கடந்த சில நாட்களாக தமிழ் வலைப்பதிவர்களிடையே நடந்து வரும் மோதல் மோசம் அடைந்து வருவதால் இந்த பதிவை எழுதுகிறேன். இதில் எனக்கு தெரிந்த கருத்துகளை எழுதுகிறேனே தவிர யார் சரி யார் தவறு என்று அல்ல. வலைப்பூக்களின் மூலம் நம்மால் எவ்வளவோ நல்லவை செய்ய முடியும் ஆனால் நம் தமிழ் வலைப்பூவுலகம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாலேயே இந்த பதிவை எழுதுகிறேன்
யார் இந்த டி.பி.சி.டி என்று திரு. கோவியார் அவர்கள் எழுதிய பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன் http://govikannan.blogspot.com/2007/10/tbcd.html
//
பல சமயங்களில் இது தான் தமிழ் வலைப்பதிவுலகின் சாபக்கேடோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவர் எழுத ஆரம்பித்தால் அவர் என்ன எழுதுகிறார் என்பதை மறந்துவிட்டு அவர் யார் என்ன செய்கிறார் என்று அறிய விழைகிறோம். இதனால் தான் தனி மனித தாக்குதல் மலிந்து கிடக்க காணப்படுகிறது தமிழ்ப் பதிவுலகம்
//
நான் பயந்தது போலவே தான் இப்போது நடந்து வருகிறது. பதிவர்கள் கோவியார், குழலி, செந்தழல் மற்றும் ஓசை செல்லா ஆகியோர் மூத்த பதிவர்கள். எனக்கு வலைப்பூ பற்றி அறிமுகம் கிடைக்கும் முன்னரே இவர்கள் எல்லாம் நட்சத்திரங்கள். நான தவறாது படிக்கும் பதிவுகள் இவர்களுடையது. இன்று அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுகளால் அவர்களுடைய எழுத்துக்கள் எல்லாம் புறம் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது
எனக்கும் பதிவர் வட்டம் மொக்கைப் பதிவுகள் போன்றவற்றில் ஈடுபாடு கிடையாது என்றாலும் உடன்பிறப்பு லக்கிலுக் கேட்டுக் கொண்டதால் சில தடவைகள் பத்வர்களுடன் சந்தித்து இருக்கிறேன். என்னுடைய பார்வையில் இவர்கள் எல்லோருமே தங்கள் எழுத்துக்கள் மூலம் எதையோ சாதிக்கப் பிறந்தவர்கள் என்று தான் எண்ணி இருந்தேன். இவர்கள் முட்டிக் கொள்வதால் நமக்கென்ன இன்று என்னால் இருக்க முடியவில்லை
எழுதுபவர்களின் எழுத்தை மறந்துவிட்டு அவர்களின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட வேண்டும். இவர்கள் தங்கள் கருத்துகளால் மோதி தமிழ் பதிவுலகை சுவாரஸ்யமாக ஆக்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சூழலுக்காக ஏங்கிக் கிடக்கும் தமிழ் வாசகன் என்னும் நிலையில் இருந்து இதைக் கேட்டுக் கொள்கிறேன்
Wednesday, February 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்ல பதிவு உடன்பிறப்பு!
நல்ல சூழல் விரைவில் மலரும் என்று நானும் தங்களைப் போலவே எதிர்பார்க்கிறேன்.
///நல்ல சூழல் விரைவில் மலரும் என்று நானும் தங்களைப் போலவே எதிர்பார்க்கிறேன்.///
நான் கூட அதையே எதிர்பார்த்திருக்கிறேன்...!!!!
தக்க சமயத்தில்..சரியான அறைகூவல் நண்பரே..
/**"தமிழ் வலைப்பதிவர்களே ஒன்றுபடுங்கள்"**/
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
நானும் எதிர்ப்பார்க்கிறேன். 2005ல் நான் வலைப்பதிவில் வந்த சமயம்.. குழலி, நான், இன்னும் பலர் கோ கனேஷ், ஞானபீடம் , ராமா , என்றென்றும் பாலா .. ராம்கி துளசியக்கா, ஷ்ரேயா, பத்மபிரியா சொல்லிக்கொண்டே போகலாம்.. இதில் சிலர் இப்போது எழுதுவதில்லை..
2005 லும் சில சங்கட பதிவுகள் வந்தது..மோதல் இருந்தது ஆனால் இப்போது இருப்பதுப்போல் மோசமான நிலை இல்லை..
அது ஒரு அழகிய காலம்.. நடுவில் 1.5 வருடம் சில காரணங்களால் இடைவெளி விட்டு மீண்டும் வந்து பார்க்கும் போது அதிர்ச்சியான மாற்றங்கள்.. தமிழ்மணமே மணம் இழுந்து போயிருந்தது.. பல புதிய பதிவர் வருகை சந்தோசமென்றாலும்.. நடைப்பெறும் விவாதங்கள் சொல்லிக்கொல்லும்படி இல்லை..
மாறும் என நம்புவோம்..
//
நல்ல சூழல் விரைவில் மலரும் என்று நானும் தங்களைப் போலவே எதிர்பார்க்கிறேன்.
//
நானும் இதையே எதிர்பார்க்கிறேன் உடன்பிறப்பு....
ஒரு சிலர் மணம் வைத்தால் விரைவில் அந்த நல்ல சூழல் மலரும்..
இவர்கள் தங்கள் கருத்துகளால் மோதி தமிழ் பதிவுலகை சுவாரஸ்யமாக ஆக்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சூழலுக்காக ஏங்கிக் கிடக்கும் தமிழ் வாசகன் என்னும் நிலையில் இருந்து இதைக் கேட்டுக் கொள்கிறேன் - உடன்பிறப்பு
வழிமொழிகிறேன்!!!
அடுத்து, ‘நல்ல சூழல் விரைவில் மலரும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று சொல்லும் நிலைக்கு வாசகர்களை/பதிவர்களை தள்ளிய ‘கெட்ட' சூழ்நிலை எதிர்காலத்தில் வராமல் தடுத்து - என்றென்றும் ‘தமிழ்மணம்' கமழ - 'தமிழ்மனம்' கொண்ட பதிவர்கள் ஒன்றுபட்டு-ஒத்துழைக்க வேண்டும்.
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!
வழிமொழிகிறேன்.
பெரியார் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்குள் எந்த காரியத்தில் நெருங்க முடியுமோ அந்த காரியத்தின் அடிப்படையில் நெருங்குங்கள். பிரச்சினையை பெரிதாக்கி பிரிந்து போய் விடாதீர்கள். அதுவே ஆரோக்கியமானதாக இருக்கும், உடன்பிறப்பு எதிர்பார்க்கும் நல்ல சூழல் இதன் மூலமே அமையும் - நாகூர் இஸ்மாயில்
Post a Comment