Monday, April 13, 2009

வைகோவுக்கு வந்த கட்டளை பலன் தருமா

அ.தி.மு.க.வுடன் நெடுங்காலமாக கூட்டணி வைத்து இருக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோ இந்த தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் தனக்கு உரிய மரியாதை தரப்படாததோடு உதாசீனப்படுத்தப்படுவதாகவும் உணர்ந்தார். கூட்டணியை விட்டு விலகி வேறு அணி அமைக்கும் அளவுக்கு அவர் புறந்தள்ளப்பட்டார். ஆனால் திடீரென்று நான்கு சீட்டுகளுக்கு சம்மதித்து தொகுதி உடன்பாடு கண்டார். இதற்கு வைகோவுக்கு ஈழத்து உறவுகளிடம் இருந்து வந்த அன்புக்கட்டளை தான் காரணம் என்று வலைப்பூவில் எழுதுகிறார்கள்

இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட்டால் தான் இந்தியாவிடம் இருந்து எந்தவொரு உதவியும் எதிர்பார்க்க முடியும் அதனால் தான் வைகோ அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்று கூட்டணியில் தொடர்வதாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டது. அப்படியே தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தாலும் தான் விரும்பியது நடக்காவிட்டால் ஜெயலலிதா பா.ஜ.க.வை சும்மா விடுவாரா என்பது சந்தேகமே. அத்வானியை நியாபக மறதிக்காரர் என்று விமர்சித்தது இதே ஜெயலலிதா தான்

ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பு உலக பிரசித்தி. ஒருவேளை இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட்டால் தன்னை மீறி பா.ஜ.க. புலிகளுக்கு உதவி செய்ய ஜெயலலிதா அனுமதிப்பாரா என்பதும் சந்தேகமே

இறுதியாக ஒரு கேள்வி, அப்படியே ஜெயலலிதா உதவுவதற்கு முன் வந்தாலும் தொகுதி பங்கீட்டுக்கே அடுறா ராமா தாண்டுறா ராமா என்கிற ரேஞ்சில் எல்லா கரணங்களும் போட்டு தான் பெற வேண்டி இருக்கிறது, நாலு சீட்டுக்கே நானிக் குறுகி நிற்க வேண்டி இருக்கிறது, ஈழத்துக்கான உதவிகள் மட்டும் கேட்ட உடனேயே கிடைத்து விடுமா

எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் எது எழுதினாலும் படிப்பவர்கள் படிப்பார்கள் என்கிற எண்ணத்தில் பலரும் எழுதிவருகிறார்கள், அவர்கள் எண்ணம் நிறைவேறினால் நமக்கும் மகிழ்ச்சி தான். கேட்டவுடனேயே உதவிகள் கிடைக்கும் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தான்

இதே கருத்தை கோவியார் தனக்கே உரிய பாணியில் இங்கே அலசி இருக்கிறார்
கொஞ்சம் புலம்பல்

9 comments:

said...

எதிர்வினைப் பதிவோ என்று நினைத்தேன். பதிவுக்கு இணைப்புக் கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி !

said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

Anonymous said...

//Rajaraman said...
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
10:00 AM, April 13, 2009//

யாருய்யா இவரு. தமிழ்புத்தாண்டு தை முதல் தேதிக்கு மாறியது தெரியாதா. இவ்வளவு நாள் வேறு உலகத்துல இருந்திருப்பாரு போல

said...

//கோவி.கண்ணன் said...

எதிர்வினைப் பதிவோ என்று நினைத்தேன். பதிவுக்கு இணைப்புக் கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி !//

நன்றி கோவியாரே

said...

//Blogger கோவி.கண்ணன் said...

எதிர்வினைப் பதிவோ என்று நினைத்தேன். பதிவுக்கு இணைப்புக் கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி //

நான் எழுதினால் ஏதோ கட்சிக்காரன் பிதற்றுகிறான் என்பார்கள். பதிவெழுதிவிட்டு பார்த்தால் நீங்களும் அதே தலைப்பில்...அதான் உங்கள் சுட்டியையும் இணைத்துவிட்டேன். மீண்டும் நன்றி கோவியார்

said...

நாணி கோணி நிற்பதா இப்போது முக்கியம்
படுகொலையை திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
அதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் தன்னை தமிழினக் காவலன் என்று சொல்லிக் கொள்ளும் தலைவர் ஒருவர்.

said...

//Blogger ஸ்ரீசரண் said...

நாணி கோணி நிற்பதா இப்போது முக்கியம்
படுகொலையை திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
அதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் தன்னை தமிழினக் காவலன் என்று சொல்லிக் கொள்ளும் தலைவர் ஒருவர்.//

தேர்தலுக்கு முன்னாடியே நானிக் கோணி நிற்க வேண்டி இருக்கிறதே. அம்மா ஜெயித்து விட்டால் திரும்பி கூட பார்க்கமாட்டார் அப்புறம் எப்படி போய் நிறுத்தச் சொல்வது

Anonymous said...

அம்மா ஒன்றும் கிள்ளிக்கொடுக்க வேண்டாம்.அள்ளிக் கொடுக்கின்ற காங்கிரஸ்காரன்"க"யை உடைக்க வேண்டும்

Anonymous said...

VOTE FOR DMK & CONGRESS!LET THE GENOCIDE OF EEZHAM TAMILS CONTINUE!