Tuesday, March 04, 2008

சுஜாதாவும் மனிதநேய காவலர்களும்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்துக்கு முதலில் என் ஆழ்ந்த அனுதாபங்கள். சுஜாதா அவர்களின் மறைவுக்கு தமிழ்மணமே சில மணிநேரம் செயலிழந்து அஞ்சலி செலுத்தியது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தும் பதிவுகள். மனிதநேயம் இன்னும் நிறையவே மீதம் இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே பெருமபலும் எழுதுபவர்கள் தங்கள் சிறுவயதில் சுஜாதா அவர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த பாதிப்பு இன்னும் இருப்பதால் இன்னும் எழுதிக் கொண்டு இருப்பவர்கள்

இந்த அஞ்சலி பதிவுகளுக்கு நடுவே சில விமர்சனப் பதிவுகள். அந்த பதிவுகளுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். எதிர்த்தவர்கள் அனைவருமே தங்களை மனிதநேயக் காவலர்களாக காட்டிக் கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் இங்கே காணப்படும் படத்தை ஒரு கணம் பார்க்கவும்




இந்த படம் மிகவும் பரிச்யமானது தான். இந்த முறை கழகம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியபோது மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டது. உங்களுக்கும் வந்திருக்கும். நம் பதிவுலகின் மனிதநேயக் காவலர்களுக்கும் வந்திருக்கும். தலைவர் கலைஞர் அவர்களை அரசியல் தலைவர் என்கிற ரீதியில் விரும்பாவிட்டாலும் அவரின் வயதை கருத்தில் கொண்டு சிறிய நாகரீகம் கூட கடைப்பிடிக்காதவர்கள் இந்த படத்தை உருவாக்கியவர்கள். இந்த படம் தங்கள் மின்னஞ்சல் பெட்டியில் வந்த போது நம் மனிதநேயக் காவலர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று தங்கள் மனசாட்சியை கொஞ்சம் எழுப்பி கேட்பார்களா. அல்லது இவர்கள் மனிதநேயம் சில வேளைகளில் மட்டும் தான் விழித்துக் கொள்ளுமா?

10 comments:

Anonymous said...

See Here or Here

Anonymous said...

THe Photo is bad one right. But is it published in tamil manam ?

I think your are comparing Oranges and Apples.

Just wait for some time. Someone will find some photo / statement made by Karunanithi about MGR.

Not sure when we are going to stop this nonsense

said...

//THe Photo is bad one right. But is it published in tamil manam ?//

சில காயங்களுக்கு மருந்து தடவினால் குணமாகிவிடும் சில காயங்களுக்கு அறுவை சிகிச்சை தேவை

Anonymous said...

இந்தப் புகைப்படத்தை இப்போதுதான் பார்க்கிறேன். எனக்கு அப்படி ஒன்று அந்த செய்தியுடன் வந்திருந்தால் அதை கணிணியின் குப்பைக்கூடைக்கு
அனுப்பியிருப்பேன்.அதை தமிழ்மணத்தில் வெளியிடமாட்டேன்.
அனுப்பியவருக்கு கண்டன பதில்
போட்டிருப்பேன்.

அது சரி, நீங்கள் அதைக் கண்டித்து
படத்துடன் பதிவு போட்ட மாதிரி
தெரியவில்லையே, ஏன்?.

said...

//தலைவர் கலைஞர் அவர்களை அரசியல் தலைவர் என்கிற ரீதியில் விரும்பாவிட்டாலும் அவரின் வயதை கருத்தில் கொண்டு சிறிய நாகரீகம் கூட கடைப்பிடிக்காதவர்கள் இந்த படத்தை உருவாக்கியவர்கள்.//

தலைவர் கலைஞரை அறிவிலிகள் ஆயிரம் முறை வதந்திகளாகவே சாகடித்திருக்கிறார்கள். மரணத்துக்கு அஞ்சாமல் ஈட்டிமுனைக்கு எதிரே தன் மார்பை காட்டக்கூடிய தலைவர் கலைஞர் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் எனக்கும் வந்ததுண்டு. ஆனால் கோபத்துக்கு பதிலாக அப்போது எனக்கு புன்னகை தான் வந்தது!

நல்ல பதிவுக்கு நன்றி உடன்பிறப்பு!!

Anonymous said...

"நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் எனக்கும் வந்ததுண்டு. ஆனால் கோபத்துக்கு பதிலாக அப்போது எனக்கு புன்னகை தான் வந்தது!"

ஐயய்யோ, லக்கி மனித நேயக்
காவலர் இல்லையா:) புன்னகை
வந்தது என்கிறாரே, என்ன கொடுமை
இது, தலைவரைப் பழித்தவனைத்
தாய்தடுத்தாலும் விடேன் என்று
கையில் வேல் கொண்டு தலைவரைப்
பழித்தவரை தாக்குதல் காளைக்குக்
கடனே என்று புதிய புறநானூற்று
மகனாக கிளம்பியிருக்க வேண்டாமா,
யார் தடுத்தது, ஒருவேளை நமீதா
படமும் அத்துடன் சேர்ந்து வந்ததோ,
அதைப் பார்த்து கடமை மறந்து,
கயல்விழியின் வலைவீச்சில் வீழ்ந்திட்டாரா இல்லை :).
உடன்பிறப்பே லக்கி போகிற
ரூட் சரியில்லை, அவ்வளவுதான்
சொல்வேன் :)

said...

//ஐயய்யோ, லக்கி மனித நேயக்
காவலர் இல்லையா:) புன்னகை
வந்தது என்கிறாரே, என்ன கொடுமை
இத//

இது தான் உடன்பிறப்புகளுக்கும் மனிதநேய காவலர்களுக்கும் உள்ள வித்தியாசம்

//அது சரி, நீங்கள் அதைக் கண்டித்து
படத்துடன் பதிவு போட்ட மாதிரி
தெரியவில்லையே, ஏன்?//

இது மிகவும் பொருத்தமான தருணம் தானே

said...

//இந்தப் புகைப்படத்தை இப்போதுதான் பார்க்கிறேன். எனக்கு அப்படி ஒன்று அந்த செய்தியுடன் வந்திருந்தால் அதை கணிணியின் குப்பைக்கூடைக்கு
அனுப்பியிருப்பேன்.அதை தமிழ்மணத்தில் வெளியிடமாட்டேன்.
அனுப்பியவருக்கு கண்டன பதில்
போட்டிருப்பேன்.

அது சரி, நீங்கள் அதைக் கண்டித்து
படத்துடன் பதிவு போட்ட மாதிரி
தெரியவில்லையே, ஏன்?.//

உங்கள் கருத்து கூட முன்னுக்கு பின்னாக இருக்கிறதே

Anonymous said...

//அது சரி, நீங்கள் அதைக் கண்டித்து
படத்துடன் பதிவு போட்ட மாதிரி
தெரியவில்லையே, ஏன்?//

\\இது மிகவும் பொருத்தமான தருணம் தானே\\


சுஜாதா இறந்திடுவாரு அப்புறம் அதுக்கு இரங்கல் பதிவுகள் வரும்...
அப்புறம் அதை எதிர்த்து சிலர் பதிவு போடுவாங்க... அப்புறம் மனித
நேய காவலர்கள் வந்து கூச்சல் போடுவாங்க என்று முன்பே எதிர்பாத்து
அதாவது சுஜாதா இறப்பதற்கு முன்பிருந்தே வெயிட் பண்ணிணீங்களா?
என்ன ஒரு தீர்க்க தரிசனம்?

Anonymous said...

//சுஜாதா இறந்திடுவாரு அப்புறம் அதுக்கு இரங்கல் பதிவுகள் வரும்...
அப்புறம் அதை எதிர்த்து சிலர் பதிவு போடுவாங்க... அப்புறம் மனித
நேய காவலர்கள் வந்து கூச்சல் போடுவாங்க என்று முன்பே எதிர்பாத்து
அதாவது சுஜாதா இறப்பதற்கு முன்பிருந்தே வெயிட் பண்ணிணீங்களா?
என்ன ஒரு தீர்க்க தரிசனம்?//

இப்போதாவது உரைக்க வேண்டியவர்களுக்கு உரைத்தால் சரி