Saturday, May 17, 2008

தலைவர் கலைஞரின் ஆத்திச்சூடி!

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம், உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறு போல் வீறு கொள்!
ஐயம் களைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!
கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
“ழ” கரமாய்ச் சிறப்புறு!

8 comments:

said...

தந்தை பெரியாரை மறக்காதே!

மாயைக்கு மயங்கேல்!

Anonymous said...

//ஊழலை நொறுக்கிடு!//

கலைஞர் இப்படியா எழுதியிருந்தார்?

said...

தமாசு.. .தமாசு..

Anonymous said...

இந்த மாறி கீழ்த்தரமா கருணாநிதிக்கு ஜால்ரா போடும் நீயெல்லாம் ஒரு மனுஷனா?பொறிக்கி நாய்ங்கடா நீங்க எல்லாம்.

Anonymous said...

//எட்டப்பர் இகழ்ந்திடு!//

இதை நீங்கள் கட்டபொம்மன் காலத்து எட்டப்பர் அரசரை வைத்து எழுதியிருந்தால் மாற்றி விடுங்கள். கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் பிடித்து கொடுத்தது புதுக்கோட்டை அரசர் தொண்டைமான். எட்டப்பருக்கும் துரோகத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றுதான் வரலாறு சொல்கிறது.

Anonymous said...

இங்க அனானியா வந்து கூப்பாடு போடுற புடிங்கிங்கல்லாம் ஒன்னு மனசுல வச்சுகுங்க.......

நாங்க என்னா பண்ணினால்லும் எதிரா பேசுறத நிறுதிகொங்க ரொம்ப அரிச்சுதுன்ன உங்க அடிவருடிங்கள கூப்பிட்டு சொரிஞ்சுவிட சொல்லுங்க

said...

அருமை அருமை..

கலைஞர் சொன்ன - "ஏறு போல் வீறு கொள்!" இந்த வரியையும் -"ஈனரை ஒதுக்கிடு!" இந்த வரியையும்
உடனே செயல் படுத்தியாக வேண்டுமென்பதால்..

நம்ம மாயண்ணனுக்கு என் பதில்,

// மாயவரத்தான்... said...
தமாசு.. .தமாசு..

4:18 PM, May 17, 2008
//

போடா புடுங்கி

said...

கலைஞர் வலைப்பூ நிர்வாகிகளே.. இந்த வலையில் என்னையும் இனைத்துக் கொள்ளுங்கள் - தலைவருக்கு நான் தொண்டனில்லாவிட்டாலும் கலைஞருக்கு எப்போதும் ஒரு ரசிகனே! அவ்வகையில் என்னால் இயன்ற வகையில் இங்கே ஏதாவது பங்களிக்க முயற்சிக்கிறேன்