தொலைக்காட்சியில் திருநங்கையான சக பதிவர் ஒருவர் பங்கு பெற்ற நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள். அவர் தன் அனுபவத்தை விவரிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக கண்கள் குளமாகி இருக்கும். இப்படி சமூகத்தில் உரிய அங்கிகாரம் கிடைக்காமல் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முறையான அங்கிகாரத்தை தலைவர் கலைஞர் அவர்களின் அரசு அளித்துள்ளது
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் தால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் பால் இனத்தவருக்கு என் குடும்ப அட்டையில் மேலும் புதிதாக ஒரு பால் சேர்க்கப்பட்டு அதை சில திருநங்கைகளும் பெற்று இருக்கிறார்கள். இந்த புரட்சியின் மூலம் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த நாற்பது ஆயிரம் பேர் பயனடைவர். குடும்ப அட்டை போல் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் இதே போல் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். வரும் காலத்தில் அப்படி மாற்றம் நிகழுமானால் அதன் முழு பெருமையும் தலைவர் கலைஞர் அவர்களையே சேரும்
பாலம் கட்டுவது பற்றி பேசினால் தலைவர் கலைஞர் அவர்கள் விளம்பரம் தேடுகிறார் என்று அக்கறைப்படும் பத்திரிக்கைகளே இதே போல் சத்தம் இல்லாமல் தலைவர் அவர்கள் செய்து வரும் சாதனை பற்றி நீங்கள் என்றாவது மக்களிடம் கொண்டு சென்றது உண்டா. தலைவர் அவர்களிடம் குறை காண வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா
Saturday, April 05, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
உடன் பிறப்பு,விளிம்பு நிலை மக்களுக்காக கண்ணீர் விடவும்,அவர்களுக்கு ஏதாவது செய்ய மனமும் உள்ள ஒரே தலைவன் தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் மட்டுமே.
மூன்றாம் பாலுக்கு அங்கிகாரம்
வரவேற்க்கதக்க ஒன்று, கலைஞர் ஐயாவுக்கு எனது பாராட்டுக்கள்
கருணாநிதியின் அரசியல் எனக்குப் பிடிக்காது என்றாலும் அவர் இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததற்காக பாராட்டுகிறேன்.
வரவேற்க்கதக்க சாதனை, கலைஞர் அவர்களின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்...
வாழ்க கலைஞர் வளர்க அவர் தொண்டு
வாழ்க கலைஞர் வளர்க அவர் தொண்டு
Post a Comment