20 வருடங்களுக்கு பின் சினிமாவில் பாடகராக அவதாரம் எடுத்துள்ள திரு. மு.க.முத்து அவர்கள் மாட்டுத்தாவணி என்ற படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார். பாடல் பாடி முடித்த பின்னர் அவர் கொடுத்த பேட்டி
கேள்வி:- மீண்டும் திரை உலகுக்கு மறு பிரவேசம் செய்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- எல்லாம் ஆண்டவன் செயல்.
கேள்வி:- நீங்கள் பகுத் தறிவு குடும்பத்தை சேர்ந்தவர் அல்லவா? ஆண்டவன் என்று குறிப்பிடு கிறீர்களே?
பதில்:- நான் ஆண்டவன் என்று குறிப்பிட்டது என் தந்தையை. அவரில்லாமல் நானில்லை. அடுத்து இந்த படத்தில் என்னை பாட வைத்த இசையமைப்பாளர் தேவாவுக்கு நன்றி.
கேள்வி:- தொடர்ந்து சினிமாவில் பாடுவீர்களா?
பதில்:- நான் 20 வருடங் களுக்கு முன்பு சினிமாவில் பாடினேன். அதன்பிறகு, இப்போதுதான் பாடியிருக் கிறேன். ஆனால், இடையில் தினமும் பயிற்சி செய்து வந்தேன். என்னை மீண்டும் சினிமாவில் பாட வைத்ததில் முக்கிய பங்கு என் மகன் டாக்டர் அறிவுநிதிக்கு உண்டு. தொடர்ந்து சினிமா வில் பாட முடிவு செய் திருக்கிறேன்.
கேள்வி:- மீண்டும் நடிப் பீர்களா?
பதில்:- சந்தர்ப்பம் கிடைத்தால் நடிப்பேன். டைரக்டர் கே.ராஜேஸ்வர் ‘இந்திர விழா’ என்ற படத்தில் நடிப்பதற்காக என்னை கேட்டிருக்கிறார். யோசித்து சொல்கிறேன் என்று பதில் சொல்லி இருக்கிறேன். அந்தப் படத்தில் எனக்கு கதாநாயகனுக்கு அப்பா வேடம்.
கேள்வி:- சினிமாவில் மீண்டும் பாடுவதற்கு முன்பு உங்கள் தந்தையிடம் வாழ்த் துப் பெற்றீர்களா?
பதில்:- அப்பாவுடன் போனில் பேசி வாழ்த்துப் பெற் றேன். என்னை வளர்த்த சண்முகசுந்தரம்மாளிடம் நேரில் வாழ்த்துப் பெற்றேன்.
கேள்வி:- இன்னும் உங்கள் குரல்வளம் ‘கணீர்’ என்று இருக்கிறதே?
பதில்:- என் மாமா சிதம்பரம் ஜெயராமன் மிகப் பெரிய பாடகர். அந்த ரத்த தொடர்பு எனக்கு இருக்கு மல்லவா?
Thursday, March 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//Labels: பாமக பரதேசி அரசியல் //
இந்த திரிக்கான லேபிள் வித்தியாசமாக இருக்கிறதே உடன்பிறப்பு? :-)
இராமதாஸ் அய்யா மாதிரி எனக்கும் எதெற்கெடுத்தாலும் கூட்டணி கட்சியை குறை சொல்லும் வியாதி வந்துவிட்டது என்று நினைக்கிறேன். குறிச்சொல்லை மாற்றிவிட்டேன் நன்றி
பேட்டியின் முதல் பகுதியை மறந்துவிட்டேன் இப்போது இணைத்து இருக்கிறேன்
நீங்கள் மாற்றிவிட்டீர்கள் ஆனால் ராமதாஸ் மாறுவதாக தெரியவில்லையே
Post a Comment