Tuesday, June 30, 2009

முதல்வர், துணை முதல்வருக்கு பத்திரிக்கையாளர் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்ட தமிழக அரசியல் வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், துரித நடவடிக்கை எடுத்த முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படுள்ளது.

ராமநாதபுர மாவட்ட தமிழக அரசியல் என்ற வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் என்கிற ரவிச்சந்திரன் ராமநாதபுரம் நகர திமுக செயலாளர் ரத்னம் மற்றும் சிலரால் காரில் கடத்தப்பட்டுள்ளார். மேலும் நிருபர் கிஷோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த செயலுக்கு சென்னை பிரஸ் கிளப், கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிருபர் கிஷோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறையினரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக முதல்வர் கருணாநிதி பாராபட்சம் பாரமல் கடும் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் தி.மு.க., நகரச் செயலர் ரத்தினம் பிடியில் இருந்த நிருபர் கிஷோர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையின் பேரில் விடுவிக்கப்படடுள்ளார். மேலும் நகரச் செயலர் ரத்தினம் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் நகர தி.மு.க., செயலர் ஆர்.ஜி.ரத்தினம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் தி.மு.க., உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

பத்தரிக்கையாளர்களின் உணர்வுகளை அறிந்து புரிந்து தக்க தருணத்தில் நேர்மைக்கு துணை நின்று நிருபர் கிஷோரை உயிருடன் மீட்ட தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ரத்தினம் மீது உடனே நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்

நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, June 25, 2009

அல்-ஜசீராவில் நக்கீரன்



Wednesday, June 24, 2009

டிரான்சிஸ்டரும், டேப் ரிக்கார்டரும் - நினைவலைகள்



கால ஒட்டத்தின் சுழற்சியில் காணாமல் போன் விஷயங்கள் சில தொலைந்து போன விஷயங்கள் பல. அப்படி நினைவுகளுக்குள் கரைந்து போன விஷயங்களை அசை போடுவது தான் இந்த இடுகை. ஒரு பத்து இருபது வருடத்துக்கு முன்னெல்லாம் பல வீடுகளை அலங்கரித்த முக்கியமான மனமகிழ் சாதனம் தான் டிரான்சிஸ்டர். இது ஒரு வகையில் வானொலி மாதிரியே பயன்பட்டாலும் இதற்கு ஏன் டிரான்சிஸ்டர் என்ற பெயர் வந்தது என்று சிறுவயதிலேயெ அடிக்கடி குழம்பிக் கொள்வேன். எங்கள் தெருவில் ஒரு சிஸ்டர் (தமிழில் அக்கா) சதா நேரமும் அந்த டிரான்சிஸ்டரையே வைத்து பாட்டு கேட்டு கொண்டு இருப்பார்கள். சிஸ்டர்கள் எல்லாம் அதிகம் விரும்புவதால் ஒரு வேளை அதனால் தான் அதற்கு டிரான்சிஸ்டர் என்ற பெயர் வந்திருக்குமோ என்ற அளவுக்கு சிந்தித்து இருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் கரண்ட் போனால் வானொலி இயங்காது ஆனால் டிரன்சிஸ்டர் பேட்டரி கட்டையில் இயங்கும் என்ற ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும் கண்டறிந்தேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டிரான்சிஸ்டர் வெகுஜன புழக்கத்தில் தன் சிறப்பை இழந்தது

எங்கள் தெருவில் ஒரு இஸ்திரி கடை இருந்தது அந்த கடைக்காரர் ஒரு டிரான்சிஸ்டர் வைத்து இருந்தார். அவர் அதிகாலையில் வந்து தனது கடையை திறக்கும் போது அந்த டிரான்சிஸ்டரை ஆன் செய்தால் இரவு கடையை மூடிவிட்டு போகும் போது தான் அதை நிறுத்துவார். பல சமயங்களில் அந்த இஸ்திரி கடை டிரான்சிஸ்டர் தொல்லையாகவே தெரிந்தாலும் மாலை வேளைகளில் கரண்டு போய் வீட்டுக்கு வெளியே வந்து உட்கார்ந்து இருக்கும் போது அது மட்டுமே பொழுதுபோக்காக அமையும். அப்படி ஒரு நாள் கரண்டு இல்லாத மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் பொழுதை கழித்து கொண்டு இருக்கும் போது தான் அந்த டிரான்சிஸ்டர் வழி வந்த செய்தியில் இலங்கைக்கு விஜயம் செய்த ராஜீவ் காந்தியை ஒரு சிங்களவன் துப்பாக்கியால் தாக்கிவிட்டான் என்ற செய்தியை சுடச்சுட கேட்டோம். உடனே தெருவில் போவோர் வருவோர் உட்பட அந்த இஸ்திரி கடையை சுற்றி செய்தி கேட்பதற்கென்றே கூட்டம் கூடியது. செய்தி முடிந்தவுடன் பெரிசுகள் எல்லாம் இந்த விஷயத்தை துவைத்து காயப்போட்டு கொண்டு இருந்தார்கள். இணையத்தில் ஏதாவது ஒரு விஷயம் கிடைத்தால் அதை வைத்து வலையுலகில் சில காலம் ஓட்டுவோமே அது மாதிரி அந்த அரசியல் ஞானிகள் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் சிலரின் வாதங்கள் நன்றாகவே இருக்கும். ராஜீவ் காந்திக்கு இலங்கை வலை விரிக்கிறது என்றும் இந்தியா இலங்கையை நம்பக் கூடாது என்றும் அவர்கள் பேசியது நன்றாக நினைவு இருக்கிறது



இந்த டிரான்சிஸ்டரிலேயெ இன்னொரு வகை உண்டு அது பாக்கெட்டு டிரான்சிஸ்டர். இது முக்கியமாக இளசுகளின் பேவரைட்டாக இருந்தது. இன்றைய தேதியில் ஏதோ ஐபாடு வாய்ப்பாடு என்றெல்லாம் பிலிம் காட்டி கொண்டு திரிகிறார்களே இவர்கெளுக்கெல்லாம் முன்னோடி தான் இந்த பாக்கெட்டு டிரான்சிஸ்டர், டிரான்சிஸ்டரின் மின்யேச்சர். கைக்கு அடக்கமாக இருக்கும். அரபு நாடு ஒன்றுக்கு சென்று திரும்பி வந்த சலீம் பாய் பல நாட்களாக இந்த பாக்கெட்டு டிரான்சிஸ்டரை வைத்து தான் பிலிம் காட்டிக் கொண்டு இருந்தார். நாங்கள் கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதற்கு அவரை தான் நச்சரிப்போம்

டிரான்சிஸ்டருக்கு இணையான மற்றொரு மனமகிழ் சாதனம் டேப் ரிக்கார்டர். இது இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் வெகுவாக குறைந்துள்ளது. இப்போதெல்லாம் முழு நேர மியூசிக் சேனல்களின் ஆக்கிரமிப்பால் வீடுகளில் வெறும் ஆடியோவை மட்டும் கேட்பது கணிசமாக குறைந்துவிட்டது. டேப் ரிக்கார்டரில் கேசட்டு போட்டு பாடல் கேட்பதை விட அதில் நம் குரலை பதிவு செய்து அதை கேட்பதில் தான் அலாதி பிரியம். எங்கள் வீட்டுக்கு டேப் ரிக்கார்டர் வந்த போது அதை நாங்கள் எதிர்பார்க்காததால் கேசட்டு எதுவும் இல்லை அதுவும் இரவு நேரம் ஆகிவிட்டது அதனால் பக்கத்து வீட்டில் சென்று கேட்டோம். கிறுத்துவரான அவரோ புதுசா டேப் வாங்கியிருக்கீங்களா முதலில் யேசு பாட்டை போடுங்க என்று சொல்லி சில கிறுத்துவ பாடல் கேசட்டுகளை கையில் கொடுத்தார். பிரீயா கிடைக்கிற மாட்டுக்கு பல்லையா பிடிச்சு பார்க்க முடியும் என்று அன்று இரவு மட்டும் கிறித்துவ பாடலகள் ஒலிபரப்பினோம். கேசட் கொடுத்தவருக்கும் அதை கேட்டு சந்தோஷம். எப்படா விடியும் அடுத்த நாள் அப்ப வரும் என்று தூங்கினோம். அடுத்த நாள் வந்தது, நண்பர்கள் வீட்டுக்கு சென்று இருக்கிற கேசட்டுகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து அலற விட்டுட்டோம்ல

இதுக்கு எத்தனை மார்க் போடுவாங்க?

இப்பெல்லாம் நாலு வரியில பதிவு போட்டு அதுக்கு சம்மந்தமே இல்லாம நச்சுன்னு ஒரு படம் போட்டாதான் மார்க் போடுவாங்களாம். இது கூட தெரியாம பல பேர் மாங்கு மாங்குன்னு எழுதறாங்களேனு நெனச்சா பாவமா இருக்கு. அதான் நமக்கும் ஒரு ஆசை நமக்கு எத்தனை மார்க் போடுவாங்கன்னு. என்ன இருந்தாலும் இந்த காலத்து யூத்துக கூட எல்லாம் போட்டி போட முடியுமா நம்மால? ஏதோ நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி ஒரு படத்தை போட்டிருக்கேன் ஏதோ பாத்து போடுங்க பாஸு பார்டர்ல பாஸ் ஆனாலும் ஓகே தான் பாஸு.



இந்த படத்தில் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு இருக்கா? இருந்தா படத்தை எடுத்த போட்டோகிராபருக்கு மார்க்கை குறைச்சுட்டு நமக்கு சேர வேண்டிய மார்க்கை குடுத்துடுங்க பாஸு

Tuesday, June 23, 2009

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இலங்கை அனுமதி

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான "சேவா இன்டர்நேஷனல்' என்ற அமைப்பிற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தமிழர்கள் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை அரசு அமைத்துள்ள அகதி முகாம்களில் மட்டும் சுமார் 3 லட்சம் தமிழர்கள் சிறைச்சாலையைவிட கொடுமையான சூழலில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இலங்கையில் அவதிப்பட்டு வரும் தமிழர்களுக்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருள்கள் அடங்கிய "வணங்காமண்' கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அந்தக் கப்பல் தற்போது சென்னை துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பான "சேவா இன்டர்நேஷனல்' உள்ளிட்ட சில அமைப்புகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
"உணவு, உடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், கம்பளிப் போர்வைகள், குடைகள், கொசுவலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு விரைவில் அளிக்கப்படும்' என்று சேவா இன்டர்நேஷனல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

"சுனாமி ஏற்பட்டபோது சேவா இன்டர்நேஷனல் அனுப்பிய குஜராத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் இலங்கையில் மருத்துவச் சேவையில் ஈடுபட்டனர். அதேபோல தற்போதும் குஜராத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் மருத்துவக் குழுவினர் இலங்கைக்குச் செல்வார்கள்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்

நன்றி: தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணி: ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இலங்கை அனுமதி

Monday, June 22, 2009

அறிமுகம்: குட்டி உடன்பிறப்பு

கழகத்தின் அடுத்த தலைமுறை களத்தில் இறங்கிவிட்டது. களப்பணி ஆற்றுவதற்கு இன்னும் வயது ஆக வேண்டும் இந்த குட்டி உடன்பிறப்புக்கு. ஆனால் இணையத்தில் கழகப்பணி ஆற்றுதவற்கு இப்போதே தயாராகிவிட்டார். நமது முந்தைய இடுகையான பஜ்ஜி பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம் மூலமாக தான் கண்டுகொண்டோம் இந்த சீறும் சிறுவயது சிங்கத்தை. அந்த பின்னூட்டத்தை வாசித்தவுடன் அனுபமிக்க ஒரு கழக தோழராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை தொடர்பு கொண்ட போது தான் தெரிந்தது அவர் இன்னும் சிறுவர் அணி தான் என்று. சிறுவர் ஆனாலும் ஆற்றலில் வியக்க வைக்கும் அறிவு நிரம்பவே இருக்கிறது. தொடர்ந்து இணையத்தில் பதிவுகளை வாசித்து வந்து கொண்டு இருக்கிறார். அவரை இணையத்தில் எழுத அழைத்த போது அவர் சற்றும் அதை எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர் சார்பாக அவரது பின்னூட்டத்தை இங்கு இணைத்து இருக்கிறோம். கூடிய விரைவில் நம் குட்டி உடன்பிறப்பு தன் சொந்த பெயரியேலேயே எழுதுவார் என்று எதிர்பார்க்கிறோம்

==================================================================
உடன்பிறப்பு பஜ்ஜி என்றவுடன் ஒரு நினைவு வருது பகிர்ந்துக்க ஆசை.

ஒரு தடவை மயிலாடுதுறையிலே 1965ம் ஆண்டு. நான் பிறக்கவில்லை. எங்க தாத்தா, கோ சி மணி ஆகியோர் ஒரு பொது கூட்டத்துக்கு ஏற்பாடு. அண்ணா,சிறப்பு பேச்சாளர். அண்ணாநடிப்பிசை புலவர் கே ஆர் ராமசாமி அவர்களிடம் காரை இரவல் வாங்கிகிட்டு ஓட்டுனர் கிடைக்காமையால் டி. என் ராஜரத்தினம் அவர்களின் ஓட்டுனரை கூட்டிகிட்டு அண்ணா காஞ்சியில் இருந்து கிளம்பியாச்சு.

நம்ம அண்ணா கொள்ளிடம் ஆற்றை தாண்டி வரும் போது ஆற்று மணல் பார்த்தவுடன் காரை நிப்பாட்டிட்டு படுக்கை போட்டுட்ட்டாரு.

இங்கயோ செம கூட்டம். எத்தனை நேரம் தான் சமாளிப்பது. அப்ப உடனே ஒரு கார் ஏற்பாடு செஞ்சு அன்னிக்கு கோவில் திருமாளம் என்ற ஊர்ல இருந்த கலைஞரை தூக்கிகிட்டு வந்தாச்சு.

கலைஞருக்கு அப்போ உடல் நிலை சரியில்லை. பேச முடியாதா நிலை. ஆனா அவருவந்து மேடையிலே உட்காந்து கிட்டு N. கிட்டப்பாவை முழங்க சொல்லிட்டூ உட்காந்து இருக்கார்.

கூட்டம் நடப்பது நகராட்சி பூங்கா. அப்ப கீழே ஒரு நடமாடும் பஜ்ஜி கடை. பஜ்ஜி வாசம் மூக்கை துளைத்ததாள் கலைஞர் கூட ஒன்னு வாங்கி சாப்பிட்டார்.

கலைஞரே சாப்பிட்ட உடனே கூட்டம் முழுக்க அண்ணாவின் வருகையை மறந்து விட்டு பஜ்ஜி கடைக்கு போயிடுச்சு. 10 நிமிஷம் எல்லா வாழைக்காய், வெங்காயம் எல்லாம்போச்சு.

இதை கலைஞரும் கவனித்து கிட்டே இருக்கார்.

ஆச்சு. அண்ணா வந்தாச்சு. அண்ணாவுக்கு பஜ்ஜி வாசம் பிடித்து போக கலைஞரை பார்த்து "ஒரு பஜ்ஜி வாங்குங்க தம்பி"

அதுக்கு கலைஞர் அண்ணாவிடம் "ஏன் அண்ணா உங்களுக்கு ஆதித்தனாரை பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால ஆதித்தனார் பஜ்ஜி சாப்பிடனுமா? என்று கேட்க அண்ணாவுக்கு புரிஞ்சு போச்சு.

மேடையில் இருந்த யாருக்கும் இது என்ன என்பது என தெரியலை.

என்ன கூத்துன்னா வாழைக்காய் எல்லாம் தீர்ந்து போன்ன பின்னே தின தந்தி பேப்பரை கட் பண்ணி மாவில் துவைத்து பஜ்ஜி வியாபாரம் நடந்து கிட்டு இருந்தது. மேடையில் இருந்தாலும் கலைஞர் அதை கவனிச்சு கிட்டு இருந்திருக்கார்.

உங்க பஜ்ஜி பதிவிலே இதை நான் ஆசை ஆசையா பதிகிறேன்!

Friday, June 19, 2009

பஜ்ஜிமணம், பஜ்ஜிகூடு, பஜ்ஜிலிஷ், "சூடான பஜ்ஜிகள்", பஜிவர்கள் மற்றும் பஜிவர் கூட்டம்

இது உங்களுக்கு தெரிஞ்ச கதை தான் ஆனா திரைக்கதையை மட்டும் வித்தியாசமா அமைக்க முயற்சி செய்து இருக்கிறேன். கலைஞரும் பொறுப்புகளை எல்லாம் தளபதிகிட்ட கொடுத்துவிட்டு மீண்டும் கலைச்சேவை ஆற்ற கிளம்பிவிட்டார். அதனால் நமக்கும் கதை, திரைக்கதை பக்கம் ஆர்வம் வந்துவிட்டது. ஓக்கே, இப்போது கதைக்கு போகலாம். இது ஒரு வரலாற்று கதை என்பதால் எல்லா விஷயங்களையும் தொகுத்தால் பல பாகங்களாக விரிவடையும் அதனால் இது ஒரு நல்ல அறிமுகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஊரில் ஒருவர் முதன் முதலாக பஜ்ஜி கடை ஆரம்பித்தார். அந்த கடையில் பஜ்ஜி சுட ஆரம்பித்தால் ஊர் முழுவதுமே பஜ்ஜிமணம் கமழும். இதனால் கடையில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. இந்த கடையை பஜ்ஜிமணம் என்றே அழைப்போம். அதே ஊரில் இன்னொரு பஜ்ஜி கடையும் வந்தது. ஒரே ஊரில் இரண்டு பஜ்ஜி கடைகள் இருந்தாலும் இரண்டாவது கடையிலும் பஜ்ஜி விற்பனை நன்றாகவே நடந்து வந்தது. இந்த கடையின் பெயர் பஜ்ஜிகூடு என்பதை இந்நேரம் நீங்கள் யூகித்து இருப்பீர்கள். போக போக பஜ்ஜி சாப்பிடுபவர்கள் அதிகமானார்கள். இதனால் இவர்களுக்கு பஜிவர்கள் என்ற பெயரும் வந்தது. பஜிவர்கள் பஜ்ஜி கடையை தவிர சில சமயங்களில் ஸ்டார் ஓட்டல்களிலும் சந்தித்து கொள்வார்கள். இந்த சந்திப்புகள் பஜிவர் கூட்டம் என்று அழைக்கப்படும். பஜிவர் கூட்டம் என்று அழைக்கப்பட்டாலும் இந்த சந்திப்புகளின் போது இவர்கள் ஆர்டர் செய்வது என்னவோ போண்டாவை தான்

ஒரு நாள் திடீரென பஜ்ஜுகூடு கடை மூடப்பட்டது. பஜ்ஜிமணம் கடையும் கை மாறியது. இந்த சமயத்தில் பஜ்ஜிமணம் கடையின் மணம் பக்கத்து ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்த கடையின் சிறப்பம்சம் என்ன வென்றால் இந்த கடையில் ஒரு ஓரத்தில் ஒரு பத்து பஜ்ஜிகளை சூடான பஜ்ஜிகள் என்று வரிசைப்படுத்தி வைத்து இருப்பார்கள். இந்த சூடான பஜ்ஜிகளை வாங்குவதற்கு கூட்டம் முட்டி மோதிக் கொண்டு வரும். பல சமயங்களில் இந்த சூடான பஜ்ஜிகளை வாங்குவதற்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கலவரமே நடந்து இருக்கிறது. இதனால் பஜ்ஜி மணம் கடை அவ்வப்போது சூடான பஜ்ஜிகளை எடுப்பதும் மீண்டும் வைப்பதுமாக இருந்தது

பஜ்ஜிமணத்தின் ஆதிக்கம் நிலவி வந்த பஜ்ஜி உலகில் திடீரென ஒரு புதிய பஜ்ஜி கடை தோன்றியது. இந்த கடையை பஜ்ஜிலிஷ் என்று அழைப்போம். இந்த கடை ஒரு புது விதமான யுக்தியை அறிமுகப்படுத்தியது. நீங்கள் அந்த கடையில் நீங்கள் சாப்பிட்ட ஐட்டம் உங்களுக்கு பிடித்து இருப்பதாக சொன்னால் மட்டுமே அதை அவர்கள் தங்கள் கடை ஷோ கேசில் வைப்பார்கள். இந்த முறை நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பஜ்ஜிலிஷ் கடையும் அல்லோலகல்லோலப்பட்டது. பஜ்ஜிமணமும் காலத்திற்கேற்ப பல மாற்றங்களை செய்து தன்னுடைய பஜிவர் வட்டத்தை இன்னும் விரிவுபடுத்தியது.

பஜ்ஜிமணம் மற்றும் பஜ்ஜிலிஷ் ஆகிய கடைகளின் வெற்றியை பார்த்த பக்கத்து ஊர்களிலும் பல கடைகள் தோன்ற ஆரம்பித்தன. பஜிவர்ஸ், பஜ்ஜிவெளி, பஜ்ஜிப்பதிவுகள், பஜ்ஜிடி, பஜ்ஜிமம் போன்ற கடைகள் தோன்றி பஜ்ஜி மார்க்கெட்டை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டன. இதுவரை பஜ்ஜி மார்க்கெட்டை கண்டு கொள்ளாமல் இருந்த பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கூட பஜ்ஜி உலகத்தை திரும்பி பார்க்க ஆரம்பித்து இருக்கின்றன. இந்த முன்னேற்றங்கள் பஜ்ஜி உலகில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வெள்ளித்திரையில் காணவும்

இந்த கதைக்கு வரும் ஆதரவை பொறுத்து தொடர்ந்து கதைகள் வெளிவரலாம் இல்லை என்றால் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வந்த மாதிரி நாமும் மீண்டும் அரசியல் பதிவுகளுக்கு வரும் நிலை உருவாகலாம். அதனால் கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் தவறாமல் மரியாதையாக உங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றிவிட்டு செல்லவும்

Thursday, June 18, 2009

யாழ்ப்பாணத்தில் உதயசூரியன்

யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் தாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக த.வி. கூ. தலைவர் வீ . ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கூட்டுக்கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கும் இடமளிக்கப்படும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுச்சின்னமாகிய குத்துவிளக்கு சின்னத்தில் வவுனியாவில் போட்டியிடுவது என்று முன்னர் தீர்மானித்திருந்தன. எனினும் தற்போது, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தமது சின்னமாகிய நங்கூரம் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாகத் தெரிவித்திருக்கிறது. இது செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதனால், அதற்கு தம்மால் இணங்க முடியாது என்று ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

முன்னர் இணங்கியபடி, குத்து விளக்கு சின்னத்தில் வவுனியாவிலும், உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணத்திலும் கூட்டாகப் போட்டியிடத் தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு மற்ற கட்சிகள் தயாரில்லாவிட்டால் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் தாங்கள் தனித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்

நன்றி: பாரிஸ்தமிழ்

Wednesday, June 17, 2009

சட்டப்பேரவையா? நாடக மேடையா?

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே தான் காரசாரமான விவாதம், மோதல், அமளி, ரகளை எல்லாம் நடக்கும்.

ஆனால் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்ட சம்பவம் இன்று அரங்கேறியிருக்கிறது.

நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கட்சித் தலைமைக்கும் அவருக்கும் இடையே நல்லுறவு இல்லை.

எஸ்.வி.சேகர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவப் போவதாக ஏற்கெனவே இரண்டு, மூன்று முறை செய்திகள் வெளியானது. ஒருமுறை தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவரை அதிமுகவினர் வந்து குண்டு கட்டாக தூக்கிச் சென்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்த போது சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் அவையில் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினை வாழ்த்தியும் பேசினார்.

இதனைப் பொறுக்காத அதிமுகவினர் எஸ்.வி.சேகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். பின்னர் பேசிய சேகர், அதிமுகவினரால் தமது உயிருக்கு ஆபத்து என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக உறுப்பினர் கலைராஜன் இனி பேசினால் போட்டுவிடுவேன் என்று தம்மை மிரட்டுவதாகவும், சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார் என்றும், தன் அருகில் அமர்ந்துள்ள உறுப்பினர்கள் தம்மை துரோகி என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய கலைராஜன், நாளைக்கே பன்றிக் காய்ச்சல் வந்து சேகர் படார் என்று போய்விட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா என்று கேட்டுள்ளார்.

இந்த விவாதம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் மறுத்துவிட்டார்.

சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க வேண்டிய இடம். அங்கு கொள்கை ரீதியிலான மோதல்கள் இருந்தால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மோதல் என்ற நிலை மாறி தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களே தங்களுக்குள் மோதிக் கொள்ளும் இடமாகவும் சட்டப்பேரவை மாறியிருப்பது பரிதாபத்திற்குரியது தான்.

இதுபோன்ற நிகழ்வுகள் இனி சட்டப்பேரவையில் அரங்கேறாமல் உறுப்பினர்கள் கவனத்துடன் செயலாற்ற வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். தங்கள் கட்சிக்குள் உள்ள வேறுபாடுகளை சட்டப்பேரவையில் வைத்துக் கொள்ளாமல் கட்சி அலுவலத்தில் வைத்துக் கொள்வது ஜனநாயகத்திற்கு நல்லது

நன்றி: நிகழ்வுகள்

பிராமணர்களே இல்லாத கட்சி ?!!?

ஒரு வாதத்திற்காக ஒரு கேள்வி கேட்கிறேன். நம் பெரு மதிப்பிற்குரிய திரு.சோ ராமசாமி அவர்கள் கொங்கு வேளாளர் பேரவையில் சேருவாரா. என்ன இது பைத்தியக்காரத்தனமான கேள்வியாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா. இதுக்கே இப்படி நினைத்தீர்கள் என்றால் இன்னும் கேளுங்க. சரி சோ ராமசாமியை விடுவோம். வேறு ஒரு பிராமணர் அதே கொங்கு வேளாளர் பேரவையில் சேருவாரா. இது அதைவிட பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதா. இன்னும் கேளுங்கள், இப்போது பிராமணர் எதுக்கு கொங்கு வேளாளர் பேரவையில் சேர வேண்டும் அவர்கள் பிராமண அமைப்பில் தானே சேருவார்கள் என்ற யதார்த்தம் இந்நேரம் உங்களுக்கு புரிந்து இருக்கும்

இப்போது கொங்கு வேளாளர் பேரவையை சேர்ந்த ஒருவர் எங்கள் கட்சி தான் பிராமணர்களே இல்லாத கட்சி அதனால் நாங்கள் தான் உண்மையான திராவிட கட்சி என்று தம்பட்டம் அடித்தால் உங்களுக்கு என்ன தோன்றும். இங்கே உதாரணம் தான் வேறு. உண்மையிலேயே ஒரு சாதி கட்சியை சேர்ந்த சிலர் இப்படி தான் தாங்கள் உண்மையான திராவிட கட்சி என்று சொல்லி வருகிறார்கள். என்னவோ பிராமணர்கள் எல்லோரும் இவர்களின் சாதிக் கட்சியில் சேர்வதற்கு விண்ணப்ப படிவத்தை நிரப்பி வைத்துக் கொண்டு இவர்கள் கட்சி வாசலில் இரவு பகலாக கியூவில் நிற்பதை போல் இவர்கள் கொடுக்கும் பில்டப் இருக்கிறதே அப்பப்பா காமெடியிலும் செம காமெடி

ஆனால் இப்படி தங்கள் கட்சியில் பிராமணர்களே இல்லை என்று சொல்லி திராவிடம் பேசும் இவர்கள் அமைச்சர் பதவி பெறுவதற்கும், ராஜ்ய சபா உறுப்பினர் ஆவதற்கும் கையேந்தி நிற்பது என்னவோ பிராமணர் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்தாலும் திராவிடத்தை தூக்கி கடாசிவிட்டு அந்த கட்சி வாசலில் காத்து இருப்பார்கள். இந்த பச்சோந்தி தனத்தை எல்லாம் சுட்டி காட்டினால் அவர்களுக்கு மறக்காமல் பார்ப்பன அடிவருடி பட்டத்தையும் கொடுத்து மகிழ்வார்கள் இந்த நவீன திராவிடர்கள்

திராவிடம், திராவிடம் என்று பேசிக் கொண்டே சக திராவிட கட்சிகளுக்கு குழி பறிப்பதில் வல்லவர்கள் இவர்கள். திராவிடம் என்பதெல்லாம் தங்கள் சாதி வெறியை மறைக்கும் வெறும் கருவி தான் இவர்களுக்கு

Tuesday, June 16, 2009

தமிழ்மணம் (புதிய) ஓட்டளிப்பில் உள்ள சிக்கல்

தமிழ்மணம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பல பதிவர்களுக்கு சுண்ணாம்பு தடவியது நினைவிருக்கலாம். ஒரு சில நல்ல பதிவர்களை தவிர்த்து பலரும் பரபரப்புக்காக தலைப்பை வைத்து கல்லா கட்டி வந்தார்கள். உள்ளே மேட்டர் இருக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு தலைவர் அல்லது பிரபலத்தை மிக கேவலமாக விமர்சித்து தலைப்பு வைத்து பிழைப்பு ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். நாளடைவில் இந்த வித்தையில் வல்லுநர்களாகவும் ஆனார்கள். இப்படியே ஒப்பேற்றி வந்ததாலோ என்னவோ அவர்களுக்கு வேறு நல்ல மாதிரி எழுதுவது என்றால் என்ன என்பதையே மறந்துவிட்டார்கள் போலும். தமிழ்மணம் வாக்கெடுப்பில் வந்த மாற்றத்தால் இவர்கள் நிலைகுலைந்தது என்னவோ உண்மை. அதனால் ஏதோ நல்லவனாக மாறிவிட்டது போல் சில இடுகைகள் எழுதினார்கள். ஆனாலும் அடிக்கடி ஏற்படும் அரிப்பை தீர்த்துக் கொள்ள பழைய பாணி இடுகைகளையும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள்

நம்மை பொறுத்தவரை தமிழ்மணம் மாற்றத்தை வரவேற்கிறோம். நாம் என்றுமே தமிழ்மணம் ஓட்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஏனென்றால் கலைஞர் என்ற சொல்லை பயன்படுத்திய குற்றத்திற்காகவே பல பதிவர்களின் இடுகைகளுக்கு தொடர்ச்சியாக நெகட்டிவ் ஓட்டுகள் போட்டு அவர்களை காய வைத்து வருகிறது ஒரு கூட்டம். அதுவும் நம்மை பற்றி கேட்க வேண்டுமா நம் வலைப்பதிவே கலைஞர் பெயரில் அல்லவா இயங்குகிறது அதனால் என்ன தான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் நம்முடைய இடுகையை வாசிக்காமலேயே நேராக நெகட்டிவ் ஓட்டு போடுவதற்கென்றே ஒரு கூட்டம் நம் வலைப்பதிவுக்கு வருகை தருகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பழைய இடுகைகளை சென்று பார்த்தால் பெரும்பாலும் மைனஸிலேயே ஓட்டு எண்ணிக்கை இருக்கும். என்ன தான் மைனஸ் ஓட்டுகள் குத்தினாலும் நம் மனம் தளரவில்லை. நாம் தான் ஜன்நாயக வழி நடப்பவர்கள் ஆயிற்றெ. ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தால் இயந்திரம் சரி இல்லை என்று சொல்வதற்கு நாம் ஒன்றும் எதிர் கட்சிகள் அல்லவே. சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற போது இதே இயந்திரங்கள் தானே இருந்தன அப்போது மட்டும் அடக்கி வாசித்தார்களே

இப்போது மீண்டும் தமிழ்மணம் ஓட்டெடுப்புக்கு வருவோம். தமிழ்மணம் தற்போது வாசகர்கள் வாக்களிக்க விரும்பினால் ஓபன் ஐடி மூலம் வாக்களிக்க வலியுறுத்துகிறது. இதில் எந்த குறையும் இல்லை. ஆனால் ஒரு முறை நீங்கள் வாக்களித்துவிட்டால் அதே இணைப்பில் இருந்து வேறு கணக்கை பயன்படுத்தி மீண்டும் வாக்களிக்க முடியாது. இது நல்ல விஷயம் தானே இதனால் கள்ள ஓட்டு போடுவது தடுக்கப்படுகிறதே என்ற கேள்வி எழலாம். இது மிகவும் சரி தான். ஆனால் ஒரே இணைப்பை பயன்படுத்தும் இருவர் இந்த முறை மூலம் வாகளித்தால் ஒருவரின் வாக்கு தான் பதிவாகும். அடுத்தவர் வேறு இணைப்பை பயன்படுத்தி தான் வாகளிக்க முடியும்.

Monday, June 15, 2009

விக்கிபீடியாவை கண்டு விக்கித்து நின்றவர்

தமிழ்விக்கிபீடியா குறித்த வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்தது அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்பில் ஒரு வலையுலக பிரபலம் எழுதிய இடுகையை வாசிக்க நேர்ந்தது. இந்த பிரபலம் தான் விக்கிபீடியாவை ஆதரிப்பது இல்லை என தெரிவித்து இருக்கிறார். இதில் ஒன்றும் விஷயம் இல்லை ஒரு விஷயம் ஒருவருக்கு பிடித்து இருப்பதும் பிடிக்காமல் போவதும் அவரவர் விருப்பம். ஆனால் தான் விக்கிபீடியாவை ஆதரிக்காததற்கு காரணமாக அவர் சொன்னது தான் மிகப்பெரிய நகைச்சுவை

விக்கிபீடியா ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாம். அதனால் தான் இவர் அதை ஆதரிப்பது இல்லையாம். அடங்கொன்னியா, போன மாதம் வரைக்கும் அதாவது தேர்தல் முடியும் வரைக்கும் வலை உலகை இவர்கள் ஆக்கிரமித்து கொண்டு இவர்கள் போட்ட ஆட்டம் அவ்வளவு எளிதில் மறந்துவிடுமா. தாங்கள் கூட்டம் சேர்த்தால் அது எணைய புரட்சியாம் அதுவே பிறர் கூட்டம் சேர்த்தால் ஆக்கிரமிப்பாம்

மேலும் விக்கிபீடியாவில் அன்புமணி ராமதாஸ் பற்றி அவதூறாக எழுதி இருக்கிறார்களாம். அடங்கொய்யால, கலைஞர் பற்றி நீங்கள் எழுதாத அவதூறா. சின்ன ஐயா பற்றி எழுதினால் சினம் சீறிக் கொண்டு வருகிறதோ. அதுவே கலைஞர் பற்றி எழுதினால் கல்கண்டாக இனிக்கிறதோ. இவர் அன்புமணி பற்றிய அவதூறை திருத்தினாராம் அது அடுத்த நாள் காணாமல் போய்விட்டதாம். விக்கிபீடியாவில் திருத்தம் செய்தால் என்ன திருத்தம் செய்யப்பட்டது என்பதை பார்க்கும் வசதி இருக்கிறது. அவர் சொன்ன திருத்தம் அங்கு காணப்படவில்லை என்று ஒருவர் அவருக்கு பின்னூட்டம் இட்டிருக்கிறார்

தன் வாதத்துக்கு வசதியாக டோண்டு ராகவன் போன்றோர் தங்கள் வலைப்பதிவில் பக்க சார்பாக எழுதிகிறார்களாம் அதனால் அதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறதாம். பக்க சார்பு பற்றி இவர் எழுதுவதை விட வேறு என்ன பெரிய நகைச்சுவை இருக்க முடியும். டோண்டுவை உதவிக்கு அழைத்ததன் முலம் தானும் தன் வலைப்பதிவில் சொந்த விருப்பு வெறுப்பை தான் எழுதுகிறேன் அதனால் தன்னால் டோண்டுவை புரிந்து கொள்ள முடிவதாக சொல்லாமல் சொல்கிறார்

விக்கிபீடியா கூட்டம் நடந்த இடம் வேறு இவருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பிவிட்டுள்ளது. கறுப்பு சிவப்பில் பூணூல் ஊடுறுவிவிட்டதாக அரற்றிக் கொள்கிறார். அவர் அளிக்கும் உவமையை பார்த்தால் அ.தி.மு.க. கட்சிக் கொடிக்கான விளக்கத்தை கொடுப்பதாக தெரிகிறது. இது தேர்தல் நேரத்தில் கூட்டணி வைக்கும் போதும் அ.தி.மு.க.வுக்கு வாக்கு கேட்கும் போதும் தெரியவில்லையோ. இதற்கு மேலும் தொடர்ந்து எழுதினால் பார்ப்பன அடிவருடி என்ற அரிய பட்டத்தை நமக்கு இலவசமாக அளித்துவிடுவார் அந்த அன்பு நண்பர்

தினமலர் கார்ட்டூன்



இங்க பார்றா ஒடன்பருப்புக எல்லாம் ஓப்பனா தினமலரை கோட் பண்றாங்க அப்படின்னு சொல்றாங்க. இப்படி சொல்பவர்களின் யோக்கியதை என்ன தெரியுமா. கடந்த தேர்தலில் ஓப்பனா அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்ட சிங்கங்கள் தான் இவர்கள். கலைஞர் ஆரிய திராவிட போராட்டம் பற்றி பேசினால் விமர்சனம் செய்யும் இவர்கள் நாம் தினமலரை கோட் செய்தால் அதே பல்லவியை இவர்களும் வெட்கமே இல்லாமல் பாடுகிறார்கள்

Sunday, June 14, 2009

புலிகள் மற்றும் ஜெ பற்றி திரு.சோ ராமசாமி

சிங்களவனை விட அதிக தமிழர்கள் கொல்லப்பட்டது புலிகளால் தான் என்று துக்ளக் விழா கூட்டத்திலே முழங்குகிறார் திரு.சோ ராமசாமி அவர்கள். மேலும் புலி ஆதரவை ஜெ ஒடுக்கி வைத்து இருந்தார் என்றும் கூறி ஜெயலலிதாவை மெச்சி உச்சி குளிர்கிறார் திரு.சோ அவர்கள். கலைஞர் ஆட்சியில் புலி ஆதரவாளர்களுக்கு எல்லாம் குளிரிவிட்டு போச்சு என்றும் குறைபட்டு கொள்கிறார். ஆனால் வலை உலகில் எல்லோரும் கலைஞரை துரோகி என்று அழைத்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்



“வீடியோ கான்பரன்சிங்” மூலம் திறப்பு விழா

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகால கனவாக ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் இருந்து வந்தது. இந்த திட்டம் முழு மையாக நிறைவேற்றப்பட்டு இன்று முதல் குடிநீர் வினியோகம் தொடங்கியது. முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து “வீடியோ கான்பரன்சிங்” மூலம் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

குடிநீர் திட்ட தொடக்க விழா ராமநாதபுரம், போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 600 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியும், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நகராட்சி நிர்வாக செயலாளரும், குடிநீர் வழங்கல் துறை நிர்வாக அதிகாரியுமான நிரஞ்சன்மாடி வரவேற்று பேசினார். குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் திட்ட இயக்குனர் சுவரண்சிங் திட்ட விளக்க உரையாற்றினார். குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப.தங்கவேலன் முன்னிலை வகித்தார்.

தமிழக அரசு தலைமை செயலாளர் ஸ்ரீபதி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தமிழரசி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் தென்னவன், ரித்தீஷ் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அசன்அலி, ராம் பிரபு, முருகவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டர் வாசுகி நன்றி கூறினார்.

ரூ.616 கோடியில் நிறை வேற்றப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் நிரந்தர குடிநீர் வசதியை பெறுகின்றன.

குறிப்பாக ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை, சிவகங்கை ஆகிய 5 நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, அபிராமம், இளையான்குடி உள்பட 11 பேரூராட்சிகள் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 3 ஆயிரத்து 163 ஊரக குடியிருப்புகளில் உள்ள மொத்தம் 20 லட்சம் பேர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

2 ஆண்டுகள் 5 மாதங்களில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் இந்த பகுதியின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

செய்திக்கு நன்றி: மாலைமலர்

Thursday, June 11, 2009

வீரத்தளபதியின் விவேகம்!


முதல்வன் படத்தில் முதல்வராக நடித்த ரகுவரனை டி.வி., நிருபரான அர்ஜூன் பேட்டி எடுப்பார். அப்போது பல சிக்கலான கேள்விகளை கேட்டதும், நீ ஒருநாள் முதல்வராக இருந்து பார்? என்று கேட்பார் ரகுவரன். இதையடுத்து ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்கும் அர்ஜூன் பொதுமக்கள் தங்களது குறைகளை போன் மூலம் தெரிவிக்கலாம், என்ற அறிவிப்பை வெளியிடுவார். ஒருநாள் முதல்வர் அர்ஜூனிடம் ஏராளமான மக்கள் போனில் குறைகளை தெரிவிப்பார்கள். அ‌தனை பொறுமையுடன் கேட்கும் அர்ஜூன் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மத்தியில் செல்வாக்கான முதல்வராக ஆகி விடுவார்.

முதல்வன் அர்ஜூன் பாணியில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நடிகர் ஜே.கே.ரித்திஷ் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் லோக்கல் டி.வி., சேனல் ஒன்றில் 3 மணிநேரம் லைவ்வாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். ரித்திஷிடம் போனில் பேசிய பொதுமக்கள், இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லை என்பதில் தொடங்கி, மின்சார பிரச்னை, தண்ணீர் பிரச்னை, சாலை வசதி என பல பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். ரித்திஷூம் சளைக்காமல்அனைவருக்கும் பதில் சொன்னதுடன் நிற்காமல், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போனில் பேசினார். ரித்திஷின் இந்த அதிரடி நடவடிக்கை ராமநாதபுரம் தொகுதி மக்களை கவர்ந்தது. இதனை பலரும் போனில் தெரிவித்தார்கள். இதையடுத்து தொடர்ந்து மாதந்தோறும் பொதுமக்களுடன் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

சினிமா துறையில் இருந்து எம்.பி.,யான ஜே.கே.ரித்திஷ், சினிமா பாணியிலேயே மக்களுக்கு தேவையான வசதிகளை அதிரடியாக செய்து கொடுக்கிறார் என்பதுதான் ராமநாதபுரத்தின் ஹாட் டாக்...!

நன்றி : தினமலர்

"பசங்க" - இன்னொரு "அஞ்சலி"

என்னாது "பசங்க" படம் வமர்சனமா அதுவும் இத்தனை நாள் கழித்தா. காந்திய சுட்டுட்டாங்க தெரியுமா அப்படின்னு கேட்காதீங்க. படம் வெளிவந்த உடனேயே அதை முதல் நாள் முதல் ஷோவிலேயே பார்த்துவிடும் அளவுக்கு மனவலிமை எல்லாம் நம்மிடம் கிடையாது. நல்ல படத்துக்காக பொறுமையாக காத்து இருந்து பார்ப்பது தான் நம்ம வழக்கம். அந்த வகையில் பார்த்தது தான் பசங்க. அப்படி ஒரு நல்ல படம் பார்த்துவிட்டால் அதை பற்றி ஒரு நாலு பேரிடமாவது சொல்வதும் ஒரு வழக்கம் அந்த வகையில் தான் இந்த இடுகை

பல வருடங்களுக்கு முன் வந்த அ ஞ்சலி திரைப்படத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட்டிருக்க முடியாது. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். மணிரதனம் என்ற பிரம்மாண்ட இயக்குநர் இயக்க இளையராஜா என்ற மற்றொரு பிரம்மாண்டமும் இணைந்து கொள்ள் அப்புறம் என்ன படம் பெரிய வெற்றி பெற்றது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அஞ்சலி படத்தில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சி பெரிதும் பேசப்பட்டது. இப்போது வந்திருக்கும் பசங்க படத்திலும் கிளைமேக்ஸ் அஞ்சலி படத்துக்கு இணையாகவே இருக்கிறது

அஞ்சலி படத்தில் நடித்தவர்கள் பலரும் சிறுவர்களாக இருந்தாலும் அவர்களின் பேச்சு மற்றும் செயல்கள் முற்றிய பெரிசுகளுக்கு இணையாக காட்டப்பட்டது. அதை குறை சொல்ல முடியாது. அப்போதைய காலகட்டத்தில் அப்படி பாத்திரங்களை அமைத்தால் தான் எடுபடும் என்ற நிலை இருந்தது. உதாரணத்திற்கு சிவாஜி படங்களை இன்று பார்த்தால் சிலருக்கு நாடகததனமாக் தோன்றும் அது போல. பசங்க படத்தில் வரும் சிறுவர்கள் மிகவும் இயல்பாகவே காட்டப்பட்டு இருக்கிறார்கள். பசங்க படத்தில் எந்த பிரம்மாண்டமும் இல்லை என்றாலும் கதை மற்றும் திரைக்கதையை நம்பி எடுத்து இருக்கிறார்கள்

பள்ளிப் பருவத்தில் ஏற்படும் பல நிகழ்வுகளை நம் கண்முன் மீண்டும் வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சிறுவயது பிரச்சினைகள் ஓவ்வொரு தலைமுறைக்கும் சுழற்சியாக் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். படத்தின் பிற்பகுதியில் சில இடங்களில் நாடகத் தன்மை தென்பட்டாலும் அது திரைக்கதையின் ஓட்டத்துக்கு எந்தவித ஊறும் விளைவிக்கவில்லை. ஒரு சில இடங்களில் அரசியல் கலந்த நகைச்சுவையும் தெளித்து இருக்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் செய்து இருக்கலாம்

படத்தில் நல்லவனாக வரும் அன்பரசு பாத்திரத்தை விட வில்லன் பாத்திரமாக வரும் ஜீவா அருமையாக நடித்து இருக்கிறார். இருவருமே சிறுவர்கள் தான் ஆனால் நடிப்பை பார்த்தால் அப்படி தெரியவில்லை. நல்லவனாக நடிப்பது எளிது ஆனால் வில்லனாக நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு வெறுப்பு வர வேண்டும். அதை கச்சிதமாக செய்து இருக்கிறார் ஜீவா என்ற பாத்திரத்தில் நடித்த சிறுவர். மொத்தத்தில் நல்ல தரமான படம் பார்த்த திருப்தி. கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாத படம்

Wednesday, June 10, 2009

விஜய் கட்சியின் சின்னம் என்னவாக இருக்கும்

கல்லூரி படித்து கொண்டு இருந்த காலத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று மதிய நேரம் வழக்கம் போல் மாணவர்கள் எல்லோரும் கட் அடிக்க திட்டம் போட்டனர். வெள்ளிக்கிழமை மதியம் என்றால் சினிமாவுக்கு சென்று ரகளை செய்வது தான் வழக்கம். அன்றும் அதே மாதிரி எல்லோரும் தயாராகி கொண்டு இருக்க என்ன படம் போகலாம் என்ற கேள்வி வந்த போது ஏதோ ஒரு புது பையன் நடிச்சிருக்கான் அவன் படத்துக்கு போகலாம் என்று சிலர் சொன்னார்கள். எதுக்குடா கண்ட கண்டவன் நடிச்ச படத்துக்கெல்லாம் போகனும் நம்ம தியேட்டரில் ஷகீலா படம் போட்டிருக்கான். அங்கே போனா குடுத்த காசுக்கு ஏதாவது பாத்துட்டு வரலாம் என்று குரூப்பில் உள்ள ஒரு அனுபவஸ்தர் சொல்ல அதற்கு முதல் நண்பர் டேய் மச்சான் இதுவும் ஷகீலா படம் மாதிரி தான்டா இருக்கும். அதுல ஒரு சோப்பு போடுற சீன் எல்லாம் இருக்குடா. இதுல என்ன கொடுமைனா இந்த படத்தை இயக்கியது அந்த பையனோட அப்பாவாம் என்று அந்த படத்தின் குவாலிபிகேஷன்களை அவர் அடுக்க ஒருவழியாக எல்லோரும் பிட்டு படம் பார்க்க கிளம்பிவிட்டார்கள். மச்சான் எனக்கு ஏற்கனவே தலை வலிக்கிற மாதிரி இருக்கு என்னை மேலும் டார்ச்சர் பண்ணாதீங்க என்று சொல்லி நான் எஸ்கேப் ஆகிவிட்டேன்

அந்த படத்தில் நடிச்ச புது பையன் இன்று தமிழ் சினிமாவில் பெரிய ஆள். சந்திரமுகி மட்டும் வந்து இவரது சச்சினை காலி பண்ணவில்லை என்றால் இன்று எல்லா ரஜினி மன்றங்களும் விஜய் மன்றங்களாகி இருக்கும். பாபா தோல்விக்கு பின் ரஜினி ரசிகர்களை குறிவைத்து வலைவீசி வந்தார்கள். ரஜினி அரசியலுக்கு அதோ இதோ என்று இன்னும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டு இருக்க. விஜயகாந்த் உள்ளே இறங்கி அதகளப்படுத்த நம்ம விஜய்யும் இப்போதே அஸ்திவாரம் போட்டு வருகிறார். ஜே.கே.ரித்தீஷ் அதிரடியாக அரசியலில் குதித்து எம்.பி. ஆகிவிட்டது வேறு இவரின் அரசியல் பிரவேசத்தை இன்னும் தள்ளி போடக்கூடாது என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. இவருக்கு உண்மையிலேயே அரசியல் ஆசை இருக்கிறதோ இல்லையோ இவரது தந்தைக்கு நிரம்பவே இருக்கிறது. போஸ்டர்களில் எல்லாம் விஜய், எம்.ஜி.ஆர். உடன் அவரது தந்தை தவறாமல் இடம் பெற்றுவிடுகிறார். அதுவும் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கண்ணாடி வேறு அணிந்து கொள்கிறார்

இந்த மாதம் விஜய்யின் பிறந்தநாள் வருகிறதாம் அன்று கண்டிப்பாக விஜய்யின் அரசியல் குறித்து அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உண்ணாவிரத மேடையில் நம் உண்ணாவிரதம் வெற்றி, நமக்கு கிடைத்த பிரியாணி ஆர்டர்கள் இதை சொல்கின்றன என்று பேசி அரசியலை கலகலக்க வைத்தனர். இதே மாதிரி பல கலாட்டாக்கள் நடக்கலாம் என்று எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது

பிரியாணி பொட்டலத்தை தொண்டர் முகத்தில் விசிறி அடித்து விஜயகாந்த் புரட்சி செய்தார், விஜய் தரப்போ உண்ணாவிரத மேடைக்கே பிரியாணியை வரவழைத்து புரட்சி செய்தது. தொடர்ந்து மொக்கைகளாக கொடுத்து வந்த விஜயகாந்துக்கு தொப்புளில் பம்பரம் விட்ட படம் வந்து கைகொடுத்தது. ஆனால் பம்பரம் சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் கிட்டத்தட்ட அதே மாதிரி இருக்கும் சின்னம் அவருக்கு கிடைத்தது. அதே மாதிரி விஜய்க்கும் சோப்பு படம் ஓரளவுக்கு கைகொடுத்தது. அவருக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்

Tuesday, June 09, 2009

கலைஞர் லேப்டாப் (சிறந்த மாணவர்களுக்கு)

தோழர்களே! நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நாட்டில் ரத்த ஆறு ஓட வேண்டுமா அல்லது கலைஞர் தலைமையில் நல்லாட்சி தொடர வேண்டுமா என்று


கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு தங்கள் படிப்புக்கு உதவியாக லேப்டாப் வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்து உள்ளார். இதன் படி பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ்வழி பயின்று சிறந்த 1000 மாணவர்களுக்கும் மற்றும் சிறந்த 1100 மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்து அதன்படி பல மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளன

கலைஞரை எதற்கெடுத்தாலும் குறை சொல்பவர்கள் இந்த லேப்டாப் திட்டத்துக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்காக வேண்டுமானல் ஒரு ஆலோசனை வழங்கலாம்.

பிரசாந்த் நடித்த ஒரு படத்தில் விவெக் வையாபுரிக்கு கம்ப்யூட்டர் கற்று கொடுப்பார். இவ்வளவு தான்டா கம்ப்யூட்டர், ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள் என்பார். அதற்கு வையாபுரி இதில் சன் டிவி வருமா என்று கேட்டு விவேக்கை அதிரச் செய்வார். அதே மாதிரி கலைஞரை விமர்சிக்கும் அதிமேதாவிகள் கலைஞர் லேப்டாப்பில் ஜெயா தொலைக்காட்சி வரவில்லை, மக்கள் தொலைக்காட்சி வரவில்லை என்று பதிவுகள் எழுதினால் கொஞ்சம் நாட்கள் இவர்கள் செய்யும் காமெடியை வைத்து ஜாலியாக பொழுது போகும்

கலைஞர் லேப்டாப்


Monday, June 08, 2009

இந்தியாவில் படித்து டாக்டர் ஆன ஒரு இலங்கை அகதி

பல பதிவர்களுக்கு யாரையாவது தாக்கி எழுதுவதே பழக்கமாகிவிட்டது போல் தெரிகிறது. சொந்த சரக்கு இல்லாதவன் தான் இப்படி பிறரை தாக்கி பிழைப்பு நடத்தும் கேவலமான வேலையை செய்வான். முதலில் முதல்வர் கலைஞர் அவர்களை தாக்கி எழுதினார்கள், பின்னர் சோனியா காந்தியை மிக கேவலமாக எழுதினார்கள் தற்போது இந்தியா என்ற நாட்டை தாக்கி எழுதிவருகிறார்கள்

இந்தியா தரப்பில் எந்த தவறுமே இல்லை என்று சொல்ல வரவில்லை. இங்கே உள்நாட்டிலேயே தமிழன் பல பிரச்சினைகளுக்கு இடையே தான் வாழ்ந்து வருகிறான். முல்லைப் பெரியாறு, காவிரின், தமிழக மீனவர்கள் என்று இங்கேயே தமிழனுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். தமிழன் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததே காரணம். இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்ட போது வட மாநிலங்களில் சீக்கியர்களை குறி வைத்து தாக்கினார்கள். ஆனால் ராஜீவ்காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழர்ளை வெளி மாநிலத்தவர் எவரும் தாக்கவில்லை. நம் சக தமிழனே புலிகளுக்கு நீ தானே ஆதரவளித்தாய் என்று உடன்பிறப்புகளை தாக்கினார்கள்

நாம் சொல்ல வருவது என்னவென்றால் எப்போதும் யாரையாவது வசைபாடியே எல்லோரையும் எதிரியாக பார்க்காதீர்கள். புலிகளுக்கு ஆதரவாக எழுதிய சில பதிவர்களையும் கூட நீங்கள் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் எழுதுகிறீர்கள் நாய்கள், பேய்கள் என்று திட்டுகிறார்கள். இப்போதும் உங்களுக்கு எந்த உதவியும் இல்லை என்றாலும் அவர்கள் ஏதோ கொஞ்சம் ஆறுதல் வார்த்தைகளாவது எழுதுகிறார்கள்

குறிப்பாக உங்களுக்கு ஆதரவாக இயங்குவதாக காட்டிக் கொள்வதற்காக உணர்ச்சிவசப்பட்டு எழுதுவர்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள். இதற்கு நல்ல உதாரனம் வைகோ தான். நன்றாக உணர்ச்சிவசப்பட்டு பேசுவார் ஆனால் அவரால் ஏதாவது பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இருக்கிறதா. அது மாதிரி தான் வலையில் இயங்கும் சில குள்ள நரி பதிவர்களும்

சரி இப்போது தலைப்புக்கு வருவோம். தமிழ்நாட்டு தமிழன் எப்படி பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறானோ அது மாதிரி இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து முகாமகளி இருப்பவர்களும் சிலர் வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார்கள். இவர்கள் நெடுங்காலமாகவே எம்முடன் வாழ்ந்து வருபவர்கள். இவர்களை நாங்கள் பிரித்து பார்த்ததில்லை. எம்மை போலவே பிரச்சினைகளை சமாளித்து வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். பிறரை பழித்து பேசி நாய் பிழைப்பு நடத்துபவர்கள் இல்லை. இது குறித்து மேலான தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை சொடுக்கவும்

ஒரு இலங்கை அகதி...

Saturday, June 06, 2009

பாமகவிலிருந்து புதுச்சேரி ராமதாஸ் திடீர் விலகல்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் பாமக எம்.பி பேராசிரியர் ராமதாஸ் திடீரென பாமகவிலிருந்தும், அரசியலை விட்டும் விலகி விட்டார். மீண்டும் பேராசிரியர் பணிக்கு அவர் திரும்பி விட்டார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் பேராசிரியர் ராமதாஸ். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அழைப்பை ஏற்று பாமகவில் இணைந்து செயல்பட்டார்.

பாமகவின் முக்கிய கொள்கைகள் வகுத்தலில் பங்காற்றியவர் ராமதாஸ். பாமகவின் பிரபலமான மாதிரி பட்ஜெட்டுக்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

கடந்த லோக்சபாவில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாக செயல்பட்டு வந்தார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியிடம் தோல்வியுற்றார்.

இந்த நிலையில் திடீரென பாமகவை விட்டும், அரசியலை விட்டும் விலகி விட்டார் ராமதாஸ்.

இதுகுறித்து பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ் (இவர் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் திண்டிவனம் எம்.பி.) கூறுகையில்,

பேராசிரியர் ராமதாஸ் குடும்ப சூழல் மற்றும் உடல்நிலை காரணமாக பா.ம.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி உள்ளார். தனது விலகல் கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளார். இனி அவர் அரசியலில் ஈடுபடமாட்டார்.

எம்.பி.யாக இருந்தபோது அவர் சிறப்பான முறையில் பணிகளை செய்தார். பல்கலை கழகத்திற்கு அவரது பணி தேவைப்படுவதால் அவர் மீண்டும் அந்த பணிக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்

செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்

கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்



செய்திக்கு இங்கே சுட்டவும்

Friday, June 05, 2009

நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்-நிதிக் கமிஷன்

சென்னை: இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் மாநிலம் தமிழகம் தான் என்று மத்திய நிதி கமிஷன் தலைவர் விஜய் கேல்கர் கூறியுள்ளார்.

மத்திய வரி வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் விஜய் கேல்கர் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக விளங்குகிறது.

2007-08ம் ஆண்டில், தேசிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபரின் பங்களிப்பு ரூ.27,502 ஆக இருந்தது. ஆனால் தமிழகத்தில் இது ரூ.32,080 ஆக இருந்தது. இது மிகச் சிறப்பான சாதனையாகும்.

தமிழகத்தில் மனிதவள மேம்பாட்டு குறியீடுகள் சிறப்பாக உள்ளன. கல்வியறிவும் அதிகமாக உள்ளது. குழந்தை இறப்பு வீதமும் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் மிகக் குறைவாக உள்ளது.

ஏழை மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் சிறப்பாக உள்ளன.

தமிழகத்தில் 2007-08ம் ஆண்டு வரி அல்லாத வருவாய் ரூ.3,304 கோடியாக இருந்தது. இது 2008-09ம் நிதியாண்டில் ரூ.5,645 கோடியாக அதிகரித்துள்ளது. இது, அரசு நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை விடுவது என்ற தைரியமான முடிவால் கிடைத்த லாபமாகும். இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றுமாறு பரிந்துரைப்போம்.

சாலை, மேம்பாலம், குடிநீர் வினியோகம் மற்றும் சுகாதாரத் திட்டங்களிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. தமிழகத்தில் மின்வாரிய செயல்பாடும் சிறப்பாக உள்ளது. அதில் உள்ள சில பிரச்சினைகளை தீர்ந்து விட்டால், மின்துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.

நகர்ப்பகுதி குடியேற்றம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமாக உள்ளது. 2001ல் 44 சதவீதமாக இருந்த நகர்ப்புற குடியேற்றம் 2010ல் 54 சதவீதமாக அதிகரிக்கும்.

அதே போல தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இந்த மாநிலத்தில் மிகச் சிறப்பாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத் திட்டத்தின்கீழ், நாட்டின் 22 சிறந்த மாவட்டங்களில் தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு்ள்ளன.

தமிழ்நாடு எப்போதுமே மற்ற மாநிலங்கள் பின்பற்றத்தக்க வகையில், முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவது கவனிக்கத்த்ககது.

மத்திய வரி வருவாயில் இருந்து ரூ.25,000 கோடி நிதியை வழங்க வேண்டும் என்றும் தமிழகம் கோரியுள்ளது. அதை கவனமாக பரிசீலிப்போம்.

இந்த சிறப்பான வெற்றிகளை ஈட்டியுள் தமிழக அரசுக்கு பாராட்டுகள் என்றார்

செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்

தமிழினத் தலைவர் வாழ்க!

மத்திய வரி வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் விஜய் கேல்கர் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக விளங்குகிறது.

2007-08ம் ஆண்டில், தேசிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபரின் பங்களிப்பு ரூ.27,502 ஆக இருந்தது. ஆனால் தமிழகத்தில் இது ரூ.32,080 ஆக இருந்தது. இது மிகச் சிறப்பான சாதனையாகும்.

தமிழகத்தில் மனிதவள மேம்பாட்டு குறியீடுகள் சிறப்பாக உள்ளன. கல்வியறிவும் அதிகமாக உள்ளது. குழந்தை இறப்பு வீதமும் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் மிகக் குறைவாக உள்ளது.

ஏழை மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் சிறப்பாக உள்ளன.

தமிழகத்தில் 2007-08ம் ஆண்டு வரி அல்லாத வருவாய் ரூ.3,304 கோடியாக இருந்தது. இது 2008-09ம் நிதியாண்டில் ரூ.5,645 கோடியாக அதிகரித்துள்ளது. இது, அரசு நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை விடுவது என்ற தைரியமான முடிவால் கிடைத்த லாபமாகும். இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றுமாறு பரிந்துரைப்போம்.

சாலை, மேம்பாலம், குடிநீர் வினியோகம் மற்றும் சுகாதாரத் திட்டங்களிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. தமிழகத்தில் மின்வாரிய செயல்பாடும் சிறப்பாக உள்ளது. அதில் உள்ள சில பிரச்சினைகளை தீர்ந்து விட்டால், மின்துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.

நகர்ப்பகுதி குடியேற்றம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமாக உள்ளது. 2001ல் 44 சதவீதமாக இருந்த நகர்ப்புற குடியேற்றம் 2010ல் 54 சதவீதமாக அதிகரிக்கும்.

அதே போல தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இந்த மாநிலத்தில் மிகச் சிறப்பாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத் திட்டத்தின்கீழ், நாட்டின் 22 சிறந்த மாவட்டங்களில் தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு்ள்ளன.

தமிழ்நாடு எப்போதுமே மற்ற மாநிலங்கள் பின்பற்றத்தக்க வகையில், முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவது கவனிக்கத்த்ககது.

மத்திய வரி வருவாயில் இருந்து ரூ.25,000 கோடி நிதியை வழங்க வேண்டும் என்றும் தமிழகம் கோரியுள்ளது. அதை கவனமாக பரிசீலிப்போம்.

இந்த சிறப்பான வெற்றிகளை ஈட்டியுள் தமிழக அரசுக்கு பாராட்டுகள் என்றார்.

(நன்றி : தட்ஸ்தமிழ்)

Wednesday, June 03, 2009

கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்







சட்டமன்றத்தில் கலைஞர்!

குளித்தலை தொகுதி வேட்பாளராக 1957-ல் ஜெயித்து தமிழக சட்டசபையில் நுழைந்த கலைஞர் கருணாநிதிக்கு இந்த ஆண்டு சட்டசபையில் அவரது பொன்விழா ஆண்டு. இந்த 50 ஆண்டுகளில், சட்டசபையில் கருணாநிதி உதிர்த்த நகைச்சுவை முத்துக்கள் பலப் பல. அவற்றில் சில முத்துக்கள் மலரும் நினைவுகளாக இங்கே..!

பீர் முகம்மது: "விவசாயக் கூலிகளுக்குக் கருத்தடை ஆபரேஷன்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. அரசு இதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்!"

கருணாநிதி: "கருத்தடை செய்துகொள்ள வேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மது கூட அவரது தந்தைக்கு 33&வது பிள்ளை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்." (8.3.68)

**

கே.விநாயகம்: "மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?"

கருணாநிதி: "இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்." (14.3.69)

**

ஜேம்ஸ்: "மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு, 'ஒன் சைடெட் லவ்' போலத் தான் இருக்கிறது."

கருணாநிதி: "ஒன் சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை!" (26.2.70)

**

அப்துல் லத்தீப்: "கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவது பற்றி ஆலோசிக்குமா?"

கருணாநிதி: "ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 'முதலை' கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது." (8.12.71)

**

கோவை செழியன்: "ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசியமயமாக்கிவிட்டால் பிரச்னை இருக்காது அல்லவா?"

கருணாநிதி: "ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்!" (18.12.71)

**

காமாட்சி: "மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை... இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?"

கருணாநிதி: "மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன் னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே!" (14.3.73)

**

கருணாநிதி: "நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ் காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்."

அனந்தநாயகி: "அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன்றைக்கு இங்கே வந்து உட்கார்ந் திருக்கிறீர்கள்!"

கருணாநிதி: "அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம்." (23.3.73)

**




சோனையா: "தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக் கிறது... தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்."

கருணாநிதி: "பல பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களைக் கூறி, உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்ட நான் விரும்ப வில்லை." (27.3.73)

**

பி.ஹெச்.பாண்டியன்: "புலி பசித் தாலும் புல்லைத் தின்னாது!"

கருணாநிதி: "புல் என்பது புல்லா, bullலா?" (16.2.1989)

**

பி.ஹெச்.பாண்டியன்: "ஹை கோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே வாங்கி விட்டால், வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல் கிறார்?"

கருணாநிதி: " 'காலி'கள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான்!" (7.4.89)

**

ஆர்.சிங்காரம்: "இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா? புதிய வித்வான் களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான் கள்!"

கருணாநிதி: "நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா?" (4.5.89)

**

நூர்முகம்மது: "கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல் வருடைய கருணை கொண்ட கடைக்கண் பார்வை குமரியின் மீது திருப்பப்பட்டு, அம் மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற் சாலையை அமைக்க, முதல்வர் முன் வருவாரா?"

கருணாநிதி: "குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது!" (6.5.89)

**

பி.வி.ராஜேந்திரன்: "உப்பு உற்பத்தி மரணப் படுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து, அது சவப்பெட்டிக்குள் சென்று கொண்டு இருப்பதை உணர்கிறீர்களா?"

கருணாநிதி: "தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப்பெட்டிக்குள் போய்விட்டதா என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க, அதற்கும் உப்புதான் தேவை!" (20.1.90)

**

ரகுமான்கான்: "இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம் கூட ஜாமீனில்தான் இருக்கிறார்கள்!"

கருணாநிதி: "தவறான தகவல்! என்னையும் பேராசிரியரையும் அந்த வழக்கில் விடுதலை செய்துவிட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக்கிறார்." (9.4.90)

**

வி.பி.துரைசாமி: "ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?"

கருணாநிதி: "அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்!" (24.4.90)

**

குமரி அனந்தன்: "நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு ஐயப் பாடு..."

கருணாநிதி: "குமரி அனந்தனுக்கு அப்படியரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சித்துப் பாருங்கள்." (7.5.90)

**
தொகுப்பு : எம். பரக்கத் அலி
நன்றி : ஜூனியர் விகடன்

ஆயிரம் பிறைகண்ட அகன்ற வானமே!


ஆயிரம் பிறைகண்ட அகன்ற வானமே!
காது கொடுத்துக் கேள் தம்பி என்றன்
கருணாநிதி எனும் அரிய கழகத்தம்பி!
ஏதுமறியாத்தமிழர் தூய வாழ்வை
எனக்குப்பின் சீர்படுத்தும் மறவன் நீதான்
என்று அறிஞர் அண்ணா எழுதிவைத்த உயிலைச்
சட்ட வடிவமாக்கிய தானைத் தலைவா!

சாதனையால் களம் அமைத்து
சரித்திரத்தை வடிவமைத்து
எழுத்தால் அணிவகுத்து
உடன்பிறப்புக்களை
இதயத்தால் ஒருங்கிணைத்து,
ஏக்கப்பாட்டுகளை எதிரிகள் பாடிட
வாக்குச்சீட்டுகளால் வாகை சூடியவர்
தலைவர் கலைஞர்!

உங்கள் எழுதுகோல்
உங்களின் விமர்சகர்களுக்குப்
பூஜ்யம் தந்தது
உன் நிழலை நம்பியவர்களுக்கு
ராஜ்ஜியம் தந்தது!

சூறாவளிப் பிரச்சாரப் புயல்களை எல்லாம்
தன் ஒற்றைப் பெருமூச்சால் காணாமல்
போகச் செய்த ஐந்தமிழே!
பாய்ந்து வந்த விமர்சனக் கணைகளை எல்லாம்
வெற்றிமாலையாக்கித் தோளில் சூடிய சூரியச் சுடரொளியே!

சாதாரணக் கண்களுக்குத்தான்
அது சக்கரம் வைத்த நாற்காலி,
சரித்திரத்திற்குத் தெரியும் அது,
அசோகச் சக்கரத்தின் உயிர்நாடி என்று!

மருத்துவர்களின் ஊசிகளைக் காட்டிலும்
மாற்றணிக்காரர்களின் வார்த்தைகள் தாம் அதிகம்
தைத்தன அதிகமாய் உன் தளர்மேனியை!
அதனால்-வெற்றியை மருந்தாக்கி, வேதனையைத்
தணித்தார், தமிழகத்தின் துணை முதல்வர்

ஓய்வென்ற சொல்லையே
உச்சரித்தறியாத தானைத் தலைவரே!
“வியூகத்திற்குள் மாட்டிக் கொண்ட
அபிமன்யு” எனக் கழகத்தைச்
சொல்லின் கணிப்புகள்
எண்ணிக்கை விளையாட்டில்
இறுதியிடம் என்று எழுதித் தீர்த்தன பேனா முனைகள்!

கணிப்பாளர்களின் கண்களுக்குத் தொகுதி
மட்டுந்தான் தெரிந்தது, தமிழனத் தலைவா!
உன் கண்களுக்குத் தான்
தமிழனின் இதயப்பகுதி புரிந்தது!
மாற்று அணியினர் அறிவார்களா? நீங்கள்
மக்களின் மனத்தைப் படிப்பதில்
பல்கலைக் கழகம் என்பதை!

தேர்தலுக்காக நடிக்கும் மனிதர்களிடையே
தீர்வுகளுக்காகத் துடிக்கும் உன்னதத் தலைவரே!
எதிராளியின் இருட்டு முகாம்களிலும்
கண்ணிய விளக்கேற்றி வைக்கும்
கன்னித் தமிழே!

இயக்கத்தில் கோளாறை வைத்துக் கொண்டு
இயந்திரக் கோளாறு பற்றிப் பேசும்
மனிதர்களுக்கும் நீ மன்னிப்பை வழங்குகிறாய்...
ஏழைகளின் வயிற்றில் தீயாய் நின்ற பசியை
அமுதசுரபியால் அணைத்த
நம்பிக்கை நட்சத்திரமே!

மனிதகுல வரலாற்றின்
மகத்தான் முன்னுரையே!
இந்தியாவின் இதயத்தில்
எழுந்துநிற்கும் வியப்புக்குறியே!
பல்லாண்டுப்பல்லாண்டுப் பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் நீங்கள் வாழவேண்டும்!
உங்கள் அரவணைப்பில் நாடு வாழவேண்டும்!

- மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்

Tuesday, June 02, 2009

தமிழ்மணம் மாற்றத்துக்கு லக்கிலுக் காரணமா?

இந்த இடுகை லக்கிலுக் புகழ்பாடுவதாக யாராவது அசெளகரியப்பட்டால் தயவுசெய்து முதலில் இந்த இடுகையை வாசித்துவிட்டு வரவும்
தமிழ்மண மகுடம் - ஜனநாயகத்துக்கு எதிரான மண்குடம்!

இன்று தமிழ்மணம் பல மாற்றங்களை அடைந்து நிஜமாகவே மணம் வீசுவதாக சிலர் மெய்சிலிர்க்கிறார்கள். இன்று தமிழ்மணம் செய்து இருக்கும் மாற்றங்களை ஆறு மாதங்களுக்கு முன்பாகவே லக்கிலுக் தன் இடுகையில் ஆலோசனைகளாக வழங்கி இருக்கிறார். தமிழ்மணம் மகுடம் பகுதியில் இடம் பெற உதவும் வாக்கெடுப்பு முறை மற்றும் சூடான இடுகைகள் குறித்த அவருடைய கருத்துக்களை வரிக்கு வரி அப்படியே பின்பற்றி இன்று புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது தமிழ்மணம்

தலைப்பை மட்டும் ஏடாகூடமாக வைத்து கொண்டு உள்ளே வாந்தி எடுக்கும் இடுகைகளை எழுதுபவர்களுக்கும், உள்ளே மேட்டரே இல்லாமல் தலைப்பில் சூ என்ற ஒற்றை எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளை வைத்து காலம் தள்ளியவர்களுக்கும் ஆப்பு பலமாக வைக்கப்படுள்ளது. அதுவும் நேற்று சோனியா காந்தி அவர்களை பற்றிய இடுகை அருவருப்பின் உச்சகட்டம். தமிழ்மணத்தின் இந்த மாற்றமாவது அவர்களை திருத்துமா என்று காலம் தான் சொல்ல வேண்டும்



இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தை வைத்து தினமணி பத்திரிக்கை வக்கிரமான கமெண்டுகளை வெளியிட்டதாக நண்பட் ஒருவர் கவலை தெரிவித்து இருந்தார். செயேந்திரர் குறித்து கூட ஏடாகூடமான செய்திகள் வந்தன அப்போது தினமணி இதே மாதிரி வக்கிரமான கமெண்டுகளை வெளியிட்டு இருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்

Monday, June 01, 2009

அஞ்சாநெஞ்சனை மறக்கமாட்டோம்!


சென்னை, வண்ணாரப்பேட்டை பெஸ்ட் பிரண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் கோடை விடுமுறை நாட்களில் இந்தியா முழுவதும் டூர் செல்வது வழக்கம். அதே போல 25 வது முறையாக இந்த ஆண்டும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

140 பேர் 3 பிரிவுகளாக ரயிலில் டிக்கெட் எடுத்தனர். 20-ந் தேதி டெல்லி சென்றனர். 23-ந் தேதி ஆக்ராவை சுற்றி பார்த்தனர். 24-ந் தேதி அரித்துவார் சென்றனர். 25-ந் தேதி காஷ்மீர் சென்று அங்கு 4 நாட்கள் தங்கி மலை பிரதேசங்களை கண்டுகளித்தனர்.

காஷ்மீரில் அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு 29-ந் தேதி காஷ்மீரில் இருந்து 12.25 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து 6.45 மணிக்கு புறப்படும் ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை வருவதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் விமானம் 12.25 மணிக்கு புறப்படாமல் மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்குத்தான் டெல்லி வந்தடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ரயிலைப் பிடிக்க முடியாமல் போனது.

ஆவேசமும், ஆத்திரமும் அடைந்த பயணிகள் விமானத்தை விட்டு இறங்காமல் போராட்டம் செய்தனர். உடனே விமான அதிகாரிகள் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இதனை நம்பிய பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறங்கி உள்ளனர். ஆனால் அதிகாரிகள் எதுவும் செய்யாமல் அப்படியே நழுவி விட்டனர். இதனால் பயணிகள் விமான நிலையத்தில் இருக்க இடம் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமலும், முதியவர்களும், குழந்தைகளும் தவித்துள்ளனர். உடனே சுற்றுலா பயணிகள் தமிழ் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் விரைந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி டெல்லி வரும் தகவல் அவர்களுக்குக் கிடைத்தது.

இதையடுத்து அழகிரியைப் பார்த்து சொன்னால் விமோச்சனம் கிடைக்கும் என்று நம்பி அவரது வருகைக்காக காத்திருந்தனர். இரவு 11.45 மணிக்கு மு.க. அழகிரி டெல்லி வந்தார்.

மத்திய அமைச்சரான பின்னர் அவர் டெல்லி வந்தது அதுதான் முதல் முறை. அவரைப் பார்த்த சென்னை பயணிகள், கண்ணீருடன் நடந்த விபரத்தை கூறி உள்ளனர்.

அவர்களை அமைதிப்படுத்தி ஆறுதல் கூறினார் அழகிரி. பின்னர் அவர்களில் ஒருவரின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார். இங்கேயே இருங்கள் பத்து நிமிடத்தில் நானே போன் செய்கிறேன் என்று கூறி விட்டு கிளம்பினார்.

சொன்னது போலவே பத்து நிமிடத்தில் போன் செய்த அழகிரி, 2 பஸ்களை அனுப்பியுள்ளேன். அதில் ஏறி தமிழ்நாடு இல்லம் வந்து சேருங்கள் என்று தெரிவித்தார்.

மலர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்களில் ஏறி தமிழ்நாடு இல்லம் சென்றனர். அங்கு மு.க.அழகிரி அவர்களை வரவேற்று எம்.பி.க்கள் தங்கும் 13 அறைகளை ஒதுக்கி அங்கு போய் தங்குங்கள் என்று பயணிகளை கேட்டுக் கொண்டார்.

அத்தோடு நில்லாமல், அதிகாலை 3.45 மணிக்கு அட்டகாசமான சாப்பாடு, காபி போன்றவற்றை வழங்கினார். பின்னர் அரசு அதிகாரி ஒருவரை அங்கேயே தங்கி, சென்னை பயணிகளுக்குத் தேவையானதை செய்யுமாறு உத்தரவிட்டார்.

பிறகு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு, சென்னை பயணிகளின் நிலையைக் கூறி, அவர்களுக்காக தனிப் பெட்டி ஒன்றை தமிழ்நாடு செல்லும் ரயில் ஒன்றில் இணைத்து அனுப்ப உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மம்தாவும் அதை ஏற்று அன்று தமிழ்நாடு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிப் பெட்டியை இணைக்க ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை பயணிகள் அந்த தனிப் பெட்டியில் ஏறி சென்னை வந்து சேர்ந்தனர்.

புறப்படும் முன்பு மு.க.அழகிரியை தமிழக பயணிகள் சந்தித்து கண்ணீர் மல்க பூங்கொத்து, பொன்னாடை வழங்கி நன்றி தெரிவித்தனர். நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் எங்கள் கதி என்ன ஆயிருக்கும் என்றே தெரியவில்லை இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என்று கூறிவிட்டு விடை பெற்றனர்.

இன்று காலை 7.45 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்து சேர்ந்தது. பயணிகளை உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.

சுற்றுலா பயணிகளில் ஒருவரான கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் கூறுகையில், நாங்கள் குழந்தைகளுடன் டெல்லி விமான நிலையத்தில் தவித்துக்கொண்டிருந்தோம். அப்போது கடவுள் போல மு.க. அழகிரி வந்தார். நாங்கள் அவரிடம் எங்கள் நிலை மையை கூறினோம்.

உடனே அவர் எங்களிடம் முதலில் நீங்கள் சாப்பிட்டீர்களா மிகவும் அன்போடு விசாரித்து, கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று கூறி 2 பஸ் மூலம் எம்.பி.க்கள் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று 13 அறைகளை ஒதுக்கி தங்க வைத்து, சாப்பாடு, காப்பி என அனைத்து வசதிகளையும் செய்து தந்தார். மு.க.அழகிரியின் மனிதாபிமானத்தை எங்கள் வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் என்றார்.

அனிதா என்பவர் கூறுகையில், நாங்கள் பாஷை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். சாப்பாடும், தண்ணீரும் இல்லாமல் குழந்தைகள் தவித்துக் கொண்டிருந்தன. அப்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வருவதாக கூறினர்.

நாங்கள் அவர் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்தோம். இரவு 11.45 மணிக்கு வந்தார். உடனே அவரை சந்தித்து எங்கள் நிலைமையை எடுத்து கூறினோம். அவர் உடனே எங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து எங்களை பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் மு.க. அழகிரிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

இன்று காலை 7.50 மணிக்கு எங்களை தொடர்பு கொண்டு பத்திரமாக ஊர் போய் சேர்ந்தீர்களா என்றும் விசாரித்தார் என்றார்.

(நன்றி : தட்ஸ்தமிழ்)