Tuesday, October 07, 2008

கொக்கரித்த கூட்டமே... இங்கே பார்

இதோ, கலைஞரின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு, இலங்கை தூதரை அழைத்து, இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது. மேலும் தலைவர் கலைஞர் அவர்களால் வைக்கப்பட்ட மற்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்..

இது நிச்சயம் கலைஞருக்கு வெற்றி.

அடேங்கப்பா.. ஓரிரு நாளில் எத்தனை நக்கல் பதிவுகள்.. தந்தி அனுப்புவது பற்றி நக்கலடித்து, எள்ளி நகையாடி.. , இதனால் நிகழப்போவது, தபால் அலுவலகத்துக்கு கூடுதல் வருமானம் மட்டுமே என்றெல்லாம் நக்கல் வேறு.
அதே போல, அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்ற செய்தியை படித்துவிட்டு எத்துனை எள்ளல் , சிறுபிள்ளைத்தனமான பதிவுகள்.. 90 காசு கொடுத்து தொலைபேசியில் கூட பேசாமல், 25 பைசாவில் முடித்துவிட்டார் என்று எக்காளமிட்டது ஒரு கூட்டம்.. கலைஞர் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் அந்த கூட்டத்துக்கு.. என்ன செய்ய.. அவர் எது செய்தாலும் எதிர்க்கும் கூட்டம்..

இனிமேலாவது செய்தி தாள்களில் வரும் செய்திகளை அரைகுறையாக படித்துவிட்டு, குறை சொல்லவேண்டுமே என்று பதிவு போடாதீர்கள் நல்லவர்களே...

இன்று செய்திகள் தெளிவாகியுள்ளது. தந்தி அனுப்ப சொல்லிய கலைஞர், கடிதமும் கொடுத்தனுப்பி, தொலைபேசியிலும் பேசி, குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.. தந்தி என்பதும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும்., இது ஓட்டு மொத்த (சோ, ஜெ, சுவாமி போன்ற வகையறாக்கள் தவிர்த்து) தமிழினத்தின் ஏக்கம் என்பதை மத்திய அரசின் மனதில் பதிய வைக்கவுமே.. மற்றபடி, கலைஞர் கடிதம், தொலைப்பேசி மூலம் பேசியதன் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேவையே இல்லாமல், அனைத்திலும் கலைஞரை திட்டுவதற்கென்றே அலைகின்ற கூட்டமே, இப்போதாவது திருந்துங்கள்..

தலைவர் கலைஞர் அவர்களே, மீன்டும் ஒரு முறை நீங்கள் ஒரு தமிழினத்தலைவர் என்பதை நிரூபித்துள்ளீர்..வாழ்க கலைஞரே..

12 comments:

Anonymous said...

அன்று தமிழ்செல்வனின் மறைவுக்கு இரங்கல் பா வாசித்தர்க்கு அரசை கலைக்கவேன்டும் என்று ஆடித்தீர்த்த அதே கூட்டம் இன்று கண்ணீர் விட்டு பாசத்தை பொழிகிறது. அட இராமா இவர்களுக்கு எல்லாம் நல்ல புத்தியை கொடுக்கக்கூடாதா....

பனிமலர்.

said...

கடுமையான கண்டணங்களை தெரிவித்தால் மட்டும் போதுமா லக்கி?
இந்த கண்டணத்தை கவனத்தில் கொள்ளும் கனிவான அரசா இலங்கையில் நடக்கிறது? இது போதாது என்பது தானே எங்கள் ஆதங்கம்?

Anonymous said...

அவ்வ்வ்வ்வ்வ் !!!!

கலைஞர் தந்தி அனுப்பச்சொன்னதும் தந்தி ஆபீஸுக்கு ஓடுவது பொதுமக்களா அல்லது தி.மு.க தொண்டர்களா ?

துண்டு பீடிக்கு வழியில்லாதவன் கொளுகைக்காக பணத்தை தந்தி ஆபீஸிலும் போடவேண்டுமா ?

ஹும்ம்ம்ம்ம்ம் !!!

said...

மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று கலைஞரை எதற்கெடுத்தாலும் ,விமர்சிப்பதிலேயே கவனத்தை செலுத்தும் மிகப்பல பதிவாளர்கள் அவரின் சாதனைகளை சற்றும் திரும்பிப்பார்ப்பதில்லை...

இன்று காலையில் திரு.ஜோசப் பால்ராஜ் ( கலைஞருக்கு வெற்றி என்ற பதிவு ) எழுதிய ஒரு மட்டரகமான பதிவிற்கு சற்றேறக்குறைய அதே அளவிலே நாம் விமர்சித்ததை பின்னூட்டங்களில் சேர்க்க வில்லை அவர்...பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் என்று கலைஞ்ரை பேயென குறிப்பிடும் பின்னூட்டத்தை அனுமதித்த அவர் என் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை.........

அதிலும் சிலர் பண்ணுகிற அழிச்சாட்டியம் இருக்கே தாங்க முடியல...மந்திரிங்க ராஜினாமா பண்ணி அரசுக்கு ஆதர்வை விலக்கணுமாம்....

சரி , மத்திய ஆட்சி கவிழுது...அதுக்கப்புறம் , தமிழக அரசுக்கு காங்கிரஸ் கொடுக்கும் ஆதரவி விலக்கி இங்க் ஆட்சி கவிழ்ந்தா , இப்படி வாய் கிழிய பேசற விஜய்காந்த் திமுக ஆட்சியை ஆதரிப்பாரா??? இல்ல் ஜெயல்லிதா அம்மா , அச்சச்சோ இப்படி ஈழ ஆதரவால திமுக ஆட்சி கவிழுதேன்னு அதுக்கு ஆக்சிஜன் கொடுப்பாரா???

சத்தியமா மாட்டாய்ங்க...அப்புறம் எலக்சன் வந்து ஜெயல்லிதா ஆட்சிக்கு வந்தா டைரக்டா ஜெயில்தானுங்க.....இப்படி ஓர்க்குட்ல கூட பேச முடியாது...ஜல்லி அடிச்சிருவாய்ங்க.....

கலைஞர் பண்ணுறது உண்மையா இல்லியாங்கிறதையாவது கொஞ்சம் சந்தேகக்கண்ணோட பாக்கலாம்........

ஆனா , இந்த புரட்டுக்கலைஞரும் , புரட்டுத்தலைவியும் கன்பார்ம்டா அரசியல் ஆதாயத்துக்காகத்தான் பண்ணறாங்க......

ஆக சம்திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங்.....!!!!!!!!!!!

ஆக , இக்குறிப்பிட்ட விடயத்தில் கலைஞர் நாடகமாடுகிறார் என்று சொல்வது முழுக்க முழுக்க அவர் அரசியல் எதிரிகளே...

ஈழ நாளேடுகளையும் , இணைய இதழ்களையும் பாருங்கள் கொஞ்சம்....

எல்லா தலைவர்களின் அறிக்கையையும் அங்கே நடுநிலையோடு அணுகுகிறார்கள்...இங்கேதான் அதுக்கு அவரவர் சவுகர்யப்படி கண் , காது மூக்கு வைத்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்....

தமிழர்களே , இந்த ஒரு விஷயத்திலாவது நாம் உண்மைத்தமிழர்களாய் ஒற்றுமையுடன் இருப்போம்!!!!!!

Anonymous said...

Good drama to divert people's attention from current power cut and other issues.

said...

தலைவர் கலைஞரின் வேகம் இந்த விடயத்தில் குறைவுதான் நண்பரே, ஆனாலும் ஒரு உண்மையை ஏற்று கொள்ளவேண்டும்,இதை முன்பே செய்து இருந்தால் இந்திய இறையான்மைக்கு (என்னவென்று இதுவரை புரியவில்லை) கலைஞர் பங்கம் விளைவித்து விட்டார் என்று கூப்பாடு போட்டு இருப்பார்கள், அதே போல் பொது கூட்டத்தில் பேசியது போல் காலம் தாழ்த்தாமல் நடுவண் அரசை வலியுறுத்தி ஈழதமிழர் வாழ்வு மலர வேண்டும். ஏன் திமுகவை நான் ஆதரித்தாலும் ஈழதமிழர் விடயத்தில் கலைஞரை கடுமையாக சாடியே உள்ளேன். அதேபோல் ஈழதமிழர் விடயத்தில் வைகோ வை ஆதரித்து பதிவு போட்டு உள்ளேன். அதே போல் இந்த ஒரு விடயத்தில் யார் என்ன செய்தாலும் ஆதரவு கொடுங்கள் அவர்களை தட்டி கொடுங்கள் கேலி பேச்சு வேண்டாமே, அவர்கள் வேகம் போதவில்லை என்றால் சுட்டி காட்டுங்கள் கிண்டல் வேண்டாம். ஜோசப் பால்ராஜ் முக்கியமாக இது உங்களுக்கு தயவுச்செய்து தவறை பணிவாக தெரியப்படுத்துங்கள் இந்த ஒரு விடயத்தில் மட்டும் தமிழர்களின் ஒற்றுமைக்கு இந்த ஒரு விடயத்தில் பங்கம் வரக்கூடாது.

Anonymous said...

//
Anonymous said...
Good drama to divert people's attention from current power cut and other issues.
//
ஏண்டா ஈழத்தில என்ன நடக்குதுன்னு தெரியுமாடா உனக்கு?? ஏண்டா எல்லோரும் சோசப்பு பால்ராசு மாதிரி இருக்கீங்க?
அட அறிவுசீவி அனானியே நல்லா தானேடா இருந்தே. ஏண்டா போற போக்குல எதயாச்சும் கொழுத்தி போடுறீங்க?

said...

உண்மையிலேயே மிகவும் பாராட்டப்பட வேண்டிய விரைவான நடவடக்கைகள்தான் (பல பிற கட்சிகள் ஆர்ப்பாட்டங்களையும்/போராட்டாங்களையும் அறிவிப்பதற்கு முன்பே செய்திருந்தால்)

கலைஞர் அவர்கள் தொலைபேசிமூலமும், கடிதம் வாயிலாகவும், தொண்டர்கள் மூலம் தந்தி அனுப்பச் செய்ததையும் வெகு காலத்திற்கு முன்பே செய்திருந்தால் எத்தனை "இந்தியத்" தமிழக மீனவர்கள் உயிர் பிழைத்திருந்திருக்கக்கூடும்! மேலும் ஈழ்த்தில் இழக்கப்பட்ட எத்தனை தமிழ் உயிர்களுக்காக இந்தியக் குரல் ஒலிக்கிறதே என்ற அச்சம் சிங்கள அரசின் காதுகளுக்கு கேட்டிருக்கும்!

காலம் கடந்த நீதியும் அநீதி இழைக்கப் பட்டதைப் போன்றதுதான் என்று சொல்வார்களே!

said...

//மதிபாலா said...
மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று கலைஞரை எதற்கெடுத்தாலும் ,விமர்சிப்பதிலேயே கவனத்தை செலுத்தும் மிகப்பல பதிவாளர்கள் அவரின் சாதனைகளை சற்றும் திரும்பிப்பார்ப்பதில்லை//

மிகச்சரி.

//துண்டு பீடிக்கு வழியில்லாதவன் கொளுகைக்காக பணத்தை தந்தி ஆபீஸிலும் போடவேண்டுமா ?//

இது மாதிரி ஒரு மட்டமான சிந்தனையை ராசபக்சே கூட சிந்திதுருக்க மாட்டார்.

அய்யோய்யோ பிணம் விழந்தால் ஊதுவத்தி வாங்கனுமே காசில்லை அதனால சாகதீங்க பிளிஸ் என்று சொல்வதற்கு ஒப்பான மட்டமான கீழ்த்தரமான் சிந்தனை.

said...

//மதிபாலா said...
மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று கலைஞரை எதற்கெடுத்தாலும் ,விமர்சிப்பதிலேயே கவனத்தை செலுத்தும் மிகப்பல பதிவாளர்கள் அவரின் சாதனைகளை சற்றும் திரும்பிப்பார்ப்பதில்லை//

மிகச்சரி.
என்னை மிகவும் எரிச்சல் படுத்தியது ஒரு SMS பதிவு. அங்கே பலபேர் சாகிறான் ஆனால் இந்த மடையர்களூக்கு சூடான இடுகையில் வர நக்கல் பதிவு.


உடன்பிறப்பே கிளம்பு செருப்பாலடிக்க!! என ஒரு பதிவு போட்டபின்புதான் சிறிது கோவம் தணிந்தது.

Anonymous said...

//
Anonymous said...
Good drama to divert people's attention from current power cut and other issues
//

Yes, Good Drama.
நடித்தவர்கள்:
தமிழக மக்கள், தமிழக அரசியல்வாதிகள், இந்திய அரசு, இலங்கை அரசு, இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் மற்றும் பலர்.
உன்னைப்போல் வேடிக்கை பார்க்க வந்தவங்களுக்கு இங்கே வேலை இல்லை. நீ கிளம்பலாம்.

Anonymous said...

/
அவ்வ்வ்வ்வ்வ் !!!!

கலைஞர் தந்தி அனுப்பச்சொன்னதும் தந்தி ஆபீஸுக்கு ஓடுவது பொதுமக்களா அல்லது தி.மு.க தொண்டர்களா ?

துண்டு பீடிக்கு வழியில்லாதவன் கொளுகைக்காக பணத்தை தந்தி ஆபீஸிலும் போடவேண்டுமா ?

ஹும்ம்ம்ம்ம்ம் !!!
//
செந்தழல் அண்ணே துண்டு பீடிக்கு வழியில்லாதவனுக்கு தான் கொள்கையும் இனப்பாசமும் அடுத்தவர் கஷ்டமும் புரியும். அவன் போவான்ணே. நமக்கென்னண்ணே! சிறு துளி பெரு வெள்ளமில்லையா? சேத்து வைப்போம்ணே!!