Friday, May 29, 2009

தோல்வியால் சோர்ந்துவிடாதீர்கள் எதிரிகளே

நேற்று திருமண விழா ஒன்றில் பேசிய கலைஞர் அவர்கள் ஆரியர் - திராவிட போராட்டம் பற்றி பேசிவிட்டாராம் உடனே பொங்கி எழுந்துவிட்டார்கள் வலையுலக நடுநிலைவாதிகள். நடுநிலைவாதிகள் என்றால் கலைஞரை மட்டும் விமர்சிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது போலும். கலைஞரின் பேச்சில் குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பார்கள் என்பதற்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் தேவை இல்லை.

கலைஞரின் பேச்சில் முதல் வரியிலேயே அவர் சொன்னது தோல்வியால் துவண்டுவிடாதீர்கள் எதிரிகளே எங்களை தொடர்ந்து விமர்சித்து கொண்டே இருங்கள் என்று சொன்னார். அப்படி சொன்னதோடு நிற்காமல் எதிரிகளுக்கு தேவையான பாயிண்டுகளையும் அவரே எடுத்து கொடுத்து இருக்கிறார். அது தான் ஆரியர் - திராவிட போராட்டம். கலைஞர் சொன்னது போலவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள் எதிரிகள். கலைஞரை பின்பற்றுவதில் உடன்பிறப்புகளையும் மிஞ்சிவிட்டார்கள்

யார் ஒருவர் தன் தாளங்களுக்கு ஏற்ப மற்றவர்களை ஆட்டுவிக்கிறாரோ அவரே உண்மையாண தலைவர். அந்த வகையில் எதிரிகளின் நாடித் துடிப்பை மிக துல்லியமாக அறிந்து வைத்து இருக்கிறார் கலைஞர். சோர்ந்துவிடாதீர்கள் எதிரிகளே

Wednesday, May 27, 2009

இதுவும் டைம்ஸில் வந்த கார்ட்டூன் தான்





சிலர் கலைஞர் மீது சேறு பூசுவதை தங்கள் முழு நேர தொழிலாக கொண்டு இயங்குகிறார்கள். அவர்கள் பூசுவதற்கு கைகளில் சேறு எடுக்கும் போது முதலில் அசுத்தமாவது அவர்கள் கைகள் தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்

Tuesday, May 26, 2009

சின்ன ஐயாவும் - பிரபல பதிவரும்



நம்முடைய கருத்துக்களும் வாதங்களும் எவ்வளவு தான் நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருந்தாலும் தேவையற்ற பொருத்தமற்ற வார்த்தைகளால் வலுவிழந்து வீரியமிழந்து விழலுக்கிறைத்த நீராகிவிடும் என்ற ஆதங்கத்தில் எழுதியது தான் இந்த இடுகை

எதிரணி தலைவர்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள் ஆனால் சின்ன ஐயாவை மட்டும் கண்டுகொள்ளாமல் சைலண்டாக இருக்கிறீர்கள் என்று கேட்ட தோழருக்காக சின்ன ஐயா ஸ்பெஷல். சின்ன ஐயா மீது எனக்கு ஓரளவு மதிப்பு இருந்தது உண்மைதான். டாக்டர் ஐயா தன் கொள்கைப்படி இந்த தேர்தலுக்கும் கூட்டணி தாவ முடிவு செய்த போது நம்ம சின்ன ஐயா நல்லா தான போயிட்டிருக்கு, இங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்று டாக்டரிடம் சொன்னதாக கேள்வி. ஆனால் டாக்டர் ஐயா தன் கொள்கையில் உறுதியாக இருக்கவே கூட்டணியும் மாறியாச்சு

கூட்டணி மாறியதால் கழகத்துக்கு எதிராக பேச வேண்டுமே. அப்போது தான் பிரச்சார கூட்டம் ஒன்றில் சின்ன ஐயா தனது புகழ் பெற்ற மாமா பேச்சை பேசினார். சின்ன ஐயா அவர்களே நீங்கள் சொன்னவர்கள் எல்லோரும் ராஜ்யசபைக்கு போவதற்கு பிற கட்சிகளின் தயவை நம்பி இருக்கவில்லை ஆனால் நம்முடைய நிலைமையை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். சேலையோ வேட்டியோ துவைக்கவில்லை என்றால் (நன்றி: விஜயகாந்த்) கொல்லை புறம் அல்ல டில்லியின் எல்லைப்புறத்துக்கே போக முடியாது

சின்ன ஐயா யாரோ எழுதி கொடுத்து தான் பேசினார் என்பது தெளிவாக தெரிகிறது அவர் பிரயோகப்படுத்திய வார்த்தைகளை வைத்து பார்க்கும் போது சின்ன ஐயாவுக்கு எழுதி் கொடுத்தது ஒரு பதிவராக இருக்க வேண்டும் அதுவும் நிச்சயம் ஒரு பிரபல பதிவராக இருக்க வேண்டும் என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை

Monday, May 25, 2009

பா.ம.க. அணிவகுப்பு




வெள்ளைக்கார துரை மாதிரி சதா கோட்டு சூட்டு சகிதமாக காட்சி தரும் சின்ன ஐயா அம்மா முன்னிலையில் மட்டும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைக்கு மாறி பச்சை தமிழனாக ஆகிவிடுவார்

Sunday, May 24, 2009

விஜயகாந்த் கெட்டப்புகளில் மிகவும் ரசித்தது


இதே கெட்டப்பை கண்டினியூ செய்தால் தயாரிப்பாளர்களுக்கு விக் செலவாவது மிச்சம் ஆகும்

Saturday, May 23, 2009

இத்தாலிய ராணி இந்திய ராணி ஆன கதை


வர வர பதிவர்களின் காமெடி டைம் எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறது. நேற்று வரை திருமதி.சோனியா காந்தி அவர்களை எப்படி எல்லாம் வசை மாறி பொழிந்தார்கள் இத்தாலிய ராணி என்று சொல்லி வந்தார்கள். இன்று ஒரே நாளில் இத்தாலிய ராணி அவர்களுக்கு எல்லாம் இந்திய ராணி ஆகிவிட்டார். அதற்கு காரணம் மந்திரி சபை தொடர்பாக தொடர்ந்து வரும் இழுபறி தான்

இதே காங்கிரஸ் அரசு தானே தமிழர்களை கொல்ல துணை போவதாக நேற்று வரை சொல்லி வந்தார்கள் இன்று அதே காங்கிரசுக்கு இவர்கள் துதி பாடுகிறார்களே. இப்போதாவது புரிகிறதா இவர்களுக்கு இருப்பதெல்லாம் தமிழன் மீது உள்ள பற்றா அல்லது தி.மு.க. மீது உள்ள வெறுப்பா என்று. தமிழ்நண்டு கதையில் வரும் நண்டுகள் யாரென்று தெரிகிறதா இப்போது

வெறும் ஜாதி கட்சி நடத்துபவர்களே 7 + 1 என்று கறாராக பேசி காரியத்தை கச்சிதமாக முடிக்கிறார்கள். எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி வெற்றி பெற்று கொடுத்துவர்கள் என்பதால் இழுபறி இருக்கதானே செய்யும். மன்மோகன் சிங் அவர்களே தி.மு.க. அமைச்சர்கள் திரும்பி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்

தமிழ்நண்டு பதிவர்கள் இத்தனை நாள் திருமதி.சோனியா காந்தி அவர்களை அர்ச்சனை செய்து வந்தார்கள் இனிமேல் தினம் தினம் காவடி தான்

Friday, May 22, 2009

3 கேபினட் - கலைஞர் கொடி பறக்குதடா




தி.மு.கழகம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கூட்டணி அமைத்தார்கள், வசைமாறி பொழிந்தார்கள் ஆனால் எல்லா தடைகளையும் தாண்டி, கணிப்புகளையும் மீறி கழகம் பெரு வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த பின்னரும் சும்மா இருந்தார்களா எப்படியாவது மத்திய அரசில் தி.மு.க.வின் செல்வாக்கு கூடிவிடாமல் போவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தார்கள். அப்படி செய்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றும் தெரியவில்லை. ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த காலத்தில் அவர்கள் எத்தனை முறை அவையில் பேசி இருப்பார்கள். இத்தகையவர்கள் தான் தமிழ்நாட்டு நலனுக்காக(?) இப்போது ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களாக பேசி வருகிறார்கள்

கோடை காலத்தில் சூரியனின் உக்கிரம் அதிகமாக தான் இருக்கும் அதற்கு நிறைய தண்ணீர் நிறைய குடிக்கலாம் அல்லது ஏசி அறையில் அமர்ந்து கொள்ளலாம் அதை எல்லாம் விட்டு விட்டு சூரியனை போர்வை போர்த்தி மூடிவிடலாம் என்று நினைத்து கொண்டு இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது

கலைஞரின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடுபவர்கள் எல்லாம் செல்லா காசாகி தான் போவார்கள்

Thursday, May 21, 2009

ஜெ தோல்வி, சோ மகிழ்ச்சி



நடந்து முடிந்த தேர்தலில் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடைந்தது குறித்து துக்ளக் ஆசிரியர் திரு.சோ ராமசாமி அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதாக அவரது பேட்டிகள் மூலம் உணர முடிகிறது. திரு.சோ அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு இரு காரணங்கள் இருக்கின்றன

முதலாவது, அவர் தேர்தலுக்கு முன்பிருந்தே சொல்லி வந்த விஷயமான, ஈழ பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்காது என்ற அவரது கருத்து உறுதிப்படுத்தப்பட்டது. தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் தனி ஈழ நிலைப்பாட்டுக்கு முன்னேயே தமிழக பாரதீய ஜனதாவினர் ஈழ ஆதரவு நிலையை எடுத்தனர். அது பிடிக்காத சோ அவர்கள் சென்னையில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழக பாரதீய ஜனதாவினரை மேடையிலேயே மோடி முன்னிலையில் வறுத்து எடுத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட திரு.டோண்டு ராகவனே இதற்கு சாட்சி. சோவின் அறிவுரைக்கு பின் தமிழக பாரதீய ஜனதாவினர் தங்களது ஈழ ஆதரவை தூக்கி கிடப்பில் போட்டனர். தமிழக பாரதீய ஜனதாவை அவர்களின் ஈழ ஆதரவுக்காக வறுத்தெடுத்த சோ செல்வி ஜெயலலிதாவின் ஈழ ஆதரவை கண்டு பெரிதாக எதுவும் விமர்சிக்கவில்லை. அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று மட்டும் சொல்லி வந்தார். இப்போது தேர்தல் முடிந்த பின் அவர் அளித்துள்ள பேட்டியில் தான் நினைத்தது போலவே நடந்துவிட்டதாக மிகவும் பெருமையுடன் கூறி இருக்கிறார்

சோ அவர்களின் மகிழ்ச்சிக்கு இரண்டாவது காரணம். காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்து இருப்பது தானாம். காங்கிரஸின் இந்த வெற்றியால் அது தி.மு.க. போன்ற கட்சிகளின் இடையூறு இல்லாமல் செயல்பட முடியுமாம். அதாவது தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போனதே என்கிற அல்ப மகிழ்ச்சி தான் அது. என்ன இருந்தாலும் ராஜகுரு அல்லவா

Wednesday, May 20, 2009

அ.தி.மு.க. கூட்டணி தோற்றது எப்படி?


கவிப்பேரரசு கண்ணதாசன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம். கவிப்பேரரசு ஒரு கல்லூரி விழாவுக்கு சென்று இருந்தார். அப்போது ஓவ்வொரு மாணவராக மேடை ஏறி தங்கள் கவிதையை வாசித்து கொண்டு இருந்தனர். தொடர்ந்து மேடை ஏறி கவிதை வாசிப்பதற்காக காத்து இருந்த ஒரு மாணவர் கவிப்பேரரசுவிடம் எப்படி உங்களால் மட்டும் அருமையக கவிதை எழுத முடிகிறது என்று கேட்டு இருக்கிறார். கவிப்பேரரசு அந்த மாணவரின் கவிதையை வாங்கி பார்த்துவிட்டு அந்த கவிதையை தான் வைத்து கொண்டு தன் கவிதையை அந்த மாணவரிடம் கொடுத்துவிட்டார். அந்த மாணவரின் முறை வந்தது. அவர் கவிப்பேரரசுவின் கவிதையை வாசித்து காட்டினார். அவ்வளவாக வரவேற்பு இல்லை

இறுதியாக கவிப்பேரரசு மேடை ஏறி அந்த மாணவரின் கவிதையை வாசித்து காட்டினார். வரிக்கு வரி கரகோஷம் அரங்கத்தை அதிரவைத்தது. இது ஒரு பத்திரிக்கை துணுக்கில் படித்தது

நம்ம மக்கள் மேட்டர் என்னன்னு மட்டும் பார்க்கமாட்டாங்க அத யாரு சொல்றாங்க என்பதையும் கண்டிப்பா பார்ப்பாங்க

Monday, May 18, 2009

மூன்றெழுத்து, மூன்றெழுத்து, மூன்றெழுத்து

அண்ணா என்பது மூன்றெழுத்து
தம்பி என்பது மூன்றெழுத்து

செல்வி என்பது மூன்றெழுத்து
தோல்வி என்பது மூன்றெழுத்து

அம்மா என்பது மூன்றெழுத்து
அய்யோ என்பது மூன்றெழுத்து

அய்யா என்பது மூன்றெழுத்து
ஆப்பு என்பது மூன்றெழுத்து

அன்பு என்பது மூன்றெழுத்து
வம்பு என்பது மூன்றெழுத்து

வைக்கோ என்பது மூன்றெழுத்து
போய்கோ என்பது மூன்றெழுத்து

தோழர் என்பது மூன்றெழுத்து
சீனர் என்பது மூன்றெழுத்து

வெற்றி என்பது மூன்றெழுத்து
நன்றி என்பது மூன்றெழுத்து, மூன்றெழுத்து, மூன்றெழுத்து

Saturday, May 16, 2009

கிங்மேக்கர் கலைஞர்



முதலில் வெற்றிக்கனியை கழகத்துக்கு உரித்தாக்கிய வாக்காளர் பெருமக்களுக்கும், களப்பணி ஆற்றிய லக்கி போன்ற தோழர்களுக்கும், தோழர் திருமா போன்ற கூட்டணி கட்சியினருக்கும் கழகம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்


தினப்படி மூன்று வேளை சாப்பிட்டார்களோ இல்லையோ கலைஞரை தூற்றி மூன்று வேளை பதிவு எழுதினார்கள், அவர்கள் பிரயோகப்படுத்திய வார்த்தைகள் எல்லாம் அச்சிட முடியாதவை. *ட்டிக் கதைகளையே தணிக்கை செய்த தமிழ்மணம் இவர்களின் வார்த்தைகளை கண்டுகொள்ளாதது மட்டுமல்லாமல் கழகம் தோற்பதற்கு இந்த வாரம் வரை தனது நட்சத்திரங்களாக கழக எதிர்ப்பாளர்களை களமிறக்கி அழகு பார்த்தது. நடுநிலையாக இருக்க வேண்டிய தமிழ்மணம் கட்சி பத்திரிக்கை போல் ஒரு கட்சி தளமானது, அதற்கு மாற்றம்நம்பி என்ற முகமூடி வேறு. அவர்களுக்கு மக்கள் கொடுத்தது மரண அடி. வசைபாடிய வாயெல்லாம் ஓய்ந்து போய் இருக்கும் அடுத்த தேர்தல் வரைக்கும் மூடிகிட்டு இருங்கள் அன்பின் சொந்தங்களே. ஒரு பத்து பேர் சேர்ந்து கொண்டு ஏதோ இணையமே தங்கள் கைகளில் இருப்பது போல் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஜால்ரா தட்டுவதற்கு ஒரு செம்மறி ஆட்டு கூட்டம் வேறு சொந்த அறிவை எல்லாம் எங்கே சென்று அடகு வைத்தார்களோ

இந்த வெற்றி பணத்தினால் கிடைத்த வெற்றி என்று மெத்தப் படித்த மேதாவிகள் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இருக்கட்டும், போன மாதம் வரை நம் கூட்டணியில் இருந்து எல்லாத்தையும் அனுபவித்துவிட்டு போன வாரம் கூட்டணி மாறி நமக்கு எதிராக ஓட்டு கேட்டார்களே, இவர்களை மாதிரி குழி பறிப்பவர்கள் எல்லாம் வேறு எப்படி பேசுவார்கள் அவர்கள் புத்திக்கு ஏற்ற மாதிரி தானே பேசுவார்கள். இவர்கள் கேட்ட மாதிரியே மக்கள் அவர்களுக்கு சவுக்கடி கொடுத்து இருக்கிறார்கள். நாளை கூட்டணி என்று மீண்டும் நம்மிடமே வருவார்கள் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Thursday, May 14, 2009

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே



இயக்குநர் சீமானின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்த்தபோது இந்த வீடியோ தான் ஞாபகம் வந்தது. வீடியோ கொஞ்சம் நீளமாததால் முழுவதுமாக இன்னும் பார்க்கவில்லை. முதல் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்தேன். வார்த்தைக்கு வார்த்தை பாப்பான், பாப்பான் என்றவர் இப்போது அம்மாவை வணங்குகிறேன் என்கிறார். வைகோவுக்கு ஒரு பொடா மாதிரி இவருக்கு என்ன காத்து இருக்கிறதோ என்பது தெரியவில்லை. கலைஞர் ஆட்சி என்பதால் எளிதில் வெளியே வந்தாச்சு இல்லை என்றால் வைகோ மாதிரி ஓராண்டு உள்ளே இருக்க வேண்டியது தான்

கோவியார் எழுதிய பதிவு ஒன்றை பார்க்க நேரிட்டது. மிகவும் காமெடியாக இருந்தது அவரது பதிவு. தி.மு.க. சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என்று பயமுறுத்தி ஓட்டு கேட்பதாக குறைபட்டு இருந்தார். நடுநிலைவியாதி என்று சொல்லிக் கொள்ளும் அவர் அதற்கான காரணங்களை தேடி அலைவது தான் அந்த பதிவில் அப்பட்டமாக தெரிந்தது. சென்ற முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்று செல்வி ஜெயலலிதா முதல்வரானாரே அந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சி மீது எந்த புகாரும் கிடையாது, கழகம் சாதனைகளை சொல்லி தான் தேர்தலை சந்தித்தது ஆனால் நம் மக்கள் கவிழ்த்துவிட்டார்கள். அப்போது தி.மு.க. தோற்றதற்கு பணப் புழக்கம் இல்லாதது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதையே மாற்றி இந்த தேர்தலில் பணம் விளையாடுகிறது என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியதெல்லாம் தி.மு.க. தோற்க வேண்டும். மற்றபடி இவர்கள் சொல்வதில் எந்த முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை

தேர்தல் முடிந்ததும் செல்வி ஜெயலலிதா All options are open என்று சொன்னதை யாராவது கோவியாருக்கு அர்த்தத்துடன் விளக்கி சொன்னால் பரவாயில்லை. அவருக்கு இன்னமும் அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பற்றி எதுவும் தெரியவில்லை. ஒருவேளை அவர் நடுநிலையான அறிக்கைகளை மட்டுமே தேடிப்பிடித்து வாசிப்பார் போல் தெரிகிறது

எத்தனையோ பேர் கலைஞரை தூற்றி எழுதி வருகிறார்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர்கள் மீண்டும் நம் அணிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஆனால் கோவியார் போன்ற நடுநிலைவியாதிகளுக்கு ரீச் அதிகம் என்பதால் தான் இந்த எதிர்வினை பதிவு மற்றபடி அவர் என்றுமே நம் உடன்பிறப்பு தான்

தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்மணம் தீவிர தி.மு.க. எதிர்ப்பாளர்களை தனது நட்சத்திரங்களாக அறிமுகப்படுத்திய அரசியலை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை அதுவும் தேர்தல் நடக்கும் இந்த வாரம் மற்றம்நம்பி என்ற மூகமூடி வாயிலாக. இந்த முகமூடி வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னணியில் உள்ள நுண்ணரசியல் இப்போது தான் புரிகிறது. ஐந்தாண்டு காலம் கொலைகார கூட்டணியில் அங்கம் வகித்துவிட்டு தேர்தலுக்கு் முந்தைய நாள் ஈழம் சிடியை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சிக்கும் தமிழ்மணத்துக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. தைலாபுரத்தில் இருந்தாலும் அமெரிக்காவில் இருந்தாலும் ஒரே மனோபாவத்துடன் செயல்படும் அவர்களின் ஒற்றுமை புல்லரிக்க வைக்கிறது

Friday, May 08, 2009

ஜெ - சோனியா மீண்டும் நட்பு?

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது செல்வி ஜெயலலிதா ஒவ்வொரு மேடையிலும் மறக்காமல் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி ஓட்டு கேட்டார் அது என்ன தெரியுமா? தன் கணவரை கொன்ற கட்சியினருடன் சோனியா கூட்டு வைத்து இருக்கிறார் அதனால் அவர் பதிபக்தி இல்லாதவர் என்று மேடைதோறும் முழங்கி வந்தார். தி.மு.க. புலி ஆதரவு கட்சி என்பது ஜெயலலிதாவின் டிரேட் மார்க் பிரச்சாரம் என்பது உலகப் பிரசித்தி. இதை எல்லாம் அடித்தட்டு மக்கள் வேண்டுமானால் மறந்து போய் இருக்கலாம் அவர்களுக்கு அன்றாடப் பிரச்சினைகளே ஆயிரம் இருக்கிறது ஆனால் டைம் பாஸுக்காக இணையத்தில் உலவிக் கொண்டு ஈமெயில்களை பார்வேர்டு செய்து கொண்டு இருக்கும் படித்த பாமரர்கள் மறந்துவிட்டிருக்க முடியாது. இன்று கூட்டத்தில் கலக்கவில்லை என்றால் நாளை கும்மிக்கு ஆள் இருக்காதே என்ற கவலை அவர்களுக்கு


இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த "பதிபக்தி" மேட்டரை கண்டு கொள்ளாதது மட்டுமல்லாமல் மேடைதோறும் கலைஞரை காய்ச்சி எடுக்கும் ஜெயலலிதா மறந்தும் கூட சோனியா பற்றி வாயே திறக்கவில்லை. இந்த தேர்தல் சூடு பிடிக்கும் முன்னரே காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி செய்தவர் ஜெயலலிதா. காங்கிரஸில் உள்ள சில கோஷ்டிகளும் இதை தான் விரும்பின. ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே கலைஞர் கூட்டணியில் இருப்பதால் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்சமயம் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சில நடவடிக்கைகளை செய்து வருகிறது. ராகுல் காந்தியின் பேச்சும் இதை உறுதி செய்கிறது. ஜெயலலிதா தரப்பில் இருந்தும் இதற்கு மறுப்பு இன்னும் வரவில்லை

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி போல் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்று ஒன்றும் இருக்கிறது அந்த கூட்டணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணியாக கூட இருக்கலாம் அதனால் எவனோ ஒருவன் தன் சுயநலனுக்காக கொளுத்திப் போட்டான் என்பதற்காக செம்மறி ஆட்டு கூட்டம் போல் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்கும் படித்த பாமரர்களை நினைத்தால் நகைப்பாக இருக்கிறது

Thursday, May 07, 2009

வைகோவுக்கு சவால்



ஈழம் பெற்று தந்துவிடுவேன் என்று சொன்னதற்காக கேட்ட ஆறு தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை நாலு சீட்டுகள் கிடைத்தாலே போதும் என்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருப்பதாக சொல்லும் வைகோ அவர்களே உங்களுக்கு ஒரு சவால். உங்கள் கூட்டணி கட்சி தலைவியுடன் ஒரே மேடையில் உங்கள் டிரேட் மார்க் பேச்சான ரத்த ஆறு பேச்சை பேச முடியுமா. அல்லது குறைந்தபட்சம் பிரபாகரன் பேரையாவது ஜெயலலிதா முன்னிலையில் உச்சரிக்க முடியுமா? ஏற்கனவே ஒரு முறை ரத்த ஆறு என்று பேசிவிட்டு பின்னர் "அந்த" அர்த்தத்தில் கூறவில்லை என்று அந்தர் பல்டி அடித்ததும் அதன் பிறகு வாயை பொத்திக் கொண்டு சமர்த்தாக இருப்பதற்கும் என்ன காரணம் வைகோ அவர்களே

Wednesday, May 06, 2009

ஜெயலலிதாவின் தேசியவாத முகமூடி கிழிகிறது



ஈழத்துக்கு ஆதரவாக பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று செல்வி ஜெயலலிதா கூறி இருக்கிறார் ஆனால் இந்திய ராணுவ வாகனங்களை அடித்து நொறுக்கிய கூட்டத்தினர் ஜெயலலிதாவின் தோழமை கட்சியின் கொடியினை அல்லவா ஏந்தி வந்தார்கள். அந்த கட்சியின் தலைவரோ ஆம் அதை செய்தது நாங்கள் தான் என்று இறுமாப்புடன் சொல்கிறார். இதை எல்லாம் ஜெயலலிதா ஆமோதிக்கிறாரா? இன்னும் கொடுமை என்னவென்றால் சோ ராமசாமி முதலான கடைந்தெடுத்த தேசியவாதிகள் கூட மூடிக் கொண்டு இருப்பது தான். இவர்களின் தேசியவாத வேஷம் ஈழத்துடன் முடிந்துவிட்டதா அடுத்தது தமிழீழத் தாய் வேஷம் தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு

Tuesday, May 05, 2009

ஜெயலலிதாவின் கைக்குட்டையில் மறைந்து கொண்டு கல்லெறிபவர்கள்



கலைஞர் சோனியாவின் புடவையில் ஒளிந்து இருக்கிறார் என்று சில புத்தி சுவாதீனம் இல்லாத பிறவிகள் எழுதி வருகிறார்கள். கலைஞராவது பரவாயில்லை ஒரு மாநில முதல்வர் அவருக்கென்று சில அதிகார விதிமுறைகள் இருப்பதால் அவற்றுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார். ஆனால் இந்த புத்தி சுவாதீனம் இல்லாதவர்களோ ஜெயலலிதாவின் கைக்குட்டையில் அல்லவா மறைந்து கொண்டு கல்லெறிகிறார்கள்

தமிழர்களே யாருக்கு உங்கள் ஓட்டு?

தி .மு. க அல்லது அ .தி .மு .க அல்லது விஜயகாந்த் அணிக்கு அளிக்காத வாக்கு உபயோகம் இல்லை. டில்லியில் மத்திய ஆட்சியை அமைக்க போகும் அரசை தீர்மானிக்கும் தேர்தலில் சின்ன அணிகளுக்கு ஒட்டு போடுவது எதையும் சாதிக்காது. எனவே நன்கு சிந்தித்து நல்ல அணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.

காங்கிரசை கவனித்தால்.

1. இப்போதுள்ள பிரதமர் மன்மோகன் சிங் குறை சொல்ல முடியாதவர்.

2.இந்த 5 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாதவகையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

3. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூலம் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

4. முன் எப்போதும் இல்லாதவகையில் நெடுஞ்சாலைகள் அகல படுத்தப்பட்டு உலகத்தரத்திற்கு போடப்பட்டு வருகின்றன .

5.பல்வேறு உலக தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் அமைக்க பட்டு வருகின்றன.

6. இரயில் போக்குவரத்துக்கு மேம்பட்டுள்ளது.

7. மின்சாரம், இரயில் , பஸ் கட்டணம் ஏற்றபடவிலை.

8. புதிய மேம்பாலங்கள் பல்வேறு சாலைகளில் கட்டப்பட்டு போக்குவரத்து நெருக்கடி குறைக்கப்பட்டுள்ளது. கத்திபாரா ஜங்ஷனில் இப்போது ஒரு மணித்துளி கூடநெரிசலில் காத்து நிற்க வேண்டாம்.

9.பல்வேறு வேலை வாய்ப்பு திட்டங்கள். ( கணிப்பொறியால் )

10.அரசாங்க உழியர்களுக்கு சம்பள உயர்வு ( கணிப்போறி வேலைக்கு சமமாக) .

11. பல் வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு புதிய பஸ் விடப்பட்டுள்ளது.

12. அரசு உழியர்களுக்கு சிறப்பு மருத்துவ ஏற்பாடு


பல்வேறு மக்கள் நல பணிகள். உதாரணமாக- கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்ட உணவுக்காக நிதி உதவி, ஏழை பெண்கள் திருமண உதவி , நூறு நாள் வேலை திட்டம், இலவச டிவி, காஸ் அடுப்பு, விவசாய கடன் தள்ளுபடி, இனிமேல் விவசாய கடன்களுக்கு வட்டி கிடையாது, உழவர் சந்தை போன்ற திட்டங்கள்.

புதிய வரி இல்லாமல், கட்டணங்களை ஏற்றாமல், இவ்வளவு திட்டங்களை கொண்டு வருவதற்கு வசதியாக இரண்டு அரசுகளும் ஒத்த கூட்டணியாக இருக்கவேண்டும்.
எனவே தி. மு.க அணிக்கு வாக்களித்தல் நமக்கு நன்மை உண்டு.

இதை படிப்பவர்கள் பலர் நல்ல வேளையில் இருக்கலாம் . ஏன் இலவச திட்டங்கள் நீங்கள் என கேட்கலாம். ஏழைகளும் மக்கள் தான். நமது சாப்பாடு அவர்களின் வியர்வையில் விளைந்த முத்து என எண்ணி பார்க்க வேண்டும். அவர்களால் விவசாயத்தின் மூலம் கிடக்கும் வருவாயில் சேமிக்க முடியாது. எதுவும் வாங்க முடியாது. நம்மால் முடிந்த அளவு உதவி செய்யவேண்டும். அப்படி சேயும் உதவி கடவுள்களுக்கு சென்று சேரும்.

அப்படி இல்லாவிட்டால் ஜெயா உதவியுடன் மதிய ஆட்சி வந்தால், கலைஞரை குறை கூறவே ஜயாவிற்கு நேரம் போதாது.

எனவே நன்கு சிந்தித்து ஒட்டு போடுங்கள். கருணை உள்ள கலைஞருக்கா? அல்லது ஒரே கையெழுத்தில் ஒரு லட்சத்து எழுபத்திரெண்டாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி அவர்கள் குடும்பத்தை நிர் மூலமாக்கிய ஜெயாவுக்கா? எண்ணி பாருங்கள். .உங்கள் வீட்டு பெண்மணிகள், குழந்தைகள் ஆகியோரை கேளுங்கள். பின் ஒட்டு போடுங்கள்.

(நன்றி : உமா)

Monday, May 04, 2009

தி.மு.க.வுக்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு



செய்தி நன்றி - தட்ஸ்தமிழ்.காம்

கரூர்: கரூர் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமிக்கு கரூர் ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதை கரூர் மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜாவிடம் கேட்டபோது, இந்த தேர்தலில் ரசிகர்கள் யாருக்கு பிரியமோ அவர்களுக்கு இஷ்டம் போல் வாக்களிக்கலாம் என்று தலைவர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தையோ, மன்ற கொடியையோ நாங்களும் சரி, மற்ற மன்றத்தினரும் சரி எந்த சூழ்நிலயிலும் யாருக்கு ஆதரவாகவும் பயன்படுத்த மாட்டோம்.

எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் மன்றம் நடத்தும் விழாக்களிலும், நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் கே.சி. பழனிசாமி கலந்து கொண்டு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றார்.

அதனால் எங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒன்று கூடி பேசியபோது கரூர் எம்பியும், திமுக வேட்பாளருமான கே.சி.பழனிசாமிக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம்.

கடந்த பல வருடங்களாக எதையும் எதிர்பாராமல் தேவையறிந்து உதவி செய்த கே.சி.பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் நாங்களும் சரி, எங்கள் தலைவரும் சரி, என்றும் நன்றியை மறக்க மாட்டோம் என்றார்.

கரூர் பாராளுமன்றத் தொகுதி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் வருகின்றது. இதனால் இந்த 4 மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றங்களும் திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Saturday, May 02, 2009

முதல்வரின் மே தினப் பரிசு - பஸ் கட்டணம் குறைப்பு



பேரூந்து பயணக் கட்டணம் குறைப்பு என்று செய்திகள் வந்தன நம்ம தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் கவனத்தை வேறு அது (உடனே) ஈர்த்துவிட்டது. பேரூந்து பயணக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. நம்ம முதல்வர் ஏன் தான் இவ்வளவு அப்பாவியா பொறுப்பா பதில் சொல்கிறாரோ. ராமதாஸ் மாதிரி ஈழம் பற்றி பேசுவது அன்புமணியின் வேலை இல்லை அது பிரணாப் முகர்ஜியின் வேலை என்று சொல்லிவிட்டு போவதற்கு முதல்வருக்கு இன்னும் அரசியல் முதிர்ச்சி போதவில்லையோ