கழகத்துக்கு எதிரான செய்தி எப்படா வெளிவரும் என்று நாக்கை தொங்க போட்டு அலைந்து கொண்டு இருக்கும் எச்சி இலை பதிவர் ஒருவர் கல்கி இதழில் வெளியான கட்டுரை ஒன்றை தன் எச்சி இலையில் வெளியிட்டார். அந்த எச்சி இலையில் இருந்து வெட்கமே இல்லாமல் சுட்டு அதே பதிவை மற்றொரு பதிவர் வெளியிட்டு இருந்தார். அதுவும் எக்கு தப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சூடான இடுகைகளிலும் இடம் பிடித்தது. இந்த மகத்தான காரியத்தை செய்த அந்த எச்சி இலை பதிவருக்கும் அதை சுட்டு தன் பதிவில் வெளியிட்ட பாசறை பதிவருக்கும் கழகம் சார்பாக எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்
பொதுவாக உடன்பிறப்புகளுக்கும் மற்ற கட்சியினருக்கும் ஒரு மாபெரும் வேறுபாட்டினை கண்கூடாக காணலாம். உடன்பிறப்புகள் என்றுமே தங்கள் கட்சி விசுவாசத்தை காட்ட தவறுவதில்லை. நான் தி.மு.க.காரன் என்று மார்தட்டி சொல்வார்கள். இதே அளவு நம்பிக்கையுடன் நான் இந்த கட்சிக்காரன் என்று சொல்லும் தொண்டர்கள் மற்ற கட்சிகள் குறைவு. இவர்களிடம் ஒரு பொதுவான குணத்தை காணலாம். தான் யாரை ஆதரிக்கிறோம் என்று இவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இவர்கள் எப்போதுமே தலைவரை பற்றி விமர்சித்து கொண்டே இருப்பார்கள். நாம் தலையிட்டு அவர்களின் அபிமான தலைவர் அல்லது தலைவி இந்த விஷயத்தில் எப்படி என்று கேட்டால். அவரும் அப்படி தான் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள். அதாவது கலைஞரை வசைபாட ஆயிரம் வார்த்தைகள் என்றால் தங்கள் அபிமான தலைவர் அல்லது தலைவியை திட்ட ஒரு வார்த்தை மட்டும் தான். இதை வைத்தே இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். சில சமயங்களில் இவர்களின் இந்த பண்பு எதிர்வினைகளையும் ஏற்படுத்தலாம். அப்படி தான் நடந்தது நேற்றைய எச்சி இலை பதிவு
கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் என்ற நப்பாசையுடன் இவர்கள் பிரசுரித்த கட்டுரையை படித்தவர்களுக்கு தெரியும் அந்த கட்டுரையில் கழகத்தின் வளர்ச்சியை கால வாரியாக விவரித்து எழுதி இருக்கிறார்கள். கழகத்தையும் உடன்பிறப்புகளையும் அந்த கட்டுரை தூக்கி நிறுத்துகிறது. கலைஞர் என்ற தனிமனிதரை மட்டும் ஆங்காங்கே குறை காண்பது போல் எழுதப்பட்டுள்ளது. தளபதி ஸ்டாலின் பற்றி கூட பாராட்டி தான் எழுதி இருக்கிறார்கள். பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் தலைவரின் மீது வீசப்பட்டுள்ள ஒன்றிரண்டு குற்றச்சாட்டுகளை நாம் புறம் தள்ளிவிடலாம். அனுதினமும் தாங்கள் அதிகாலையில் மந்திரம் ஓதுகிறார்களோ இல்லையோ தலைவரை அர்சிப்பதை மட்டும் மறவாமல் செய்துவரும் இவர்களை நாம் கண்டு கொள்ள தேவை இல்லை. தாங்கள் பிரசுரித்த கட்டுரை மூலம் கழகத்தின் சிறப்பினை வலை உலகத்துக்கு எடுத்து சொன்ன அந்த பதிவர்களை மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறோம்
Thursday, July 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்ல பதிவு உடன்பிறப்பு. நன்றி!
கல்கியா அந்த இதழ் மைலாப்பூர்க்காரர்களுக்கும் மட்டும் சொந்தமானதாச்சே.
//உடன்பிறப்புகள் என்றுமே தங்கள் கட்சி விசுவாசத்தை காட்ட தவறுவதில்லை. //
சரியாக சொன்னாய் உடன்பிறப்பே!
குருவிக்கு பதிவு போட்ட போதே வலை உலகத்துக்கு தெரிந்து விட்டது உன் விசுவசம்.
பெருமை கொள்கிறேனடா தம்பீரீ!
எத்தைத் தின்னா பித்தம் தெளியுங்கிறதுக்கு இவங்க பிதற்றல்களே சாட்சி.
அலையுறாங்கப்பா.
உண்மைத்தமிழன் அவர்களே வருகைக்கு நன்றி!
\\
லக்கிலுக் said...
ஐயா,
என்னுடைய வலைப்பூவை பார்த்து அதை மேன்மைபடுத்த ஆலோசனை வழங்குகள்...லக்கிலுக்-சென்னை
http://kalaignarkarunanidhi.blogspot.com
\\
நிச்சயாமாக திரு.லக்கிலுக் அவர்களே
உங்களுக்கு கொடுக்காத ஆலோசனையா
இன்று காலையே உங்கள் வலைப்பூவை பார்த்தோம் மகிழ்ந்தோம்
மிக அருமையான வலைப்பூ
அடுத்தவரை குறை கூறாமல் உங்கள் கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அதுவே எங்கள் அம்மாவின் பாசறை உங்களுக்கு தரும் சிறிய ஆலோசனை
;-)
தங்கள் வலைப்பூவிற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி
தோடா!!நான் உண்மைத் தமிழன் இல்லைங்க லக்கி லுக் அவர்களே.
//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
தோடா!!நான் உண்மைத் தமிழன் இல்லைங்க லக்கி லுக் அவர்களே.
//
தோடா... எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லே கணக்கா இல்லே இருக்கு :-)
நான் எங்கே உங்களை உ.தமிழன்னு சொன்னேன் :-)))))
\\ தோடா!!நான் உண்மைத் தமிழன் இல்லைங்க லக்கி லுக் அவர்களே. \\
அவர் உங்களை சொல்லவில்லை திண்டுக்கல் சர்தார் அவர்களே
// லக்கிலுக் said...
//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
தோடா!!நான் உண்மைத் தமிழன் இல்லைங்க லக்கி லுக் அவர்களே.
//
தோடா... எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லே கணக்கா இல்லே இருக்கு :-)
நான் எங்கே உங்களை உ.தமிழன்னு சொன்னேன் :-)))))//
அப்பாடா!இப்பத் தான் மூச்சே வந்துச்சு.
எங்கே நான் யாருன்னு கண்டுபிடிச்சிடுவீங்களோன்னு பயந்துகிட்டிருந்தேன்
Post a Comment