Thursday, April 17, 2008

மைதானத்தை தாண்டி விழுந்த மகா சிக்சர்

இன்று இடஒதுக்கீட்டில் ஒரு முக்கியமான நாள். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்த பணிகளில் இது முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த ஆட்சியில் கல்வித்துறை இரண்டாக பிரிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது, நுழைவுத்தேர்வு ஒழிப்பு என அடுத்து அடுத்து அடிக்கப்படும் சிக்சர்களில் இது மைதானத்தை தாண்டி விழுந்த மகா சிக்சர்.
மேலும் ஐ ஐ டி களில் இந்த ஆண்டு 9% இடங்களை பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்போவதகவும் வரும் ஆண்டுகளில் இதை அதிகரித்து மூண்று ஆண்டுகளுக்குள் 27% ஒதுக்கீடு செய்யப்போவதகவும் ஐ ஐ டி இயக்குனர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கபட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நமக்கு மேலும் ஒரு வெற்றி

3 comments:

said...

சோதனை பின்னூட்டம்

said...

தலைப்புக்கும், தலைப்புக்கான மேட்டரும் கலக்கல் :-)

said...

இரண்டாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே சிறப்பு ஐ.ஐ.டி வகுப்புகளுக்கு சென்று. ஒரு பெரிய QB(Question Bank) வாங்கி வைத்துக்கொண்டு மனப்பாடம் அடிப்பவர்களுக்கு மட்டுமே ஐஐடி சொந்தம் என்ற காலம் இனியாவது மாறட்டும்.