Thursday, August 28, 2008

ஜெயாவுக்கு செல்வகணபதி எழுதிய கடிதம்!

அன்புள்ள அம்மா அவர்களுக்கு!

உங்களின் பாசத்திற்குரிய செல்வம் எழுதுவது. நீங்கள் டெல்-யில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபொழுது அப்பொழுது டெல்லியில் எல்.எல்.பி. படித் துக்கொண்டிருந்த மாணவனான என்னை சேலம் முன்னாள் எம்.பி. கண்ணன் உங்களது உதவி யாளராக நியமித்தார். அன்று முதல் செல்வம் என பாசமாக நீங்கள் அழைத்த போதெல்லாம் நாய்க்குட்டிபோல ஓடிவந்த என்னை இன்று நட்டாற்றில் விட்டுவிட்டீர்கள்.

98-ம் ஆண்டு திருநெல்வேல்யில் கட்சி மாநாடு நடத்த 3 கோடி ரூபாய் சசிகலா கேட்டார். கடன் வாங்கி கொடுத்தேன். அதை திருப்பிக்கேட்டேன். அன்று முதல் சசிகலா என்மீது கோபம் கொண்டார். அன்று முதல் எனக்கு இறங்கு முகம்தான். அதேநேரம் வாழப் பாடியாரை எதிர்த்து என்னை நிற்கவைத்தீர்கள். நான் அந்தத் தேர்தலில் ஜெயித்தேன். அந்த வெற்றியும் உழைப்பும் சசிகலா மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன். நடக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் பேச்சைக் கேட்டு செயல்படும் நீங்கள் அவர்களின் கைப்பாவையாகவே மாறிவிட்டீர்கள்.

2001-2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான வழக்குகளை எல்லாம் சரி செய்துகொண்டீர்கள். என் மீதான சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கை அப்படியே விட்டுவிட்டீர்கள். நீங்களும் நானும் குற்றவாளிகளாக இருந்த ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கை அதிகாரிகளைப் பயன்படுத்தி விடுவித்துக்கொண்ட நீங்கள் சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் என்னை விடுவித்துக்கொள்ள, நான் அதிகாரிகளைச் சந்திக்க எடுத்த முயற்சிகளை எல்லாம் தடுத்துவிட்டீர்கள்.

கடந்தவாரம் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 150 சாட்சிகளுக்கும் வாரண்ட் பிறப்பித்து ஆஜராக உத்தர விட்டுவிட்டார். அந்த வழக்கு வேகம் பெறப்போகிறது. இப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உங்களுடன் பேச பல முறை முயற்சி செய்தேன். சசி கலாவின் ஆட்கள் விடவில் லை. அதன்பிறகு என் மனைவிக்கு கேன்சர் என நான் சசிகலாவின் உறவினர் மூலம் சொல்லி அனுப்பியதால் தான் நீங்கள் என்னிடம் தொலை பேசியில் சில நிமிடங்கள் பேசினீர்கள். அப்பொழுது உங்களிடம் இந்த வழக்கு விபரங்களை சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

ஒருசில மாதங்களுக்கு முன்பு தலைமைக் கழகத்தில் நீங்கள் தி.மு.க.வுக்கு போகப் போகிறீர்களா? அதற்காக வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? என கேள்வி கேட்டீர்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்பொழுது எங்களைப்போன்ற கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எதுவும் செய்யாமல் நடுத்தெருவில் நிற்கவைத்தீர்கள். அதனால் தி.மு.க. அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே நீங்கள் தி.மு.க.வுக்குப் போகப்போகிறீர்களா? என விசாரணை நடத்துகிறீர்கள்.

ப்ளசண்ட் ஸ்டே, கலர் டி.வி., சுடுகாட்டு கூரை ஊழல் போன்ற வழக்குகளின் காரணமாக செல்வகணபதியால்தான் நான் ஜெயிலுக்குப் போனேன் என கட்சிக்காரர்களிடம் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள்.

நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

அன்று ஊழல் செய்து ஒவ்வொரு மந்திரியும் இவ்வளவு கப்பம் கட்டுங்கள் என உத்தரவிட்டது யார்? நீங்கள்தானே! அத னால்தானே நாங்கள் தவறு செய்தோம். ஊழல் வழக்குகளை சந்திக்கிறோம். இன்னமும் ஊழல் வழக்குகள் பல பாக்கியுள்ளது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

நன்றி!

இப்படிக்கு,

செல்வம் (எ)
டி.எம்.செல்வகணபதி

(அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மாஜி அமைச்சரும் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளருமான செல்வகணபதி எழுதிய கடிதம்தான் இது. இக்கடிதத்தைப் படித்துவிட்டுத்தான் ஜெயலலிதா, செல்வகணபதியை கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.)

4 comments:

said...

:-)))...

said...

இது உண்மையிலயே அவர் எழுதுனா கடிதமா லக்கி ? இதுல தெளிவா நீங்க கப்பம் கட்ட சொன்னீங்க, நாங்க கட்டுனோம்னு எழுதியிருக்காரே, அதுனாலத்தான் கேட்குறேன். என்னா கொடுமை பாருங்க.

said...

//இன்னமும் ஊழல் வழக்குகள் பல பாக்கியுள்ளது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.//

விடுபட்ட வரிகள்:

வழக்கறிஞர் ஜோதியை விட அதிக ரகசியங்களை அறிந்த நான், என்னை இப்படி நட்டாற்றில் விட்ட உங்களுக்கு எதிராக அப்ரூவராகவும் வாய்ப்பு இருக்கு என்பதையும் நீங்கள் உணர்வீர்கள் என நம்பினாலும்.. உங்களுக்கு எதிராக ஒருவர் உருவாவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ம.மா( நன்றி: சு.சாமி) கும்பல் எப்படியாவது சதி செய்து உங்கள் மூலமே என்னை வெளியேற்றி , அதன் மூலம் உங்களுக்கு சிக்கலை உருவாக்கி, தில்லையம்பலத்தாரை உங்கள் இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்கள் என்பதையும் நான் அறிவேன்...

.. இத்த உட்டீங்களே லக்கி.. :))

said...

அம்மா சொல்லித்தான் நாங்கள் எல்லோரும் லஞ்சம் வாங்கினோம் என்று சொல்லும் செல்வகணபதி வாங்கிய லஞ்சத்தில் அம்மாவுக்கு சரியாக கணக்கு காட்டவில்லை,நிறைய இடங்களில் அம்மாவுக்குத்தெரியாமல் சொத்துக்கள் வாங்கியது அம்மாவின் கவனத்துக்கு போகவேதான் அம்மாவுக்கு கோபம் வந்து முட்டிக்கொண்டது.


இதையெல்லாம் அம்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்றது தோழி சசிகலாவின் சாகாக்கள்.