றம். கிராமத்து வாசனை கிஞ்சித்தும் மாறவில்லை. கண்களில் மட்டும் எதிர்காலம் குறித்த ஒரு லட்சம் வாட்ஸ் ஒளி. மெரினா கடற்கரை சாலையில் மகிழ்வாக பேசியபடியே நடக்கிறார்கள். அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அவர்களிருவருமே மறந்திருக்க முடியாத மாலை அது. நம்பிக்கையை தவிர்த்து வேறெந்த சொத்து, சுகமும் இல்லாதவர்கள் இருவரும்.
“நண்பா! நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் ஒரு நாள் இந்த கடற்கரையே என்னை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளருவேன்!”
“நிச்சயமாக நண்பா. நம் சாதனை சாமானியர்களுக்கும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!”
“இதே கடற்கரைச் சாலையில் எனக்கு ஒரு சிலை வைக்கப்படும் அளவுக்கு நான் முன்னேற வேண்டும்”
“அந்த சிலையை வைக்கும் அதிகாரத்தில் நான் அமரவேண்டும்”
அந்த நண்பர்களின் வேடிக்கை பேச்சு அரைநூற்றாண்டு கழித்து நனவாகியது. சென்னை கடற்கரை சாலையில் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. சிலையை வைத்தவர் தமிழாய் வாழும் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். இந்த கதையை சிவாஜி சிலை திறப்பு விழாவில் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நடிகர் திலகத்தின் ஆசையை நிறைவேற்றியது மட்டுமல்ல, இன்னும் பல கோடி தமிழர்களின் ஆசைகளையும் தலைவர் கலைஞர் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் செய்ய இன்னும் கூட ஒரு நூறாண்டு போதாது. தமிழ் போல காலமெல்லாம் வாழ்ந்து இயற்கையை வென்று தமிழர்களுக்காக கலைஞர் உழைக்க, வாழும் தமிழ் பிறந்த தினமான இன்று தமிழன்னையை வேண்டுவோம்.
Tuesday, June 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
எறும்பும்,தேனீயும் பொறுமும் வண்ணம்,
எவரெஸ்டும்,கிளிமஞ்சாரோவும் குன்றும் வண்ணம்,
வர்ணங்காப்போர் பதுங்கும் வண்ணம்
ஒளி தரும் சூரியனே
வாழ்க பல பத்தாண்டு
நடிகர் திலகத்துக்கு சிலை தந்த தோழன் தலைவர் கலைஞர் நீடூடி வாழ்க.
நானும் உங்களோட கலந்துக்கணும்
எப்படின்னு தெரியல .....
உதவமுடியுமா ??????
உடன்பிறப்பு வெண்ணை!
உங்கள் ஜிமெயில் முகவரியை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அழைப்பு அனுப்பி வைக்கிறோம்.
அன்புடன்
லக்கி
அண்ணா கலைஞர் வலை பூவில் இணைந்துவிட்டேன் ...நன்றிகள் பல....
உங்களது வலை பூவிலும் இடம் கிடைக்குமா??
அன்புடன் வெண்ணைய்
Dear TN brothers and Sisters!
We wish a long and happy life to our beloved Great Leader!
But We wish a long and happy life for all TN-fishermen and their families too!SLN continue their killings of TNFishermen+SLTamil refugees!
Hon.Pranab Mukerji came to MKs Birthday!Good!! But if PMukerji visited TNFishermen/SL-Tamil refugees and talk to them,listen to them...BEST!Warning SL.Ambassador is GREAT!!
தமிழாய் வாழும் தலைவர் டாக்டர் கலைஞர் இன்னும் பல ஆண்டு வாழ்ந்திட விரும்புகிறேன். அருமையான தளத்தை நிர்வகிகும் நன்பர்களுக்கு நன்றிகள் பல. வாய்ப்பளிப்பின் நானும் இங்கே சேர்ந்திட விரும்புகிறேன். நன்றி கண்ணன்
malath.kannan@gmail.com
Post a Comment