தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி திரு.ஞானி ஆனந்தவிகடனில் தரம் தாழ்ந்து எழுதிய போதே அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்தேன். அது இப்போது உறுதியாகிவிட்டது. ஆனந்தவிகடனில் இருந்து அடித்துவிரட்டப்பட்ட போதே மனிதருக்கு உரைத்து இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையிம் தரம் தாழ்ந்து போவதில் தன்னைத் தானே அவர் முந்திக் கொள்கிறார்
ஜெ - சசி பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக கலைஞர் மற்றும் மக்கள் தொலைக்காட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லும் ஞானி மேலே உள்ள இரண்டாம் படத்தில் உள்ள நிகழ்ச்சி நடந்த போது அகில இந்திய அளவில் ஊடகங்கள் எல்லாம் இதே போல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுதினாரா. பெண்ணீயத்துக்கு ஆதரவாக செயல்பட்டாரா. இப்போது மட்டும் அவ்வாறு நடந்து கொள்வதற்கு வெறும் துவேசம் தான் காரணமா. தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வு எடுக்க அறிவுரை செய்யும் ஞானி முதலில் அதை தான் பின்பற்றட்டும். அவர் மட்டும் இன்னும் இளைஞரா என்ன?
Thursday, March 06, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அது உண்மையில் காற்றி முத்தமிட்டுக் கொண்டதை ஒரு கோனத்தில் பார்க்கும் போது முத்தமிட்டதுப் போலவே இருக்கிறது.
இதற்கு ஞானி ஒன்னும் சொல்லவில்லையா..கேட்டாச் சொல்லுவாரோ என்னமோ.. :)
//அவர் மட்டும் இன்னும் இளைஞரா என்ன?//
நல்ல கேள்வி
ஞாநி இந்த வாரமும் குமுதத்தில் விஷமத்தை வாந்தியெடுத்துள்ளார். ராஜீவ் கொலை பற்றி பிரபாகரன் சொன்ன அது ஒரு துன்பியல் சம்பவம் என்ற வாக்கியத்தை வேண்டுமென்றே மேற்கோள் குறிக்குள் எழுதியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் ராஜீவைக் கொன்றீர்களே, ஜெயவர்தனேவைக் கொன்றீர்களா? என்றும் கேட்கிறார். ஞாநி என்னதான் சொல்லவருகிறார், ராஜீவை கொன்றது தவறு என்கிறாரா, ஜெயவர்தனேவைக் கொல்லாமல் விட்டது தவறு என்கிறாரா?
ஞாநி தொடர்ந்து தமிழ் விரோத சக்திகளுக்கு விருந்து வைத்து வெற்றிலை மடித்துக் கொடுக்கிறார்.
அவர் குமுதத்தில் எழுத ஆரம்பித்த போது முதல் பக்கத்தில் விளம்பரம் வந்தது. ஓ பக்கங்கள் இப்போது நகர்ந்து நகர்ந்து கடைசி பக்கத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் பின்னட்டைக்கும் வெளியில் தள்ளப்பட்டுவிடும்.
Post a Comment