Thursday, April 17, 2008

கலைஞர் கமல்ஹாசன் அம்பானி

சாமி கும்பிடவில்லையென்றால் ஒரு முன்னேற்றமும் கிடைக்காது என்று காலம் காலமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆன்மீகத்தை திணிப்பதால்தான் தலைமுறை தலைமுறையாக அது தொடருகிறது. இதை உடைக்க முக்கிய ஆயுதம் நாத்திகர்களாக இருந்து வெற்றி அடைந்தவர்களை முன் நிறுத்துவதே. அப்படிப்பட்டவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளும் பதின்ம வயதினர் பகுத்தறிவு பாதைக்கு பெருமளவில் திரும்பும் வாய்ப்புள்ளது. முன் காலத்தில் கூட அரசன் பின்பற்றிய மதங்களையே மக்கள் அதிக அளவில் பின்பற்றினர்.(உதாரணம் :அசோகர் - புத்த மதம் மற்றும் பாண்டிய மன்னர் சமன மதத்தை பின்பற்றுவதால் அனல்வாதம் புனல்வாதம் செய்து சைவ சமயத்திற்கு அவரை மாற்றியது). எனவே வெற்றி பெற்று நான் நாத்திகன் என்று அறிவிப்பவராலேயே பகுத்தறிவு இயக்கம் வலுப்பெறும்.


இதற்கு நம் கண் முன்னே உதாரணமாய் இருப்பவர்கள் கலைஞர் மற்றும் கமல்ஹாசன். எனவே வரும் தலைமுறைக்கு இவர்களை உதாரணமாய் காட்டி பகுத்தறிவை வளர்ப்போம். இதில் கலைஞர் அடைந்த வெற்றி மத நம்பிக்கைகள் உள்ளவர்களை எதிர்த்து போராடி பெற்ற வெற்றி. கலைஞர் பகுத்தறிவு இயக்கத்துக்கு செய்த மிகப்பெரும் உதவி இதுவே. அம்பானி, பில்கேட்ஸ்,மிட்டல் மற்றும் நடிகர்கள் நாங்கள் நாத்திகர் என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

6 comments:

said...

ஆஹா... உள்ளே வந்த முதல் நாளே படபடவென பட்டாசு மாதிரி வெடிச்சுத் தள்ளுறீங்களே முரளி?

பதிவை ஒரே பாராவாக இவ்வளவு பெரியதாக போடாமல் இடையிடையில் பத்தி பிரித்தால் வாசிக்க இலவுகாக இருக்கும். பதிவும் கொஞ்சம் பெரியதாக இருப்பது போல தெரியும்.

said...

அடுத்த பதிவுகளில் திருத்திக்கொள்கிறேன். ஊக்கப்படுத்தியதற்கு நன்றி

said...

பகுத்தறிவுப் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் மு.க அவர்களை வருக,வருக என வரவேற்கிறோம்.

தெய்வநம்பிக்கைகளிலும்,மூடநம்பிக்கைகளிலும்
மூழ்கிகிடக்கும் தமிழர்களிடம் அவர்களது நம்பிக்கைகளுக்கு எதிராக நின்று போராடி கலைஞர் பெற்றிருக்கும் வெற்றி,செய்துள்ள சாதனை அளப்பரியது.

Anonymous said...

MK, still having hindu sentiments (He cannot even change his wives). SO he rejected from the list. He just made money out of that.

Kamal, he is living like western, it can be possible for actors. Not the real life labours.

அம்பானி, பில்கேட்ஸ்,மிட்டல்.....I like big interest but they are all devotees....Search for Ambani/Mittal visits to temple.

said...

"இதற்கு நம் கண் முன்னே உதாரணமாய் இருப்பவர்கள் கலைஞர்"

Hello brother what the meaning he weare YELLOW colour sallvai??? it is for பகுத்தறிவை வளர்ப்போம்???

it is a good joke.

Anonymous said...

பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்படும் திறனை அவர்களே இயல்பாக அடையும் போதுதான் பயன் கிடைக்கும்.மற்றவர்களைப் பார்த்து மனம் மாறுவது உண்மையானதாக இருக்காது.
இருந்தாலும் celebrity களின் சிந்தனை நம் சிந்தனையுடன் ஒத்து போகிறது என்பது தெரிய வரும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.