Thursday, April 30, 2009

டாக்டர் ராமதாஸின் "தசாவதாரம்" - படங்கள்

ஓபனிங் சீன், சும்மா ஒரு பில்டப்புக்காக



இது போன மாசம்



இது இந்த மாசம்



போன வாரம்



சில வாரங்களுக்கு முன்



சில மாதங்களுக்கு முன்



தங்கபாலுவுக்கு தோஸ்த்



எளிமையான தலைவருடன்



பொழுது போகலைனா



அடுத்த கூட்டணி பற்றிய ஆலோசனை



Wednesday, April 29, 2009

பிரபாகரன் இல்லாத ஜெயலலிதாவின் ஈழம்

ஜெயலலிதாவும் சிங்களவனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் பேசுகிறார்கள். சிங்களவன் என்ன சொல்கிறான் என்றால், ஈழத்துக்கு இங்கே இடமில்லை வேண்டுமானால் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று. ஜெயலலிதா தனி ஈழம் அமைந்தே தீரும் என்கிறார் ஆனால் பிரபாகரனை பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. பிரபாகரன் இல்லாத இத்தகைய ஈழம் அமையத் தான் பலர் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுமாறு வெட்கமே இல்லாமல் கேட்கிறார்கள். சூது வாது தெரியாத அப்பாவி ஈழத் தமிழ்ப் பதிவர்களும் இவர்களை நண்பர்களாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்

என்ன சொன்னார் ஜெயலலிதா என்பதை ஆராயாமலே பப்பர மிட்டாய் பார்த்த பட்டிக்காட்டன் போல் தலை ஆட்டுகிறது ஒரு கூட்டம். நாளை ஜெயலலிதா வேறு எதாவது சொன்னாலும் இதே மாதிரி தான் தலை ஆட்டும் அந்த கூட்டம். ஜெயலலிதா நெருங்கிய நட்பு பேணிய சங்கராச்சாரியார், ஜெயலலிதா விமரிசையாக திருமணம் நடத்திக் காட்டிய வளர்ப்பு மகன் கதை எல்லாம் மறந்து போய்விட்டது போல் இவர்களுக்கு. அவர் அகராதியில் இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஈழத் தமிழ் பதிவர்கள் இந்த தலையாட்டும் கூட்டத்தை நம்பி இருக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இவர்களின் உள்நோக்கத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும்

தனி ஈழம் பற்றி பேசிய ஜெயலலிதா வெளிப்படையாக பிரபாகரனை பற்றி எதுவும் சொல்லவில்லை தான் ஆனால் பிரபாகரன் பற்றி தான் முன்னர் கூறிய கருத்துக்களை இன்னும் திரும்ப பெறவில்லையே. பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொன்னதையோ, புலிகளை தீவிரவாதிகள் என்று சொன்னதையோ அவர் இன்னும் மறுக்கவில்லை. மாறாக இத்தனை நாட்கள் வேனில் சென்று பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, இந்த தேர்தலில் தீவிரவாதிகள் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்து இருப்பதால் ஹெலிகாப்டரில் செல்வதாக இரு தினங்களுக்கு முன்னர் கூட குறிப்பிட்டு இருக்கிறார். இவர் பாஷையில் தீவிரவாதிகள் என்றால் யார் என்று சொல்ல தேவை இல்லை

சரி, திடீரென்று அடுத்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவும் பிரபாகரன் எனது நண்பர் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர் என்று கேட்கலாம். அவர் சொன்னாலும் சொல்வார், தேர்தல் நேரம் அல்லவா அதனால் எது வேண்டுமானாலும் சொல்லுவார். தூங்கும் கலை வல்லுநர் இப்போது தான் கூரியரில் ஒரு சி.டி. அனுப்பினார். அதை பார்த்த பின் தான் தெரிந்தது பிரபாகரன் எனது நண்பர் என்று ஒரு டுபாக்கூர் கதையை அவிழ்த்து விடுவார். அந்த கதையையும் பரப்புவதற்கு தான் ஒரு கூட்டம் தயாராய் இருக்கிறதே

ஜெயலலிதா விடாக்கண்டராம் அதனால் எப்படியும் ஈழம் பெற்று தந்துவிடுவார் என்று மாலனே ஒத்துக் கொள்கிறார். ஏற்கனவே கச்சத் தீவை மீட்பேன் என்று சூளுரைத்தவர் தானே இந்த விடாக்கண்டர், கச்சத் தீவு என்னானது என்று கொஞ்சம் மாலன் கேட்டு சொல்வாரா. அதோ பார் காகம் என்று நாம் சொன்னால் நம்பமாட்டார்கள் அதுவே அதோ பார் வெள்ளை காகம் என்று அவர்கள் சொன்னால் ஆமாம் அதுவும் தலைகீழாக பறக்கிறது என்று இவர்களும் சேர்ந்து கொள்வார்கள். நல்லா இருங்கடே!!

Monday, April 27, 2009

ரவிசங்கர் ஜெயலலிதாவுக்கு காட்டிய சி.டி




ஜெயலலிதாவின் வாயில் இருந்து ஈழம் என்ற வார்த்தையை ஒலிக்க வைத்ததற்காக ரவிசங்கருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இத்தனை நாள் இவர் வெறும் வாழும் கலை வல்லுநர் என்று மட்டும் தான் நினைத்து வந்தேன் இப்போது தான் தெரிந்தது இவர் பல கலை வல்லுநர் என்பது. ஈழத்தமிழர் என்று யாரும் இல்லை இலங்கை தமிழர் என்று தான் சொல்ல வேண்டும், போர் என்றால் மக்கள் மரிக்க தான் செய்வார்கள் என்று பேசியும், பிரபாகரனை இலங்கையால் பிடிக்க முடியாவிட்டால் இந்திய படை சென்று பிடிக்க வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றியவர் ஆயிற்றே ஜெயலலிதா


ஆனால் இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒரு விஷயம் இருக்கிறது. இத்தனை வருடம் ஜெயலலிதா கூடவே இருந்து வைகோ ஈழம் பற்றி பேசி வந்தார் அப்போதெல்லாம் ஜெயலலிதா காதில் போட்டுக் கொள்ளவில்லை, மகனின் ராஜ்யசபா சீட்டுக்காக ராமதாஸும் அம்மையார் பக்கம் வந்து தன் சீட்டு பேரத்தை மறைக்க ஈழ்ப் பிரச்சினையை கையில் எடுத்தார் அப்போதும் அம்மையார் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ரவிசங்கர் ஜெயலலிதாவுக்கு போட்டு காண்பித்ததாக சொல்லப்படும் வீடியோ சி.டி.க்கள் போன்ற சி.டி.க்கள் பல மாதங்களாகவே பெரியார் திராவிட கழகத்தினரால் விநியோகிக்கப்பட்டு வருகிறது அப்போதும் ஜெயலலிதா இறங்கி வரவில்லை. ஆனால் ரவிசங்கர் சொன்ன உடனேயே கேட்டுவிட்டார். ஈழம் ஆனாலும் அது அது சொல்வதற்கு கூட தராதரம் வேண்டும் போல் தெரிகிறது. நாளைக்கு ஈழம் தொடர்பாக எந்த உதவியானாலும் வைகோவோ, ராமதாஸோ அல்லது வேறு யாருமோ சொன்னால் ஜெயலலிதா கேட்பார் என்று எதை வைத்து சொல்கிறார்கள் அதற்கும் ரவிசங்கர் அல்லவா வந்து சொல்ல வேண்டும். இதோ தற்போது நடந்து வரும் பிரச்சாரக் கூட்டத்தில் கூட வைகோவை மேடையில் நிற்க வைத்தவர் தானே ஜெயலலிதா

முதலில் கலைஞரை வலைப்பக்கங்களில் வசைமாறி பொழிந்தார்கள், அப்புறம் 49ஓ என்று சொல்லி வந்தார்கள், தற்போது தேர்தல் நெருங்க நெருங்க வெளிப்படையாகவே அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தால் தியாகம் என்கிறார்கள் கலைஞர் இருந்தால் நாடகம் என்கிறார்கள் இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஏதோ உள்குத்து இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. பூனை வெளியே வந்துவிட்டது என்ற கதையாக தான் இருக்கிறது

மேலே உள்ள படத்துக்கும் இடுகைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைத்தவர்களுக்கு, அந்த படத்தை கிளிக்கி தெரிந்து கொள்ளவும்

எப்படி இருந்த வைகோ ... படங்கள்





மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்களே!! அன்புச் சகோதரர் மாதிரி இதுவும் ஒரு அன்புச் சகோதரியோ



நாங்கள் சொன்னால் இலங்கை கேட்பதில்லை என்று வெள்ளை மாளிகையே அறிக்கைவிட்டு இருக்கிறது ஜெயலலிதா ஈழம் பெற்று தருவேன் என்று சொன்னதால் தாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதாக் சில மெத்தப் படித்த மேதாவிகள் சொல்லி வருகிறார்கள். முதலில் போர் நிறுத்தத்துக்கு வழிய பாருங்க அண்ணாச்சிகளா அப்புறமா மற்றதை பற்றி யோசிக்கலாம். இல்லாத ஊருக்கு ஒருவர் வழி சொல்வாராம் அந்த ஊருக்கு இவங்க எல்லாம் போவாங்களாம்

Friday, April 17, 2009

ம.ம.க.வுக்கு ஜெயலலிதா வைத்த செக்

கூட்டத்தோடு கூட்டமாக கலைஞரை கும்முபவர்களுடன் ம.ம.க.வும் சமீபத்தில் சேர்ந்து கொண்டது. முதலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.ம.க. தங்களுக்கு ஒரு தொகுதிக்கு அதிகமாக தரவில்லை என்பதால் முறுக்கிக் கொண்டு போனது. கலைஞராவது ஒரு தொகுதி கொடுக்க முன்வந்தார், ஆனால் அவர் ம.ம.க. வாக்கு வங்கியில் ஓட்டை போட நினைக்கவில்ல. தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்றொரு முஸ்லிம் அமைப்பான முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளார். தி.மு.க.வுக்கு முஸ்லிம் ஓட்டு தேவை இல்லை என்று எழுதிய அதே வலைப்பதிவில் வெற்றியை நோக்கி முஸ்லிம் லீக் என்று சில நாட்கள் கழித்து மற்றொரு இடுகை வந்துள்ளது. ஒரே ஒரு தொகுதியை கொடுத்தாலும் அந்த வெற்றியை மிகவும் எளிதாக்கி கொடுத்து இருக்கிறார் கலைஞர்

முறுக்கிக் கொண்டு போன ம.ம.க.வோ தன் தொகுதிகளுள் ஒன்றாக மத்திய சென்னையை தேர்ந்தெடுத்தது. முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் தொகுதி என்பதால் இங்கு போட்டியிட முடிவு செய்தது. தி.மு.க.வின் வாக்கு வங்கியாக கருதப்படும் முஸ்லிம்களின் ஓட்டு இதனால் பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இதனால் தி.மு.க.வின் வெற்றியை அது பாதிக்கும் என்று சொல்லிவிட முடியாது. அ.தி.மு.க.வின் வேட்பாளராக எஸ்.எஸ்.சந்திரன் அறிவிக்கப்பட கழகத்தின் வேட்பாளரான தயாநிதி மாறனுக்கு அதிகம் போட்டி இருக்காது என்று கருதப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் ஜெயலலிதா தன் கட்சி வேட்பாளரை மாற்றியதோடு அல்லாமல் புதிய வேட்பாளராக ஒரு முஸ்லிம் வேட்பாளரை அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே கழகத்திடம் முறுக்கிக் கொண்டு போன ம.ம.க. தன்னை அ.தி.மு.க. அரவணைக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால் ஜெயலலிதாவோ அவர்களை கண்டு கொள்ளாதது மட்டும்மலாமல் அவர்களின் வாக்கு வங்கிக்கே வேட்டு வைத்து இருக்கிறார்

இந்த வேட்பாளர் தேர்வின் மூலம் தேர்தலுக்கு முன்னரே அ.தி.மு.க.வுக்கு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்திய பிரதான கட்சி என்ற பெயர் கிடைத்துள்ளது. மேலும் இந்த வேட்பாளர் தேர்வால் ம.ம.க.வுக்கு போக வேண்டிய முஸ்லிம் ஓட்டுகளும் பிரிக்கப்படும். மேலும் தயாநிதி மாறன் தொகுதி என்பதால் இந்த தொகுதியின் வெற்றியை எந்த அளவுக்கு ஜெயலலிதா எதிர்பார்த்து இருக்கிறார் என்பதும் சந்தேகம் தான். ம.ம.க.வுக்கு ஓரளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதாலேயே ஜாதி ஓட்டுகளை மட்டுமே எண்ணி பழக்கபட்ட ராமதாஸும் ஓடோடிச் சென்று ம.ம.க.வின் ஆதரவை கேட்டு நின்றார். ஆனால் அதற்கும் வழியில்லாமல் செய்துவிட்டார் ஜெயலலிதா. அவரின் இந்த வேட்பாளர் மாற்ற முடிவால் அ.தி.மு.க.வுக்கு லாபமோ இல்லையோ கண்டிப்பாக ம.ம.க.வுக்கு பெரும் நஷ்டமே மிஞ்சும்

இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி திரு.கிரெய்க் பாரட்டுடன் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.தயாநிதி மாறன்


இவரை உங்களுக்கே தெரியும்






Wednesday, April 15, 2009

ராமதாஸின் கனவை நிறைவேற்றிய கலைஞர்

இந்த பதிவு எழுது முன் சக உடன்பிறப்புகளுடன் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே எழுதினேன் ராமதாஸ் இன்னமும் திரும்ப நம்ம கூட்டணிக்கே வரவில்லையே என்று. அவர் எப்போ எந்த கூட்டணியில் இருப்பார் என்றே சொல்ல முடியாது. மக்கள் தொலைக்காட்சியில் வானிலை நிலவரம் மாதிரி ராமதாஸின் கூட்டணி நிலவரத்தையும் தினமும் சொன்னால் மிகவும் வசதியாக இருக்கும். ராமதாசுக்கு இவ்வளவு பில்டப் போதும் என்று நினைக்கிறேன்

நம்ம ராமதாசுக்கு கூட்டணி மாறுவதை தவிர மேலும் சில பொழுதுபோக்குகள் உண்டு. அதாவது அவ்வப்போது ஏதாவது சினிமா நடிகரை வம்பிழுப்பது. பாபா படம் வந்த போது ரஜினியுடன் வம்பிழுத்தார், பாபா படப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அடுத்து விஜயகாந்தையும் சிலகாலம் உரசிப் பார்த்தார் விருத்தாசலத்தில் விழுந்த செம அடிக்கு அப்புறம் கொஞ்சமாக அடக்கி வாசிக்கிறார்

நடிகர்களுடன் மோதிக் கொள்வதை தவிர மீதி நேரங்களில் தமிழ், தமிழ் கலாச்சாரம் என்றும் சில சமயங்களில் காமெடி பண்ணுவார். சில வருடங்களுக்கு முன் தமிழ் படங்களுக்கு தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி சில திரைப்படங்கள் வெளிவரும் நேரத்தில் பிரச்சினை செய்தார் அதில் முக்கியமானது மும்பை எக்ஸ்பிரஸ். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் பெயரை மாற்ற சொல்லி பல திரை அரங்குகளில் பிரச்சினை செய்ததோடு அல்லாமல் ஒரு திரை அரங்கில் திரையையும் கிழித்தார்கள். ஆனால் கமல் அவர்களை சட்டை செய்யவே இல்லை. கமல் மட்டுமல்ல திரையுலகை சேர்ந்த யாருமே இவரை கண்டுகொள்ளவே இல்லை

மரம் வெட்ட முடிந்த ராமதாஸால் இந்த விஷயத்தில் ஒரு புல்லை கூட புடுங்க முடியவில்லை. ஆனால் இப்போது பார்த்தோமானால் எல்லா படங்களுமே தமிழ் பெயர் தாங்கி வருகின்றன. இதற்கு காரணம் யார். ராமாதாஸின் மரம் வெட்டும் கோடாரியால் சாதிக்க முடியாததை கலைஞர் தன் கையில் உள்ள பேனாவால் ஒரு கையெழுத்து போட்டு சாதித்தார்

வாரணம் ஆயிரம் என்று பெயரை தமிழில் வைத்துவிட்டு உள்ளே முழுக்க ஆங்கில வசனங்கள் வைத்ததை பற்றி இங்கே சொல்ல வரவில்லை. ஒரு போரட்டத்துக்கு இரு தலைவர்களின் அனுகுமுறையை பற்றி தான் சொல்ல வருகிறோம். படப் பெட்டியை தூக்கிக் கொண்டு போவதாலோ திரையை கிழிப்பதாலோ முடியாத காரியத்தை விவேகத்தோடு செய்து முடித்தவர் தான் கலைஞர்

ரத்த ஆறு ஓடும் என்று பேசுபவர்களால் ரத்த ஆறு ஓட வைக்கவே முடியும் அவர்களால் ஒரு தீர்வையும் முன் வைக்க முடியாது. ஏற்கனவே ஒரு தேசத்தில் ரத்த ஆறு ஓடுவது போதாதா இவர்களுக்கு இங்கேயும் ரத்த ஆறு ஓட வேண்டுமா

Tuesday, April 14, 2009

அ.தி.மு.க. ஆட்சி - "துக்ளக்" மக்களே மறந்து போச்சா

இன்று திடீரென்று தமிழ் ஆர்வலர்களாக மாறி தி.மு.க. இலங்கைக்கு உதவி செய்யும் காங்கிரசுக்கு துணை போகிறது என்று முதலை கண்ணீர் வடிக்கும் சந்தர்ப்பவாதிகளே நீங்கள் தலைமுறை தலைமுறையாக ஆதரித்து வரும் அ.தி.மு.க. ஆட்சியின் போது என்ன நடந்தது என்பது மறந்துவிட்டதா

சங்கராச்சாரியார் நேபாளம் தப்பி செல்ல போகிறார் என்று சொல்லி அவரை ஒரு கிரிமினலை துரத்துவது போல் துரத்தி சென்று பிடித்தது யார் ஆட்சியில், சங்கரமடத்துக்குள் போலீஸ் நுழைந்தது யார் ஆட்சியில், சங்கராச்சாரியார் பெண்களுடன் செல்போனில் அரட்டை அடிக்கிறார் என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது யார் ஆட்சியில். அன்று நீங்கள் எல்லாம் கூனிக் குறுகி நின்றீர்களே இன்று நீங்கள் எல்லாம் தமிழ் ஆர்வலர்களா???










Monday, April 13, 2009

முதல்வர் பதவி முட்டாள்களுக்கு உறுத்தல்!

ஈழத்தமிழர்கள் குறித்து வெளிப்படையான தன் எண்ணத்தைச் சொல்லி அல்லது ஈழத்தமிழர்களின் நலனுக்காக கலைஞர் பதவி துறப்பாரா ? என்று அரைவேக்காட்டுத்தானமான கேள்விகள் எழுகின்றன.

ராஜிவ் காந்தி கொலையை திமுக தூண்டிவிட்டு நடத்தியதாக வாக்களர்களை நம்ப வைத்து பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்த ஜெயலலிதாவை அடுத்த தேர்தலின் போதே வாக்காளர்கள் உணர்ந்து கொண்டு வீட்டுக்கு அனுப்பினர். தன் வெற்றிக்கு இராஜிவின் மரணம் மூலதனம் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்த ஜெ தன் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக ஒரு கட்டத்தில் அறிவித்து காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தினர்.

ஜெ வின் அரசியலை நன்றாக புரிந்து கொண்ட மக்கள் அடுத்த தேர்தலில் ஆண்டிப்பட்டியில் அவரை புறமுதுகிட்டு ஓட வைத்தனர். 1996 ல் நடந்த தேர்தலில் கலைஞரின் திமுக ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிபுரிந்து சமத்துவ புரம், ஏழைப்பெண்களுக்கு இலவச திருமணம் போன்று பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தது.

ஜெ ஆட்சியில் கிராமங்களில் கஞ்சி தொட்டி திறந்தது போன்ற அவல நிலை எதுவும் இல்லாவிட்டாலும் 'பணப் புழக்கம் இல்லை' என்ற பொய்பிரச்சாரத்தை ஆதிக்க பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுத்து அதைப்பற்றியே அந்த பத்திரிக்கைகளில் தலையங்கமாக எழுத / பேச வைத்து மக்கள் மனதில் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தினார் ஜெ. இதற்காக அவரது குலக்கொழுந்துகளான சோ வகையறாக்கள் பெரிதும் உதவினர்.

அதுமட்டுமல்ல லெட்டர் பேடு கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்ந்து கொண்டு மாபெரும் கூட்டணி என்ற மாயை ஏற்படுத்தியும், மதிமுக - திமுக கடைசி கட்ட மோதல்களில் தனித் தனியாக பிரிந்ததன் மூலம் குறைந்த வாக்கு வேறுபாட்டில் பல இடங்களிலும், மூப்பனார் தாமாக தந்த தமாகா கூட்டணி (செத்தும் கெடுத்தார் இந்த சீதக்காதி) தயவினாலும் அதிமுக வெற்றி பெற்றது.

இதையெல்லாம் அரசியல் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு என்ற இமேஜ் அவர் ஆண்டிப்பட்டியில் யானையின் காதில் புகுந்த சிற்றெறும்பான சுகவனத்திடம் தோற்றபோதே உடைந்துவிட்டது. சென்ற தேர்தலில் கூட்டணிக்காக ஜெ எவ்வளவோ முயன்றும் காங்கிரஸ் அதிமுகவை நெருங்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதால் வேறு வழியின்றி தானே விலங்கு மாட்டிய வைகோவிற்கு தன் கையால் பூச்செண்டு கொடுத்து போஸ் கொடுத்தார். அரசியலில் நேர்மையோ, வெட்கமோ எதுவும் இல்லை என்பதற்கு சாட்சியாக இருவரின் புகைப்படமும் வரலாறு படைத்தது. தமிழின வரலாற்றில் எட்டப்பனுக்கு இணையான இடம் வைகோவுக்கும் கிடைத்தது.

கடைசியாக நடந்த தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும் என்றும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வெட்கத்தை விட்டு சோ ராமசாமி போன்றவர்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதினார்கள். ஜெ. விசுவாசம் கொண்ட வடநாட்டு பத்திரிகைகள் அதிமுகவுக்கு ஏதோ பெரிய மக்கள் ஆதரவு இருப்பது போலவும், அவர் தென்னாட்டு மார்க்கெட் தாட்சர் போலவும் சித்தரித்து கட்டுரைகளையும், கருத்துக்கணிப்புகளையும் எழுதினார்கள்.

திமுக - கூட்டணி கட்சிகள் வெற்றிபெரும் என்று ஒரு சிலர் மட்டுமே சொன்னார்கள். அவர்களும் கூட திமுக தனித்து ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொன்னார்கள். ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு எட்டாம் வள்ளலை போல இடங்களை வாரியிறைத்து திமுகவை பலமற்றதாக்கியிருந்தார் கலைஞர்.

என்னன்னவோ முயற்சித்தும் அதிமுக வெற்றி பெறமுடியவில்லை. போதாக்குறைக்கு விஜயகாந்த் ஒருபக்கம் அதிமுக வாக்கு வங்கி வாக்காளர்களில் உள்ள திரை ரசிகர்களை இழுக்க, திரைப்பட ஹீரோவுக்கு ஒட்டுப்போடும் வாக்காளர்களின் பெரும் பகுதியை அதிமுக இழந்தது.


********

தற்போது எந்த விதத்திலும் கலைஞர் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதால் ஈழப்பிரச்சனையில் தங்களுக்கு அக்கறை உள்ளது போல் காட்டிக் கொள்வதற்காக கலைஞரைப் பார்த்து 'ஈழத் தமிழர் நலனுக்காக பதவி விலக தயாரா?' என்று கேட்கிறார்கள், இதன் மூலம் கலைஞர் அக்கறை இல்லாதவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது, ஒரு வேளை கலைஞர் கோபப்பட்டு பதவியை தூக்கி எரிந்தால் தேர்தலில் தில்லுமுல்லு செய்து, சோ ராமசாமி மூலமாக யாரையாவது வளைத்து (வைகோ எப்பவுமே அனாதைதான்) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நப்பாசை ஜெவுக்கும், அவரை ஆதரிக்கும் மரம்வெட்டி கோமாளிகளுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவாரா?

இராஜிவ் காந்தி கொலையில் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பது போல் குற்றம் சுமத்திய போது, மறுத்து எதுவும் பேசாமல் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக கிடைத்த தேர்தல் தோல்வியில் துவண்டுவிடாமல் இருந்தது. தன் மீது விழுந்த வீன் பழியை எந்த மேடையிலும் சொல்லிக் காட்டி அனுதாபம் தேடாதது இதெல்லாம் தியாகம் இல்லையா? தான் குற்றமற்றவர், விடுதலை போராட்ட அமைப்புகள் தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர் வெளிப்படையாகவே சொல்லி இருக்க முடியும் தானே?

ஏன் சொல்லவில்லை. தானே அவ்வாறு சொன்னால் தமிழர் எவருமே ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வரமாட்டார்கள் என்ற உயர்ந்த எண்ணமே காரணம். தான் பேசாமல் இருந்துவிட்டால் அவர் கருத்தையே அக்கறை உள்ள பலரும் ஈழத்தமிழர்கள் குறித்த கருத்தாக பேசுவார்கள் என்பதே காரணம். அவர் வெளிப்படையாக பேசினால் அதை மலின அரசியல் ஆக்கி காங்கிரசிடம் ஆதாயம் அடைய முயல்வார்கள். அது தமிழ்நாட்டு நலனுக்கும், ஈழத்தமிழர் நலனுக்கும் கேடாக போய்விடும் என்பதாலேயே மெளனமாக இருந்தார், இருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவரா ?
முட்டாள்களின் எண்ணத்தில் இருப்பது ஈழத்தமிழர்களின் மீதான அக்கறையா? அல்லது கலைஞர் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியா?

வைகோவுக்கு வந்த கட்டளை பலன் தருமா

அ.தி.மு.க.வுடன் நெடுங்காலமாக கூட்டணி வைத்து இருக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோ இந்த தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் தனக்கு உரிய மரியாதை தரப்படாததோடு உதாசீனப்படுத்தப்படுவதாகவும் உணர்ந்தார். கூட்டணியை விட்டு விலகி வேறு அணி அமைக்கும் அளவுக்கு அவர் புறந்தள்ளப்பட்டார். ஆனால் திடீரென்று நான்கு சீட்டுகளுக்கு சம்மதித்து தொகுதி உடன்பாடு கண்டார். இதற்கு வைகோவுக்கு ஈழத்து உறவுகளிடம் இருந்து வந்த அன்புக்கட்டளை தான் காரணம் என்று வலைப்பூவில் எழுதுகிறார்கள்

இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட்டால் தான் இந்தியாவிடம் இருந்து எந்தவொரு உதவியும் எதிர்பார்க்க முடியும் அதனால் தான் வைகோ அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்று கூட்டணியில் தொடர்வதாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டது. அப்படியே தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தாலும் தான் விரும்பியது நடக்காவிட்டால் ஜெயலலிதா பா.ஜ.க.வை சும்மா விடுவாரா என்பது சந்தேகமே. அத்வானியை நியாபக மறதிக்காரர் என்று விமர்சித்தது இதே ஜெயலலிதா தான்

ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பு உலக பிரசித்தி. ஒருவேளை இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட்டால் தன்னை மீறி பா.ஜ.க. புலிகளுக்கு உதவி செய்ய ஜெயலலிதா அனுமதிப்பாரா என்பதும் சந்தேகமே

இறுதியாக ஒரு கேள்வி, அப்படியே ஜெயலலிதா உதவுவதற்கு முன் வந்தாலும் தொகுதி பங்கீட்டுக்கே அடுறா ராமா தாண்டுறா ராமா என்கிற ரேஞ்சில் எல்லா கரணங்களும் போட்டு தான் பெற வேண்டி இருக்கிறது, நாலு சீட்டுக்கே நானிக் குறுகி நிற்க வேண்டி இருக்கிறது, ஈழத்துக்கான உதவிகள் மட்டும் கேட்ட உடனேயே கிடைத்து விடுமா

எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் எது எழுதினாலும் படிப்பவர்கள் படிப்பார்கள் என்கிற எண்ணத்தில் பலரும் எழுதிவருகிறார்கள், அவர்கள் எண்ணம் நிறைவேறினால் நமக்கும் மகிழ்ச்சி தான். கேட்டவுடனேயே உதவிகள் கிடைக்கும் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தான்

இதே கருத்தை கோவியார் தனக்கே உரிய பாணியில் இங்கே அலசி இருக்கிறார்
கொஞ்சம் புலம்பல்

Saturday, April 11, 2009

தேர்தல் - முஸ்லிம்களுக்கு அல்வா

சில தினங்களுக்கு முன் ஒரு பதிவை பார்க்க நேரிட்டது முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்! என்றும் அதனால் இந்த தேர்தலில் தி.மு.க.வை புறக்கணிக்குமாறும் அந்த பதிவில் கேட்டுக் கொள்ளப்படிருந்தது. தி.மு.க.வுக்கு வாக்களிக்காவிட்டால் யார் வருவார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா?

தி.மு.க. தன் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடம் கொடுத்துள்ளது ஆனால் அ.தி.மு.க.வோ ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாததோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த்த எந்த ஒரு கட்சியையும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தன் கூட்டணியில் பல காலமாக இருக்கும் இருக்கும் முஸ்லிம் கட்சியானாலும் சரி தனக்கு வேண்டிய சீட் கிடைக்காததால் முறுக்கிக் கொண்டு போன ம.ம.க.வாகட்டும் அ.தி.மு.க. அவர்களை திரும்பி கூட பார்க்கவில்லை. ஏற்கனவே முஸ்லிம்களே இல்லாத அமைச்சரவையை நடத்திய பெருமைக்குரியவர் தான் ஜெயலலிதா

தி.மு.க.விடம் முறுக்கி கொண்டு போன எல்லா கட்சிகளின் நிலைமையையும் பார்த்தோம், கம்யூனிஸ்டுகளாகட்டும் வைகோவாகட்டும் எல்லோருமே கெஞ்சி கூத்தாடி தான் சீட்டுகளை பெற்றனர் அதுவும் அவர்கள் விரும்பிய சீட்டுகள் கூட கிடையாது. இதில் இருந்து தப்பித்தவர் ராமதாஸ் மட்டுமே அதுவும் அவர் வளர்த்து வைத்து இருக்கும் ஜாதி சங்கத்தால் மட்டுமே. அது இல்லை என்றால் அவருக்கும் இதே நிலை தான்

முஸ்லிம்களாகட்டும் ஈழம் ஆகட்டும் அல்லது வேறு யாரகட்டும் தமிழகத்தில் இரண்டே நிலைகள் தான் இங்கு ஏதாவது கிடைக்கும் அங்கு எதுவுமே கிடைக்காது. இங்கே தான் முறுக்கி கொள்ள முடியும் அங்கே போனால் சுருட்டிக் கொள்ள வேண்டும்