Thursday, April 03, 2008

ராமர் போய் ஒகேனக்கல்

பாரதீய ஜனதா என்று ஒரு கேவலமான கட்சி. இவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமானால் ஒன்று எதையாவது இடிக்க வேண்டும், அல்லது கலவரம் வந்து சில‌ ஆயிரம் பேர் மாள வேண்டும், உயிர் துறப்பவர்கள் இந்துவா, முஸ்லிமா என்பது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. உருப்படியான ஒரு பிரச்சினையை மக்களிடம் எடுத்து செல்ல துப்பில்லாத இந்த இரத்தம் குடிக்கும் கட்சி இப்போது கர்நாடகாவில் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் மொழி வெறி

கர்நாட்காவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுவிட்ட பாரதீய ஜனதாவுக்கு சுழல் முறை ஆட்சி என்ற திட்டம் தோல்வி அடைந்ததும் அதன் அதிகார வெறி முற்றிவிட்டது போலும். மே மாதம் தேர்தல் என்ற நிலையில் இருக்கும் கர்டநாடகாவில் தன் இரத்த தாகத்தை தீர்த்துக் கொள்ள ஓகேனக்கல் பிரச்சினை வரப்பிரசாதமாக் கிடைத்து இருக்கிறது. மனித பிணங்களை ஓட்டுகளாக மாற்றுவதில் தான் இவர்கள் மன்னர்கள் ஆயிற்றே

தமிழ்நாட்டில் வந்து ராமர் பாலம் என்ற பெயரில் ஊளையிட்ட இந்த நரிக‌ளின் வால்க‌ள் ஒட்ட நறுக்கப்பட்டன. இப்போது கர்நாட‌காவில் ராமர் மற்றும் இந்துத்வா வெறி செல்லாது என்று அறிந்து கொண்டு மொழி வெறியை வளர்ப்பதில் முன் நிற்கின்றனர். மொத்தத்தில் இவர்களுக்கு என்றுமே மக்களை பிளவுபடுத்தி அதில் இன்பம் காண்பது இந்த பண்டாரங்களுக்கு தான் வழக்கமாகிவிட்டது

2 comments:

said...

//பாரதீய ஜனதா என்று ஒரு கேவலமான கட்சி//

இதை கூட்டணியிலும் , மந்திரிசபையிலும் அங்கம் வகித்த போது ஏன் தி.மு.க சொல்லவில்லை?

**

மத்தியில் அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கு எந்த கேவலமான கட்சியிலும் தி.மு.க கூட்டணி சேரலாம் என்றால், மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதற்கு எந்த கேவலமான விசயத்தையும் பாரதீய ஜனதா செய்யலாம்.

கேவலமானது எது என்று , கேவலமானதுடன் கூட்டணியில் இல்லாதபோதுமட்டும் சொல்வது கேவலமானது இல்லையா?

**

சேது பாலத்திட்டத்தில் காங்கிரஸ் , வட மாநிலதேர்தலுக்காக சந்தில் சிந்து பாடியது . இப்போது கர்நாடக தேர்தலுக்காக ஒக்னேகல் விசயத்திலும் சந்தில் சிந்துபாடப்போவது நிச்சயம்.

சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும், தமிழகத்துக்கு தண்ணீர் விசயத்தில் அல்வா கொடுத்து நீதிமன்றங்களை கேள்விக்குறியாக்கும் இந்த நேரத்தில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி ஆட்சியில் உள்ளது.
இந்த "காங்கிரஸ் கேவலமான கட்சி" என்று நாளை ஒரு வேளை கூட்டணி மாறினால் அப்புறம் நீங்கள் சொல்லலாம். இப்போது சொல்ல வேண்டாம்.

**

அரசியலுக்கு கூட்டணி அவசியம், அது போல அதிகாரப்பகிர்வு கிடைக்கும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்வதும் அவசியம்.
ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் ஒரே காரணத்தினால் நமது உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது.

என்ன செய்யப்போகிறார் கலைஞர்?

குறைந்த பட்சம், இந்தப் பண்டாரங்களுடன் தி.மு.க எக்காலத்திலும் கூட்டணி அமைக்காது என்று கலைஜர் சொல்லத் தயாரா?

said...

இந்த கேவலமான பாரதீய ஜனதா கட்சி எங்கெல்லாம் காலடி பதிக்கிறதோ அங்கெல்லாம் இரத்தம் தான் மிஞ்சும். இத்தகைய கேவலமான நிலையில் மற்ற கட்சிகள் இருக்கவில்லை