தயாரிப்பு: செல்வி ஜெயலலிதா
கூட்டு தயாரிப்பு: தோழி சசிகலா
பட்ஜெட்: எந்திரன் 100 கோடி எல்லாம் ஒரு பட்ஜெட்டா இந்த படத்தில் ஒரு கல்யாண சீனுக்கே பல நூறு கோடிகள் செலவழித்துள்ளார்கள்
கதை: உலகமகா மேதாவி 'சோ'ராமசாமி
திரைக்கதை: மூத்த பதிவர் T.V.Radhakrishnan
இயக்கம்: செல்வி ஜெயலலிதா
வசனம்: வைகோ
மொழிபெயர்ப்பு: டோண்டு ராகவையங்கார்
பாடலகள்: 'மானாட மார்பாட' ஞாநி
வில்லன்: சுதாகரன்
வில்லி: சந்திரலேகா
அறிமுக வில்லன்: சங்கராச்சாரியார்
காமெடி: சுப்பிரமணிய சுவாமி
சண்டை பயிற்சி: வால்டர் தேவாரம்
உதவி இயக்குநர்கள்:
மதுசூதனன் ராமானுஜம்
வீ தெ பீப்பிள்
மாயவரத்து 'ஜெ' அடிவருடி மற்றும் பல பதிவுலக மேதாவிகள்
கதைச் சுருக்கம்: இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். 'சோ'ராமசாமியும் டீமில் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமே கிடையாது. மதமாற்ற தடைச் சட்டம் பின்னர் வாபஸ், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் பின்னர் வாபஸ் போன்று ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம்
பாடல் காட்சிகள்களுக்கு வெளிநாடு செல்லாமல் உள்ளூர் கொடாநாட்டிலேயே படம் பிடித்து இருப்பது மிகப் பெரிய ஆறுதல்
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒரு பேரூந்தை தீ வைப்பது போன்ற மயிர் கூசச் செய்யும் காட்சிகளும் உண்டு
பின் குறிப்பு: சிங்கப்பூர் விநியோகஸ்தருக்கு ஒரு நல்ல ஆளாக தேடிக் கொண்டு இருப்பதாக கேள்வி. ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்
Wednesday, December 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பழைய படம் ஆனாலும் ஹிட் படம் தான் எத்தனை முறை பார்த்தாலும் வேறு வழி இல்லாமல் மறுபடியும் பார்க்கும் அவலம் நேர்ந்துவிடுகிறது
படம் 70 மி.மி.ல் எடுக்கப்படுகிறது.
பிரத்தியேகத் தங்கக் கழிப்பிடம் உள்ள இந்தியத் தொல்லைக்காட்சியில் முதல் முதல் இடம் பெறும் விமானக் காட்சி
கண்களை மூடிக் கொல்லப் போகிறது பக்தர்களை.
//மாயவரத்து 'ஜெ' அடிவருடி//
அடிவருடின்னா என்னங்க? அடி+வருடியா? ஒரு டேப்பரான அர்த்தம் வருதே?
புதசெவி
//சிங்கப்பூர் விநியோகஸ்தருக்கு ஒரு நல்ல ஆளாக தேடிக் கொண்டு இருப்பதாக கேள்வி. ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும் //
நீங்களே சிங்கை தானுங்களே...நீங்களே எடுத்துக்கலாமே...ஒரு சஜ்ஜெசன் தான் ;)
_ பொட்"டீ"
இதை உண்மையான பொட்"டீ" தான் இட்டான் என்பதற்கு ஆதாரம் ஏதும் கொடுக்க இயலாது.
Post a Comment