தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை மற்றும் 2006-07ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இதனை செயல்படுத்துவதன் முதல் கட்டமாக இதுகுறித்து விரிவான ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு பரிந்துரைக்குமாறு நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான தமிழக அரசின் பிற்பட்டோர் நல ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் 99ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வருகிற 15ம் தேதி முதல் இந்த தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது என்று முதல்வர் கலைஞர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
செய்திக்கு நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
Thursday, September 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அப்படியே ஈழத்து பக்கமும் கொஞ்சம் கெல்ப் பணச்சொல்லுங்கோ லக்கி அண்ணா
அப்படியே ஈழத்து பக்கமும் கொஞ்சம் கெல்ப் பணச்சொல்லுங்கோ லக்கி அண்ணா
//ஈழத்து பக்கமும் கொஞ்சம் கெல்ப் பணச்சொல்லுங்கோ//
ஈழத்து மக்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லீங்களே!!!
Post a Comment