மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்கள் கலைஞரின் அரசியல் வாழ்வில் நெடுங்காலம் அவருக்கு உறுதுணையாக இருந்தவர். கழகத்தில் தலைவருக்கு அடுத்தபடியாக உடன்பிறப்புகள் அதிக மரியாதை வைத்து இருந்த தலைவர் அவர். கலைஞர் எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் திரு.முரசொலி மாறன் அவர்களை கலந்து எடுப்பது வழக்கம். நள்ளிரவில் தலைவர் வீட்டுக்குள் புகுந்து அவரை கைது செய்ய போலீஸ் வந்த போது தலைவர் முதலில் வரச் சொன்னது திரு.முரசொலி மாறன் அவர்களை தான். உடல்நிலை சரியில்லாமல் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு இருந்த திரு.முரசொலி மாறன் அவர்களை போலீஸ் எப்படி கையாண்டது என்பதை நாம் எல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்று இதை எல்லாம் ஒளிபரப்பிய அதே சன் தொலைக்காட்சி இன்று...
முரசொலிமாறன் இறந்த பொழுது தங்கள் கட்சி அலுவலகத்திலே பட்டாசு வெடித்து கொண்டாடிய ஜெயலலிதாவின் அறிக்கைகள் தினந்தோறும் சன் டிவி
செய்திகளில் ............
மேலும் வாசிக்க
கலைஞரும் கலாநிதி மாறனும்
3 comments:
ஆரம்பத்தில் இருந்தே சன் டிவி திமுக விசயத்தில் சற்று ஒதுங்கியிருந்ததை யாராலும் மறுக்க இயலாது.தொழில் வேறு, அரசியல் வேறு என தெளிவாக இருந்தனர்.திமுகவின் சப்போர்ட் இருந்ததை மறுக்கவில்லை. ஆனால் தினகரன் நிகழ்வுக்கு உங்கள் பதில் என்ன?. மூன்று உயிர்கள் கருகியதன் பிண்ணணிக்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். இதையெல்லாம் செய்துவிட்டு சன் டிவி உங்கள் திமுகவுக்கு சப்போர்ட் வேண்டும் என் நினைப்பது முட்டாள் தனமாக இல்லை. தா.கிருட்டினன் கொலை வழக்கு:. தெரிந்து இத்தனை யென்றால் தெரியாமல் எத்தனையோ?. முதல் அமைச்சரின் மகனாக இருந்தால் எது வேன்டுமானாலும் செய்யலாம்.
மகனா?. பேரனா? என வருகையில் மகனுக்கு சப்போர்ட் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த மகன் எப்படியென்று கலைஞரின் மனசாட்சிக்குத் தெரியும்...!!!!!!!.???.
சன் நெட்வொர்க்கின் தொழிலை முடக்குவதற்கு தினசரி போராடிக்கொண்டே இருக்கிறீர்களே.
அதுக்குன்னே தனி டிபார்ட்மென்ட் வேலை செய்யுதாமே?.
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மறந்து விடாதீர்கள்.
அய்யா அத்திரி, இன்றைய சன் செய்திகளைப் பார்த்தீர்களா?
மதுரையில் காதலில் விழுந்தேன் படத்தை ஓட விடாமல் செய்கிறார்கள் என்று ஒரே அழுகை. இவர்களது தொழிலை முடக்குகிறார்களாம்....
இவர்களால் பல ஆயிரம் கேபிள் ஆப்பரேட்டர்களின் தொழில் பாதிக்கப்படுகிறதே அதை எங்கே போய் அழுவதாம்...
நானும் ஒரு கேபிள் ஆப்பரேட்டரின் மகன் தான். அந்த ஆதங்கத்தில் தான் சொன்னேன்...
Post a Comment