Saturday, July 05, 2008

ஓடி ஒளிந்து ஓய்வெடுப்பவரும் - ஓடியாடி உழைப்பவரும்!

தொண்டர்களை போராட்டத்தில் ஈடுபடும்படி தூண்டிவிட்டு - தான் அதில் பங்கேற்காமல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அறிக்கைமேல் அறிக்கை விட்டு குளு குளு கொடநாட்டு அரண்மனையில் தோழி சகிதம் ஓய்வெடுத்து வருபவர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்.

தலைவர் கலைஞரின் பொது வாழ்வில் ஓய்வு என்ற சொல்லுக்கே இடமில்லை. அண்மையில் ‘இந்தியா டுடே’ இதழ் தயாரித்த கலைஞர் சிறப்பிதழில் கலைஞரின் ஒரு நாள் - காலைத் தொடங்கி இரவு வரை அவரின் பணிகளை கவனித்து சொல்லும் போது காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11.30 மணி வரை அவர் உழைத்துக் கொண்டிருப்பதாக அந்த இதழ் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது. சதா சர்வகாலமும் அவர் விழித்துக் கொண்டு உழைத்துக் கொண்டே இருப்பதால் தமிழகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொது வாழ்வில் அவர் கண்ட களமும் பெற்ற விழுப்புண்களும் இன்று வெத்துவேட்டு அறிக்கை நாயகி அறியாது - புரியாது.

தலைவர் கலைஞர் அவர் உழைப்பு, கண் துஞ்சாமை, தியாகம், போராட்டம், விழுப்புண் ஆகிய அழகிய நற்பண்புகளால் அரசியலில் அனைவராலும் மதிக்கப்படுபவர்.

1945-ஆம் ஆண்டிலேயே புதுவையில் திராவிடர் கழக மாநாட்டில் ‘சிவகுரு’ சீர்திருத்த நாடகத்தில் நடித்ததற்காக எதிரிகளின் கடுந்தாக்குதலுக்கு ஆளானார் தலைவர். இதே ஆண்டில் அவர் மீது சட்ட எரிப்பு வழக்கு 1948-ஆம் ஆண்டு திருவையாற்றில் கறுப்புக் கொடிப் போராட்டம், 1950-ஆம் ஆண்டு இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், 1951-ஆம் ஆண்டு இராஜாஜிக்கு கருப்புக் கொடி போராட்டம், 1953-ஆம் ஆண்டு கல்லக்குடிப் போராட்டம், 1957-ஆம் ஆண்டு நங்கவரம் விவசாயிகள் போராட்டம், 1958-ஆம் ஆண்டு நேருவுக்கு கருப்புக் கொடி போராட்டம், இதே ஆண்டில் திருச்சி பீடித் தொழிலாளர் போராட்டம், 1959-ஆம் ஆண்டு தஞ்சை எஸ்.எம்.டி. பேருந்துத் தொழிலாளர் போராட்டம்,
1962-ல் விலைவாசி உயர்வு போராட்டம்,

1963 - 1964 - 1965 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தனிமைச் சிறை, 1967-ல் சைதைத் தொகுதியில் போட்டியிட்ட போது எதிரிகளால் கடுந்தாக்குதலுக்குள்ளானார்.

இப்படியாக கலைஞரின் போராட்டக்களங்கள் நீள்கிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 2001-ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று ஜெயலலிதா ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் அடித்து இழுத்துச் சென்ற காட்சியை இன்றளவும் எந்தத் தி.மு.க. தொண்டனும் மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான். கிறுத்துவர்களுக்கு புனித வெள்ளி, இஸ்லாமியர்களுக்கு ஈகைத் திருநாள் போல் தி.மு.க. தொண்டனுக்கு ஜூன் 30.

சீமாட்டிகளும் சிங்காரிகளும் கலைஞரின் தியாகத் தழும்புகளுக்கு அருகே கூட வர முடியாது. அவர் ஒரு சிறைப் பறவை.

கலைஞரின் நல்லாட்சியை இன்று அகில இந்தியாவே வியந்து போற்றுகிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆர்.இரகுபதி அவர்கள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களை பாராட்டியது வரலாற்று வரிகளில் அடிக் கோடிட்டுக் காட்ட வேண்டிய ஒன்று.

"பொறுமை, விருப்பு, வெறுப்பற்ற

உயர்ந்த மன உறுதி - நீதித்துறைமீது

மரியாதை கொண்ட மிகச் சிறந்த ராஜியவாதி

முதல்வர் கலைஞர் அவர்கள், அரசின் தலைவரான

முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை

வைத்திருக்கிறேன். எந்தப் பிரச்சினை

களுக்கும் லாவகமாக தீர்வு காண்பதில்

திறமைக்குப் பெயர் கலைஞர்"

என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அறிக்கை ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் விடுத்த குட்டு ஒன்றா இரண்டா?

உச்சநீதிமன்றத்தால் தகுதி இழப்புக்குள்ளாகி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தனது மனசாட்சியை அவர் கேள்விக்குள்ளாக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் அடங்காப்பிடாரியின் மனசாட்சியே கேள்விக்குள்ளாக் கியது.

நீதிபதிகளைப் பற்றி எந்த விவாதமும் உள் நோக்கம் கற்பிக்கிற வகையில் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படக்கூடாது என்று அரசியல் சட்டப்பிரிவு 211 தெளிவாக கூறுகிறது. ஆனால் இதையும் மீறி 4.2.2005 அன்று தமிழக சட்டப்பேரவையில் நீதிபதிகளை தாறுமாறாக விமர்சனம் செய்தவர் அரிதாரபொம்மையான அம்மையார்.

முதல்வர் தலைவர் கலைஞரை இந்தியாவின் அனைத்துத் துறை வல்லுனர்களும் பாராட்டுகின்றனர். காரணம் அவர் உழைப்பாளி, தியாகி, இன்முகத்துடன் மக்களுக்காக சிறைச் சென்றவர்.

அலங்காரப் பதுமைகள் - தங்கம் முலாம் பூசிய அலுமினியப் பளிங்குகளால் கலைஞரை ஒன்றும் செய்துவிட முடியாது.

தலைவர் கலைஞர் அலங்கார பொம்மையல்ல - தியாகங் களால் செதுக்கப்பட்ட சிற்பம். எத்தனையோ ஜூன் 30களை கண்டவர்.

(நன்றி : முரசொலி)

2 comments:

Anonymous said...

ஒரு ந்டிகரின் காதலி என்பதைத் தவிர என்ன தகுதி இருக்கிறது?
இனம் இனத்தோடு சேரும் என்பதை நிரூபித்த பின்னும் இன்னும் அங்கே எலும்புத் துண்டுக்கும்,செருப்படிக்கும் காத்திருக்கும் தமிழினமே எண்ணிப்பார்.

இன்றைய காலகட்டம் தமிழினத்தின் முக்கிய கால கட்டம்.30 கல் தொலைவிலே தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது.அதைப் பார்த்தும் எலும்புத் துண்டின் ஆசை போகவில்லையா??

பொறுமையின் எல்லைக்கே போய்விட்டார் கலைஞர்.பழி வாங்கும் எண்ணமில்லை.தொண்டறத்தின் சிகரமாக,ஏழை பங்காளனாக,தமிழ் ,தமிழின விடி வெள்ளியாக ஓயாத உழைப்பு.

தமிழினத்தின் ஓங்கிய குரலாய் உலகே கேட்டு விழித்திட உதறி விட்டு உங்கள் வீட்டிற்கு வாருங்கள் கோவலர்களே!

said...

i dont know if the owners of this blog will be comfortable to allow this comment to be on the comment section ( in my view wont mostly ). It was very good page to come through though i am not a pro dmk guy i do admire a man like KK who with the greatest charisma can be in politics and certainly he deserves larauls how ever contreversys exists about him for his infamous character and reputation among those who had read those diplomatic and cunning traits of his which certainly is must for a politician other wise he cant be one of the greatest. Fine , i found prof. anbazhagan photo , Mr. Stalin photo in this page on header. Just wondering why Mr. Azhagiri, Mrs Kani mozhi , Mr. Udayanidi Stalin photos are not displayed ?? for any specific reasons ?. Because for young generation who keep reading through political updates since 1988 as well as reading through history of tamil politics nothing can be more entertaining if all the blood of Mr. KK doesnt come into politics. They should.. They will ahve the same blood and same skill of KK and can be great leaders like monarch of LONDON. Why not ? A democracy in monarch i possible why not.