Wednesday, August 08, 2007

கலைஞரின் ராஜதந்திரம்...

நேற்று குமுதம்.காமில் வெற்றிகொண்டான் அவர்களின் பேட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது அவர் கலைஞர் பற்றி கூறிய ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பானைக்கு சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், தலைவர் அவர்களின் சாதுரியம், ராஜதந்திரம் பற்றி அறிந்து கொள்ள இது ஒன்றே போதும்.

அந்த சம்பவம் இது தான்:
ஒரு முறை தலைவர் தஞ்சையில் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பரிசுத்த நாடார் அவர்கள், பரிசுத்த நாடார் அவர்கள் தஞ்சையில் மிக பெரிய கோடீஸ்வரர், அண்ணா அவர்களே எப்படி கலைஞர் அவரை எதிர்துது ஜெயிக்க போகிறார் என்று அச்சம் கொண்டிருந்திருக்கிறார், அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அண்ணாவிடம் தஞ்சைக்கு நான் சென்று பிரச்சாரம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார், அதற்கு அண்ணா அவர்கள் அதெல்லாம் வேண்டாம் கலைஞரே பார்த்துக் கொள்வார் என்று கூறியிருக்கிறார். பரிசுத்த நாடார் அவர்களை ஆதரித்து அய்யா பெரியார் அவர்கள் பொதுக் கூடத்தில் பேச வந்திருக்கிறார். அப்போது கலைஞர் அவர்கள் அய்யா அவர்களின் தொடக்க உரையை போய் பதிவு செய்து கொண்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த கூட்டத்தில் அய்யா அவர்கள் பேசியது: இந்த தொகுதியில் நம் அய்யா பரிசுத்த நாடார் அவர்கள் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து தி.மு.கவினுடைய பொருளாளர் கருணாநிதி போட்டியிடுகிறார், அவரை பற்றி உங்களுக்கு தெரியாது அவர் பெரிய திறமைசாலி, ரொம்ப கெட்டிக்காரர், பெரிய ராஜதந்திரி, அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று யாரலும் கண்டுபிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய ஆற்றல் உள்ளவர், அவரை எதிர்த்து இவர் (பரிசுத்த நாடார்) நிற்கிறார், என்று கூறி முடித்தவுடன் அதை பதிவு செய்து கலைஞரிடம் போய் போட்டு காட்டியிருக்கிறார்கள், அதை கேட்டவுடன் தலைவர் உடனே “கருணாநிதிக்கு அய்யா பெரியார் சர்டிபிக்கேட் “என்று அய்யாவின் துவக்க உரையை ஒரு நோட்டீசாக அச்சடித்து அந்த கூட்டம் முடிவதற்குள்ளாகவே அங்கே விநியோகித்திருக்கிறார்கள், அதை பெரியார் வாங்கி பார்த்த உடனே, பாருங்கள் இப்போது தான் அவர் பற்றி கூறினேன் அதற்குள்ளே அவர் யார் என்று நிருபித்துவிட்டார், என்று கூறியிருக்கிறார். அந்த தேர்தலில் கலைஞர் அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். கலைஞர் அவர்கள் எவ்வளவு பெரிய ராஜதந்திரி என்பது இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளளாம்.

5 comments:

said...

சூழ்ச்சிகளை வீழ்ச்சி காணவைத்தவர் தலைவர் கலைஞர். அவருடைய சாதுரிய தலைமையாலேயே கழகம் பொன்விழா கண்டு வைரவிழாவை நோக்கி வீரநடை போட்டு வருகிறது. வருணாசிரம சூழ்ச்சி அரசியலுக்கு சரியான மாற்றாக திராவிட அரசியலை முன்னிறுத்தியதில் தலைவர் கலைஞருக்கு மிகப்பெரிய பங்குண்டு.

தலைவர் கலைஞர் குறித்த அரியச் செய்தியை சொன்னதற்கு தோழர் அப்பாவி இந்தியனுக்கு நன்றி!

said...

கலைஞரின் மின்னல் வேக செயல்திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.பெரியார் கையாலேயே சிலை திறந்து வைக்கப்பட்ட பெருமையும் கலைஞருக்கு உண்டு.

said...

அரசியல் சாணக்கியன் எங்கள் கலைஞர். கலைஞர் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் மாதிரி, நின்னு செஞ்சுரி போடவும் தெரியும், இறங்கி சிக்ஸர் அடிக்கவும் தெரியும்.

Anonymous said...

தானைத் தலைவன் டாக்டர் கலைஞர் வாழ்க!

said...

தலைவர் தலைவர்தானய்யா..!!! அவர் ஜெயித்த விசயம் எனக்கு தெரிந்திருந்தாலும் இந்த துண்டு பிரசுரம் பற்றி தெரியாது.. தகவலுக்கு நன்றி உடன்பிறப்புக்களே..!!

எத்தனையோ சூழ்ச்சிகள் கழகத்தை அழிக்க நடந்த போதும் ஒரு உண்மையான ஜன நாயகவாதியாக நின்று கழகத்தை வழி நடத்தி செல்கிறார்...

சமீபத்தில் பேராசிரியர் அன்பழகனார் "அண்ணா மறைந்த போது கட்சியின் நிலை பற்றி கவலையோடு இருந்த போது, இனி கழகத்தின் நிலை என்ன என்ற கேள்வியோடு இருந்த போது கட்சியின் தலைமை பொறுப்பை எற்று இன்றைக்கும் கட்சியை கட்டுக்கோப்போடு நடத்தி வருகிறார்" என்று கூறினார்...


ஒரு முறை இந்திரா காந்தி பிராந்திய கட்சிகளை கலைக்க எண்ணியபோது, எம்.ஜி. ராமசந்திரன் தனது கட்சியை அனைந்திந்திய என்று மாற்றினார்... ஆனால் இன்றைக்கும் தமிழ் நாட்டுக்காக தமிழ் திராவிட இனத்துக்காக இருக்கும் ஒரே கட்சி நம் தானை தலைவரின் தலைமையின் கிழ் செயல்படும் நமது கழகம் தான் என்று மார்தட்டி பெருமை கொள்வோம் உடன்பிறப்புக்களே..!!