Tuesday, October 28, 2008

ஜெயலலிதா முதல்வராய் இருந்திருந்தால்....

இந்த பதிவிற்கு தலைப்பு முதல்வராய் என்பதற்கு பதில் சாதியை பறைசாற்றும் விதமாக அமைத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் அளவுக்கு கீழே இறங்கி போக விரும்பவில்லை. நாம் ஏற்கனவே போலி பற்றிய பதிவில் சொன்னது போல் நாம் யாரும் பார்ப்பனீயத்தை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டால் அவர்களுக்கு பிழைப்பு ஓடாது. அதை அவர்களே கிளறிவிட்டுக் கொண்டு இருப்பார்கள். நாம் போலி பதிவில் சொன்னதை நூற்றுக்கு நூறு நிரூபித்து இருக்கிறார்கள் தங்கள் செயல் மூலம்

இலங்கை பிரச்சினை மூலம் அதிக கொள்ளை இலாபம் அடைந்தவர்கள் அவர்களே என்றால் மிகையாகாது. தமிழர்கள் என்றும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பது தான் அவர்கள் எண்ணம். அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டது இலங்கை பிரச்சினை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்று சேர்வதை கண்டதும் அதற்கு முதலில் முட்டுக்கட்டை போட்டது அவர்கள் தான். இந்திய இறையாண்மை என்ற அஸ்திரத்தை ஏவினார்கள். அந்தோ பரிதாபம்! இப்போது யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு கூட அஞ்சுகிறார்கள். அவர்களின் முதல் திட்டம் நிறைவேறிவிட்டது

பேசினாலே சட்டம் பாயும் நிலை ஏற்படுத்திவிட்ட பின்பு கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இவர்கள். அவர் தனது ஆட்சியை இழக்க வேண்டுமாம். அவர் ஆட்சியில் இருக்கும் போதே இந்த ஆட்டம் போடுகிறீர்களே அவர் ஆட்சியையும் பறித்துவிட்டால் நீங்கள் என்னென்ன செய்வீர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ. இவர்கள் வடிப்பது ஈழத்தமிழர்களுக்கான நீலிக் கண்ணீர் அல்ல. கலைஞர் ஆட்சியை காவு வாங்க காத்திருந்து காய்ந்த கண்களின் கண்ணீர்

சரி, நம் கேள்விக்கு வருவோம் "ஜெயலலிதா முதல்வராய் இருந்திருந்தால்.... " என்ன செய்து இருப்பார். கலைஞர் எடுத்த முயற்சியில் எந்த ஒரு துளியும் எடுக்காமல் கொடநாட்டில் ஓய்வு எடுக்க போயிருப்பார். அப்போது இவர்கள் வேறு மாதிரி எழுதிக் கொண்டு இருப்பார்கள்

15 comments:

Anonymous said...

நாய்கள் ஊளையிடட்டும் என்று ஒதுக்கிவிட்டால் அடங்கி விடும் ஆட்டமெல்லாம்.

தமிழனாய்ப் பிறந்தவர்கள் தமிழராய் வாழ நினைத்தால் விட்டு ஒதுங்கி விடுவார்கள்.

said...

//இவர்கள் வடிப்பது ஈழத்தமிழர்களுக்கான நீலிக் கண்ணீர் அல்ல. கலைஞர் ஆட்சியை காவு வாங்க காத்திருந்து காய்ந்த கண்களின் கண்ணீர்//

அது!

said...

உங்கள் தொடர்ந்த மேலான ஆதரவுக்கு நன்றி ஜோ அவர்களே

said...

லக்கிலுக், முதல்முறையாக எதற்காக உங்கள் பக்கம் வந்து இந்த இடுகையைப் படித்தேன் என்றிருந்தது :-(

இதற்கெல்லாம் பார்ப்பனியவாதிகள் மேல் பழிபோடாதீர்கள், அவர்கள் வேறென்ன செய்வார்கள்? வைக்கோவும் தேவையில்லாமல் இப்பொழுது பொறுப்பின்றி நடந்து கொண்டார். உண்மைதான். ஆனால் கலைஞரின் கையாலாகாத்தனத்தை (இதைவிட மோசமான சொற்கள் வந்தாலும், சில காரணங்களுக்காக அவரை மதிப்பதால் பொதுவில் சொல்ல விரும்பவில்லை) கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இப்படி ஆதரிக்கும் உடன்பிறப்புகள் இருப்பதால்தான் அவர் குடும்பமே தமிழ் நாட்டைச் சுருட்டி அடமானம் வைத்துக் கொண்டிருக்கிறது.

தயவுசெய்து அவரை முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். பாவம் ஈழத்தமிழன், தினமும் செத்து வரும் அவனுக்காக வடிக்கப் படும் கண்ணீரிலாவது உண்மையிருந்து விட்டுப் போகட்டும்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

said...

//-/சுடலை மாடன்/- said...
லக்கிலுக், முதல்முறையாக எதற்காக உங்கள் பக்கம் வந்து இந்த இடுகையைப் படித்தேன் என்றிருந்தது :-( //

சு.மா. அண்ணாச்சி!

இந்த இடுகையை எழுதியது லக்கிலுக் அல்ல. ஈழத்தமிழர் விவகாரத்தை கையில் கொண்டு தமிழ்நாட்டில் கட்சிப் பாகுபாடில்லாமல் ஆளாளுக்கு நமுத்துப்போன ஊசிப்பட்டாசு வெடிப்பதை கண்டு லக்கிலுக்கு வெறுத்துப் போயிருக்கிறான் :-(

Anonymous said...

உடன் பிறப்பே இத்த பாரு

ஈழமும் ராஜீவ் காந்தியின் ஆவியும் !
http://vinavu.wordpress.com/2008/10/28/eelam4/

said...

//இந்த இடுகையை எழுதியது லக்கிலுக் அல்ல.//

மன்னிக்கவும். உடன்பிறப்பு பதிவை நீங்கள் மட்டுமே எழுதிவருகிறீர்கள் என்று தவறாக நினைத்து விட்டேன். கூட்டுப் பதிவு என்பதை இப்பொழுதுதான் பார்த்தேன். எழுதிய உடன்பிறப்புக்கு என்னுடைய அதே பின்னூட்டக் கருத்தை வலியுறுத்துகிறேன்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

said...

///ஜெயலலிதா தமிழராய் இருந்திருந்தால்....

உடன்பிறப்பு///

??????

said...

mmm

said...

என்னை பொறுத்தவரை ஒரு சில விடயங்கள் தவிர அனைத்தும் ஏற்புடையதே, இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

said...

ஈழத்தமிழருக்கு உடைகளும் மருந்து கொடுங்கள் என்கிறார் கலைஞர் ! உயிரைக்கூட தர ஆயுத்தமாகவே இருக்கிறோம். முதலில் அவர் மனதுக்கு நேர்மையான முடிவு எடுக்கட்டும்.


ஆழ்ந்த வருத்தங்களுடன்

வரவனையான்

Anonymous said...

ஜெயலலிதாவிடம் இருந்து யாரும் ஈழத்தமிழர் மீது அக்கறையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் அவர் கொடநாட்டில் ஓய்வு எடுத்தாலும், ஹைதராபாதில் திராட்சை சாகுபடி செய்தாலும் எல்லாம் ஒன்றுதான். திமுகவிடம் இருந்து எதிர்பார்க்கக்கூடியது வெறும் வாய்ச்சவடால் தான். எதிர்பார்த்த மாதிரியே அந்த வாய்ச்சவடால் இரண்டு வாரத்தில் பிசுபிசுத்துவிட்டது.

அட ஈழப் போராட்டத்தை ஆதரிக்கக்கூட வேண்டாம். மத்திய அரசை "மிரட்டி"ப் பெற்ற பிச்சை கூட இலங்கை அரசின் மடியில் தான் விழுந்துள்ளது. அதை விநியோகம் செய்யும் முறையை கண்காணிக்கவாவது தமிழகத்திலிருந்து கட்சி சாராத, சமூகநலவாதிகள் அடங்கிய குழு ஒன்றை உடன் அனுப்ப வேண்டும் என்றாவது நெருக்குதல் கொடுத்திருக்க வேண்டாமா? மத்திய அரசு இலங்கைக்குத் தந்த பரிசு போதாது என்று, இப்போது தமிழகத்தில் வசூல் செய்து அதை டெல்லிக்கு எஜமானர்களுக்குஅனுப்பி, இலங்கை அரசிடம் சேர்ப்பிக்கப்படும். என்ன கொடுமைடா சாமி?

said...

முதலில்.

இந்த விவகாரத்தில் கலைஞர் மீது எனக்கு வருத்தம் தான். எதை பற்றியும் யோசிக்காமல், ஈழத்தமிழர்களுக்காக எம்.பி. பதவிகளை சொன்னபடி ராஜினாமா செய்திருந்தார் என்றால் தமிழ் இன உணர்வாளர்கள் மனதில் நிலையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்க முடியும்.

இருந்தாலும், பதவி ராஜினாமாவால் ஏற்படப்போகும் நன்மை தீமைகளை(கடலுக்கு இரண்டு பக்கம் உள்ள தமிழர்களின்) ஆராய்ந்தால்...... அந்த முடிவு சரியானதாக இருக்காது என்பதே உண்மை.....

அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவதற்கு முன்னர் நான் ஒரு இடத்தில் சொன்னது போல..... பதவி விலகல் எனும் மிரட்டல் ஒரு ஆயுதம் தான்.... மிரட்டினால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பிருக்கும் சமயங்களில் அதை லாவகமாக பயன்படுத்துவதே சரியானது..... அதுவும் கலைஞருக்கு இப்பொழுது மத்திய அரசிலே இருக்கும் செல்வாக்கு என்பது எம்.பி.க்களின் எண்ணிக்கையினால் அல்ல என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்..... சென்ற தேர்தலில் 40 தொகுதிகளை வென்று தந்த ராஜதந்திரி மற்றும் அவர் ஒரு முதுபெரும் அரசியல் தலைவர்.... அந்த அளவிலே மட்டும் தான் இப்பொழுது அவருக்கு செல்வாக்கு.... ஏனென்றால், அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த சில தினங்களிலேயே பதவி விலகல் முடிவில் இருந்து தமிழக காங்கிரசும், கம்யூனிஸ்டும் விலகி விட்டது.... இவர் ஆதரவை விலக்கினாலும் அது அப்படி ஒரு சிக்கலை மத்திய அரசுக்கு ஏற்படுத்தாது.... தேர்தல் நெருங்கும் வேளையிலே மத்திய ஆட்சி கவிழ்ந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பெரிய இழப்பு இல்லை.....

இந்த சொச்ச சில கால ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக....... காங்கிரசு எந்த பெரிய முடிவுகளையும் ஈழ விவகாரத்தில் எடுக்காது என்பது அவர்களுடைய பேச்சினிலேயே தெரிந்து விட்டது..... ஏதோ பேருக்கு செய்தோம் என்று காட்டிக் கொள்ளவே நினைக்கிறார்கள்....

இப்படி ஒரு மத்திய ஆட்சியில் ஏன் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? வெளியில் வர வேண்டியது தானே.....!!!!! ஞாயமான கேள்வி.... இங்கே தமிழகத்தில் அவர்கள் தயவில் திமுக ஆட்சி அமைந்து தொலைந்துவிட்டது.... அங்கே ஆதரவை விலக்கினால் இங்கே ஆட்சி பனால் ஆகி விடும்.... இங்கே இப்பொழுது எட்டு திக்கும் கேட்கும் ஈழ ஆதரவு குரல்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ கலைக்கப்பட்டாலோ புதைக்கப் படும்...... இங்கே நிலவும் மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு(இந்த இரண்டு விடயத்தில் தமிழக ஆட்சியைவிட மத்திய ஆட்சி மற்றும் முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்கே அதிக பங்கு உண்டு என்ற போதிலும்) போன்ற காரணங்களால் அடுத்த தேர்தல் எப்படி இருக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.....

சிலர் கேட்கலாம்.... இங்கே தான் இப்போ ஈழ ஆதரவு ஏகபோகமாக இருக்கிறதே..... ஏன் ஆட்சி கலைப்பு, கவிழ்ப்புக்கெல்லாம் பயப்பட வேண்டும்.... தமிழக மக்கள் மீண்டும் அரியணை ஏற்றி விட மாட்டார்களா என........ மத்தியில் மாநிலத்தில் உள்ள பாப்பானுக பாப்பாத்திக சும்மா இருக்க மாட்டார்கள்...... குடியரசு தலைவர் ஆட்சி தமிழகத்தில் இருக்கும் போது இங்கே ஈழ ஆதரவை நசுக்க என்ன திட்டம் வேண்டுமானாலும் போட்டு செயல்படுத்துவார்கள்...... ராஜீவ் கொலை நடந்த போது தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.....

இவ்வளவையும் மனதில் கொள்ளாமல், கலைஞர் மயிரா போச்சுனு காங்கிரசை கவிழ்த்திருந்தால் உடன்பிறப்புகள் மனம் துள்ளிக் குதித்திருக்கும் என்பதை மட்டும் இங்கே நான் மறைக்க நினைக்கவில்லை....

said...

தோழர் மதிமாறனின் கருத்துக்களை படித்தீர்களா?

said...

ஜெய் அவர்கள் சொல்வதை நான் வரிக்கு வரிக்கு ஆதரிக்கிறேன்...!!!
ஆனாலும் , கலைஞர் ஒரு விடயத்தில் தவறிழைத்துவிட்டார்...இன்றைக்கு 40 ஆண்டு பிரச்சினையை 4 நாட்களில் முடிக்கவியலாது என்பது அனைத்துக்கட்சி கூட்டத்தில் அவருக்கு தெரியலவில்லையா ?

சரி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் பிரச்சினை , ஆட்சி கவிழ்ந்துவிடும்......

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ராஜினாமா செய்வதில் என்ன பிரச்சினை???

எது எப்படியோ , இந்தப்பிரச்சினையில் கலைஞரின் செயல்பாடு எம் போன்ற தீவிர திமுக அனுதாபிகளிடையே கூட ஒரு மனவருத்தத்தை ஏற்படுத்தியதை மறுக்க இயலாது......

அது தேவையற்றதும் , தவிர்த்திருக்கக்கூடிய செயல் என்பதுமே என் கருத்து!!!!