ஆட்டுக்கார அலமு முழங்குகிறாள்;
நாட்டுக்கொடி பறக்கும் கம்பத்தின் கீழ் நின்று!
அணியன்று பெரிதாக அமைத்திடுவோம் -அய்ந்தாறு பேர் போதும் ஆரம்பக் கட்டத்தில்!
அத்தனையும் நத்தைகளாய், சொத்தைகளாய்
அதுவே பழரசக் கிண்ணத்தில் பளபளக்கும் முத்துக்களாய்!
அவை தவிர நம்மிடம் அடிமை ஆட்டுக்குட்டிகள் தான்
தலையசைத்துத் தண்டனிட தாராளமாக உண்டே!
நானின்று நானிலத்தில் எதுவும் நடக்காது என்பேன்; என்
நா வசைந்தால் இந்த நாடே நடுங்கி ஆடுமென்பேன்.
அடிப்பதற்கு சாட்டை எடுத்தால் - அரசின்
அதிகாரிகள் கூட அடங்க வேண்டும்
அடியற்றிக் கை கூப்பிக் கிடக்க வேண்டும்
அல்லி ராணிக்கும் இல்லாத அதிகாரம் பெற்றவள் நான்;
அவை நடுவே ஆத்திரம் கொப்பளிக்க அன்றொருநாள்,
ஆவேச நடனம் ஆடியதை மறந்தீரோ அப்போதே!
இருந்தாலும் கூட;நான் அசையாமலே நான் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகள்நாட்டுத் தலைவர் தேர்தலில் அசைந்ததாக நானொரு பொய்யை
நாத் தழும்பேற நம்பும்படி சொல்லிவிட்டேன்
நம்புவோர் நம்பட்டும்; நம்பாதோர் நாசமாகப் போகட்டும்!
நமது நாட்டு வாக்காளர் நாலு காசு பார்க்கும் நேரம்
நல்ல தேர்தல் தினம்தானே?
நாட்டுத் தலைவர் தேர்தலிலே நான்
நாலாறு கோடி திரட்டியதும் அந்த விதம்தானே?
- தலைவர் கலைஞர்
Saturday, July 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அந்த அலமு முழங்கிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... அதனால் ஒன்றும் நடக்க போவதில்லை....
அல்லி ராணியின் தர்பார் இனி அவரின் இல்லத்துக்குள் மட்டும் தான்...
சரியான இடிப்புரைப்பு... இருந்தாலும் அடங்க மாட்டார் அந்த அலமு...
தமிழகத்தின் சாபக்கேடு, இவர் போன்ற ஒருவரின் கீழ் தமிழ் நாடு 9.44 வருடங்கள் இருந்தது...
இனிமேல் அதற்கு வாய்ப்பு இல்லை...
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
Post a Comment